மனித உடல் உறுப்புகள் மற்றும் ஒவ்வொரு திசுவும் வளமுடன் செவ்வனே செயல்படுவதற்கு ரத்த ஓட்டம் தேவை. ரத்தத்தில் இருக்கும் பிராண வாயுவும் உடலுக்குத் தேவையான மற்ற சத்துப் பொருள்களும் ரத்தத்தின் மூலமாகத்தான் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தலையிலிருந்து பாதம் வரை ரத்தம் சீராகச் செயல்படும் வகையில் இதயம் செயல்படுகிறது. ரத்த ஓட்டம் ஒரு நிலையான அழுத்தத்தோடு இதயத்திலிருந்து வெளிப்பட்டு பல லட்சக் குழாய்கள் மூலம் உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த அழுத்தத்தைத்தான் "ரத்த அழுத்தம்' (Blood Pressure) என்று கூறுகிறோம்.
ரத்த அழுத்தம் என்பது நோய் அல்ல. அதிக ரத்த அழுத்தம்தான் நோய். ரத்த அழுத்தத்தின் உயர் அளவை "சிஸ்டாலிக்' (systolic)என்றும் கீழ் அளவை "டயாஸ்டாலிக்' (diastolic)என்றும் டாக்டர்கள் குறிப்பிடுவார்கள். இதயம் சுருங்கி இதயத்திலிருந்து ரத்தம் விசையாக வெளியே வரும் போது உள்ள அழுத்தம் "சிஸ்டாலிக்' (உயர் நிலை ரத்த அழுத்தம்) ஆகும்.
இதயம் விரிவடைந்து தன்னுள் ரத்தத்தை கிரகிக்கும் போது உள்ள அழுத்தம்
"டயாஸ்டாலிக்' (கீழ் நிலை ரத்த அழுத்தம்) ஆகும். பொதுவாக "சிஸ்டாலிக்' அழுத்தம் 100 முதல் 130 வரை இருக்கலாம். "டயாஸ்டாலிக்' அழுத்தம் 70 முதல் 85 வரை இருக்கலாம்.
ரத்த அழுத்த அளவுகள் அதிகமாகும்போது உயர் ரத்த அழுத்த நோய் ஆரம்பிக்கிறது. அதாவது, "சிஸ்டாலிக்' (உயர் நிலை ரத்த அழுத்தம்) 130 எம்எம்எச்ஜி-ம், "டயாஸ்டாலிக்' (கீழ் நிலை ரத்த அழுத்தம்) 85 எம்எம் எச்ஜி-ம் இருந்தால் உயர் ரத்த அழுத்த நோயின் ஆரம்பக் கட்டம் என்று கொள்ளலாம். இதை "ப்ரீ - ஹைபர்டென்ஷன்' என்று கூறுகிறோம்.

0 comments:
Post a Comment