மாசிக் கருவாடு |
இலங்கையில் மாசிக் கருவாடு எனப்படுவது, ஒரு சிக்கலான செயல் முறை மூலம் தயாரிக்கப்படுகின்ற ஒருவகைக் கருவாடு ஆகும். மாலைதீவுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற இவ்வகைக் கருவாட்டுக்கான மூலப் பொருள் ஸ்கிப்ஜாக் (skipjack) எனப்படும் ஒரு வகை மீன் ஆகும். மாலைதீவில்,உயிர்ச்சூழலுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படாத வகையில் மரபு முறையில் பிடிக்கப்படும் இம் மீன்கள்,
முதலில் அவிக்கப்படுகின்றன. பின்னர் புகையூட்டப்பட்டு வெய்யிலில் உலர்த்தப்படுகின்றன. இப் பதப்படுத்தலின் போது மீன்கள் நன்றாக உலர்ந்து கருஞ் சிவப்பு நிறம் கொண்ட மரக் கட்டைகள் போல் ஆகின்றன. இதனால், இவை நீண்ட காலத்துக்குச் சேமித்து வைத்துப் பயன்படுத்தக் கூடியவையாக ஆகின்றன. சேமித்தலின் போது இவற்றைக்குளிரூட்டிகளில் வைக்கவேண்டியது இல்லை.
இது பொதுவாகக் கறிகளில் முதன்மைச் சேர்பொருளாகப் பயன்படுவதில்லை. வேறு காய்கறிகளுடன் ஒரு துணைச் சேர்பொருளாகவே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் மணமும், சுவையும் இதன் சிறப்பு அம்சங்களாகும்.
இலங்கையில், சிறப்பாகச் சிங்களவரால் விரும்பி உண்ணப்படும் மாசிக் கருவாடு, அவர்களுடைய சமையலில் முக்கியமான சேர்பொருள்களில் ஒன்றாக விளங்குகின்றது.
No comments:
Post a Comment