வருகிறது- கண்ணீர் வரவழைக்காத வெங்காயம்.

கண்ணீர் வரவழைக்காத வெங்காயத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சமையலில் பெரும் பங்கு வகிக்கும் வெங்காயம், அதை உரிப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது.
கண்ணீர் 
கண்ணீர்
 வெங்காயத்தில் உள்ள  கந்தக அமிலம் தான் கண்ணீரை வரவழைக்கிறது. கந்தக அமில தன்மையில் மாற்றம் செய்து, புதுவகை வெங்காயத்தை உருவாக்கியுள்ளனர். இந்த புது வகை வெங்காயம் கண்ணீரை வரவழைக்காது. பூண்டில் உள்ள அனைத்து குணங்களும், புது வெங்காயத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை, பூண்டுக்கு உண்டு. அந்த குணங்கள், புது வெங்காயத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதய சம்பந்தமான நோய்கள் தவிர்க்கப்படும். உடல் எடையும் குறையும் எனறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வெங்காயம் எப்போது சந்தைக்கு வரும் என்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

No comments:

Post a Comment