தீபம் வாசகர்கள்
அனைவருக்கும் வணக்கம்,
நாளாந்தம் அதிகரித்து வரும் வாசகர்கள்
மத்தியில் பயனுள்ள
கருத்துக்களுடன் தொடரும்
எமது கலைப்பயணத்தில் எம்மை அரவணைத்துச் செல்லும் அனுபவங்கள் இன்னும் பல நற்கருத்துக்களை உங்களுடன்
பகிர்ந்து கொள்ள
ஆவன செய்துள்ளதை அறியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
நாம் எழுதும்
கருத்துக்கள் தவறெனில்
அழித்துவிடலாம்.ஆனால்
நம் நாவினால்
உதிரும் சொற்கள்
தவறெனில் அவற்றினைப் பொறுக்கி மீள எடுத்துவிட முடியாது.
எனவே நம் நாவினை எவ்வளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோமோ அவ்வளவு
பல நன்மைகள்
கிடைக்க வழிவகுக்கும்.இல்லாது நாவினை
சுதந்திரமாக ஆடவிட்டால் உங்கள் சொற்களால்
பிறர் துன்பப்படலாம்,உறவுகள்-நண்பர்கள்
பிரியலாம்.வர இருந்த உதவிகள் இல்லாமல்
போகலாம்.மொத்தமாக
உங்கள் பெயருக்கு
இழுக்கு ஏற்படலாம்.இதனைத்தான் வள்ளுவனும்
''யாகாவாராயினும் நாகாக்க
காவாக்கல்
சோகாப்பர்
சொல்லிழுக்குப் பட்டு '' என்றான்.
எனவே பிறரைகாயப்படுத்தாத துய்மையான வார்த்தைகளோடு வசந்தமான
வாழ்வினை நோக்கிப்
பயணிப்போம்.
-தீபம்