நீரிழிவின் முன்நிலை (Prediabetes) என்பது முழுமையான நீரிழிவு தொடங்குவதற்கு முந்திய கட்டமாகும்.இந்த நிலையில் உள்ளவர்கள் பொருத்தமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம். அல்லது அதுவராமல் நீண்டகாலம் தள்ளிப்போடலாம் என்பது இப்பொழுது ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது. இரவு உணவு உட்கொண்டபின் காலை வரை எதுவும் உட்கொள்ளாமல் இரத்தப் பரிசோதனை செய்யும்போது, சீனியின் அளவு (Fasting blood sugar) 110 முதல் 126 வரை இருந்தால் `நீரிழிவின் முன்நிலை' எனலாம். இந்த நிலையில் உள்ளவர்கள் பொருத்தமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம். அல்லது அதுவராமல் நீண்டகாலம் தள்ளிப்போடலாம் என்பது இப்பொழுது ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது. உங்களுக்கு `நீரிழிவின் முன்நிலை' இருக்குமாயின் அது நீரிழிவு நோயாக மாறாமல் தடுப்பதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. முதலாவது வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் குருதியில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்துவது இரண்டாவது மருந்துகள் உட்கொள்வதன் மூலம் செய்வது. வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பன எவை?
இவற்றை ஒழுங்காகக் கைக்கொண்டால் அவருக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு 43 சதவிகிதத்தினால் குறைகிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதில் முக்கியமான விடயம் என்னவெனில், வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடிக்கின்ற காலம் வரைதான் நீரிழிவு வருவதற்கான சாத்தியம் குறையும் என்பதில்லை. அவற்றைக் கைவிட்ட பின்னரும் கூட அது நீடிக்கிறது. உதாரணமாக இந்த ஆய்வு ஏழு வருடங்களுக்குச் செய்யப்பட்டது. வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடித்த நான்கு வருடங்களுக்கு மட்டுமல்ல அவற்றைக் கைவிட்ட பின்னரும் கூட மேலும் 3 வருடங்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு குறைந்திருந்தது என்பது நம்பிக்கை அளிக்கும் முடிவாகும். வாழ்க்கை முறை மாற்றங்களைச் செயற்படுத்த முடியாதவர்களுக்கும் அவற்றை ஓரளவு கடைப்பிடித்தும் குருதியில் சீனியின் அளவைக் குறைக்க முடியாதவர்களுக்கும் மருந்துகள் உதவக்கூடும். மெட்போமின் (Metformin), அகாபோஸ் (Acarbase), ரொஸிகிளிட்டசோன் (Rosiglitazone) ஆகிய மாத்திரைகள், நீரிழிவு வராமல் தடுப்பதற்கு உதவுகின்றன. இதுவும் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, நீரிழிவு வரவாய்ப்புள்ளவர்கள், மேற்கூறியவற்றில் ஒரு முறையை வைத்திய ஆலோசனையுடன் கடைப்பிடிப்பது உசிதமானது. அத்துடன், பிரஸர் இருந்தால் அதற்கு உபயோகிக்கும் மருந்துகளையும் அவதானமாகத் தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில், அடலோல் (Atenolol), எச்சிடி (HCT) ஆகியனவும் அவை சார்ந்த மருந்துகளும் நீரிழிவு வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கக்கூடும். |
நீரிழிவின் முன் தடுப்பது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment