உலகிலே மிக நீளமான நேரான
வீதி
உலகிலே
மிக நீளமான நேரான வீதி
கனடாவின் யொங் வீதியாகும்.
இதன்
நீளம் 1896 கிலோ மீற்றர்கள். ரொறோன்ரோவில்
ஒன்ராரியோ ஏரியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த வீதி ஒன்ராரியோ
வடக்கில் சிம்கோ ஏரியில் முடிவடைகிறது.
1790 ஆண்டு நிறூவப்பட்ட இந்த யொங் வீதி
கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையை நிலை
நாட்டியுள்ளதரொறொன்ரோ நகரை கிழக்கு,மேறகாகப்
பிரிக்கும் வீதியும் இதுதான்.
உலகிலே மிக நீளமான மலைபாம்புகள்
ஆப்பிரிக்காவின்
தென் பகுதியில் காணப்படும் அதிபயங்கர மலை (African rock pythons) பாம்புகள் தான் உலகிலே மிக
நீளமான மலைபாம்புகள் ஆகும், இவற்றின் கூரிய
பற்களும் சர்வ சாதாரணமாக எந்த
ஒரு காட்டு விலங்கினையும் சுருட்டி
கொல்லும் திறனுடைய இந்த பாம்புகளை வேட்டையாடும்
முறையே வித்யாசமாக இருக்கிறது.
இவர் தான் உலகின் மிக நீளமான வாய்க்குச் சொந்தக்காரர். பிரான்ஸிஸ்கோ டொமிங்கோ ஜோகியம் என்பது இவரின் பெயர்.
பெயரைப் போலவே வாயும் நீளம். இவரின் வாய் இப்போது உலக சாதனை. 30 வயதான இவரின் வாயின் நீளம் 17 சென்ரிமீட்டர்.
நீளமான வாய் காரணமாக இப்பேது இவரை நிறைய விளம்பர வாய்ப்புக்கள் தேடிவருகின்றன. இவரின் சொந்த நாடான அங்கோலாவில் பிரபல்யம் அடைந்துவிட்டார்.
பணக்காரனாக வேண்டும் என்ற தனது கனவு விரைவில் நனவாகிவிடும் என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றார் ஜோகியம்.
உலகில் பிரபல்யம்-கொடுக்கை புளி
காசினியா குயிசீடா Garcinia quaesita என்பதை சிங்களத்தில குரக்காய் என்றும் தமிழில் கொடுக்கை புளி எனவும் அறிமுகப்படுத்தப்படும் இது குளுசியேசியா Clusiaceae குடும்பத்தை சேர்ந்தது இது இலங்கையின் உள்ளூர் வெப்ப மண்டல மழைக் காடுகளில் இயற்கையாக காணப்படும் ஒரு நடுத்தர பசுமையான நிழல் நேசிக்கும் ஒப்பீட்டளவில் மெதுவாக வளர்கன்ற ஒரு மரமாகும். இந்த மரமானது சிறிய அளவு முதல் நடுத்தர அளவு வரை கிடை மட்டமாகவோ அல்லது தொங்கிய கிளைகளுடனோ காணப்படலாம். இலங்கையில் குரக்காய் சமையலின் போதும் மற்றும் மருத்துவ தேவைப்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. எடையை குறைப்பதற்கும் மற்றும் பசியை கட்டுப்படுத்துவதற்கும் உணவு நிரப்பியாக காணப்படுவதன் காரணமாக உலகில் பிரபல்யம் வாய்ந்த வாசனைத் திரவியம் ஒன்றாக தற்போது பிரபல்யம் அடைந்து வருகின்றது. குரக்காய் எனும் மரம் பழமரமாக பயிரிடப்பட வில்லை ஆனால் ஈரவலய மற்றும் இடைவெப்பவலய வீட்டுத் தோட்டங்களில் பணப் பயிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-தொகுப்பு: செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment