முத்துக்குளித்தல்(Pearl hunting) அல்லதுமுத்தெடுத்தல் அல்லது முத்து வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பி மெல்லுடலிகளிலிருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின்மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும்.இவ்வாறு சேகரிக்கப்படும் இயற்கை முத்துகள் விலை மதிப்பு மிக்க ஒன்பது இரத்தினங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
சிலாவத்துறை முத்துக்குளித்தல் வரலாறு
எகிப்தியப்; பேரழகியும், அரசியும் ஆகிய ‘கிளியோப்பட்ரா காதினிலே’ அணிந்திருந்த காதணியில் முசலிக் கடலில் இருந்து பெறப்பட்ட முத்து பதிக்கப்பட்டிருந்ததாக வரலாறு கூறுகின்றது. இதனால் எமது முசலி பிராந்தியத்திற்கு ஒரு பெரும் புகழாக இருந்தது.
போக் 1888 என்பவரின் கருத்தின்படி ஒல்லாந்தரால் 1661, 1667, 1746, 1748, 1749, 1753, 1754, 1768ம் ஆண்டுகளில் இங்கு முத்துக்குளிப்பு இடம் பெற்றுள்ளது.கௌடில்யரின் கருத்துப்படி கி.மு 3ம் நூற்றாண்டுகளில் இங்கிருந்து பெறப்பட்ட முத்துக்கள் இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த மகரப் பேரரசுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏனைய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன என்று அறிய முடிகிறது.13ம் நூற்றாண்டில் காயல் பட்டினம் சிறந்த பொருளாதார சிறப்புடன் விளங்கியுள்ளது. மன்னாரில் பெறப்பட்ட முத்துக்கள் இங்கு கொண்டு செல்லப்பட்டு ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. வெனிசிய அறிஞர் மார்க்கோபோலோ சொல்கிறார் 14ம் நூற்றாண்டில் மலையாளக் கரையில் உள்ள யூர்பட்டினம் சிறந்து விளங்கியது. இங்கு அதிகமாக மன்னார் முத்துக்கள் விற்கப்பட்டுள்ளதாக இவர் கூறியுள்ளார்.
மொறோக்கோ யாத்திரிகர் இபுனு பதூதா, தான் இலங்கையில் கரை இறங்கிய போது ஆரியச் சக்கரவர்த்தியின் கட்டுப்பாட்டில் இருந்த முத்துச் சலாபத்திற்கு அண்மையில் உள்ள ‘பட்டாள’ நகரில் மரத்தால் செய்யப்பட்ட அடுக்கு மாளிகையில் தான் தங்கியதாகவும், அண்மையில் முத்துக்கள் குவிக்கப்பட்டிருந்ததையும் அதை அதிகாரிகள் தரம் பிரித்ததையும் , கண்டதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் வளைகுடாவினது முத்துப்படுக்கைகள் (முத்துச்சிப்பிக்கள் காணப்படுகின்ற இடங்கள்) தொடர்பாக கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலுள்;ள வரலாற்றுப் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியா, பேர்ஸியா மற்றும் அரபியா ஆகிய நாடுகளிலிருந்துவந்த வர்த்தகர்கள் இந்த முத்துப்படுக்கைகளை உடைமை கொள்வதற்காக சண்டையிட்டும் உள்ளனர். 1294ஆம் ஆண்டு மார்க்கோ போலோ மன்னார் வளைகுடாவுக்கும் வந்துள்ளதுடன், அறுவடைக்காலத்தில் அங்கு கிட்டத்தட்ட 500 கப்பல்களும் படகுகளும் சுழியோடிகள் மற்றும் வர்த்தகர்களுடன் முத்துக்களைத் தேடி வந்திருந்தாக குறிப்புக்கள் கூறுகின்றன. தாம் உழைத்துக்கொண்டதிலிருந்து 10 சதவீதத்தினை மன்னனுக்கு செலுத்த வேண்டியும் இருந்தது.
காலனித்துவக் காலப்பகுதியின்போது 16ஆம் நூற்றண்டு தொடக்கம் அரசாங்கத்துக்குச் சொந்தமான முத்துப்படுக்கைகள் சுழியோடிகளுக்கும் வாத்தகர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஆயினும் 1881ஆம் ஆண்டளவில் முத்து அகழ்வுத்தொழில் 67 வருடங்களாக வெற்றிகரமாக இருந்துவந்தபோதிலும் அடுத்த வருடம் விநியோகிப்பதற்கு சிப்பிகள் இல்லாமல் போனதை அரசாங்கம் அவதானித்திருந்தது. 1924ஆம் ஆண்டளவில் முத்து அகழ்வுத்தொழிலை ஒழுங்குபடுத்துகின்ற சட்டமொன்றை அமுலுக்கு கொண்டுவந்தது. இருப்பினும் அங்கு முத்துச் சிப்பிகள் எதுவுமே இல்லாதபோது அச்சட்டம் மிகவும் தாமதமானதாகவே வந்திருந்தது.
பிரித்தானியர் மார்ச் 1828 – மே 1832, 1796 – 1887 வரை பாரிய முத்துக்குளிப்பில் ஈடுபட்டனர். (30 தடவை) இதன் ஊடாக 4372985 ஸ்ரேலிங் பவுன் வருமானம் பெற்றுக் கொண்டனர். இதனாலேயே பிற்காலத்தில் முத்துக்குளித்தல் துறை பாதிக்கப்பட்டது.
புpரித்தானியரின் வருமானத்திற்கு முத்து பாரிய பங்களிப்பைச் செய்தமையால் அத்தொழிலைக் கண்காணிப்பதற்காகவும், வரி அறவிடுவதற்காகவும் பிரித்தானிய பிரதமரின் மகன் ஆளுனர் ப்ரெட்றிக் நோத் அவர்களால் ‘டொரிக்’ எனப்படும் 3மாடிக் கட்டிடம் சிலாபத்துறை அரிப்பு வீதியில் களிமண் ஓடைக்கு மேற்காகவும், வீதிக்கு தெற்கிலும் கடற்கரைப்பக்கமாக அமைக்கப்பட்டது. இக்கட்டிடம் அமைக்கும் போது கடல் தூரத்தில் இருந்ததாக அறிய முடிகின்றது. இன்று இக்கட்டிடம் கடல் அலையால் மோதப்பட்டுக் கொண்டுஅழிவின்விளிம்பில்உள்ளது.
இக்கட்டிடத்தை இப்பிரதேச மக்கள் அல்லிராணிக் கோட்டை எனவும் அழைக்கின்றனர். இக்கட்டிட ஆரம்ப வைபவத்தில் இவரும் குடை பிடித்த வண்ணம் காட்சி தருவதை அங்கு நடப்பட்டுள்ள புகைப்படத்தில் காணக்கூடியதாகவுள்ளது. இக்கட்டிடத்தின் சாயல் கிரேக்க கட்டிட அமைப்பில் உள்ளது.
1960ல் சிலாபத்துறையில் நோர்த் ஸ்டார், கனேடியன் ஆகிய படகுகள் மூலம் இலங்கை அரசு முத்துக்குளித்தலில் ஈடுபட்டது. இதுவே, முசலிப்பிரதேச இறுதி முத்துக்குளிப்பாகும்.
முத்துடன் இப்பிரதேச மக்களுக்கு இருந்த பரிட்சயத்தின் காரணமாக முத்து என்ற சொல் இப்பிரதேச மக்களின் பெயர்களுடனும், கிராமப்பெயருடனும் இணைத்திருப்பதைக் காணமுடிகின்றது. (உ-ம்) தங்கமுத்து, பாத்துமுத்து, , முத்துக்குட்டிவிதானையார், முத்து மரைக்கார், முத்து, முத்துச்சிலாபம், முத்தரிப்புத்துறை என்பதனைக் காணலாம்.

முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலைக்குழி, கொண்டச்சி, சிலாவத்துறை, பொற்கேணி, வேப்பங்குளம், பூநொச்சி, நாலாம் கட்டை, இலந்தைக்குளம், பண்டாரவெளி, மணக்குளம் போன்ற பிரதேசங்களில் உள்ள முஸ்லீம்களில் குறிப்பிட்ட சிலர் கடலுடன் தொடர்புபட்ட அட்டை பிடித்தல்,சங்கு குளித்தல் போன்ற நிகழ்வுகளில் இன்றும் ஈடுபட்டிருப்பதையும் அறியக் கூடியதாக உள்ளது. இதனைப்பார்க்கும் போது அன்று செல்வம் கொளிக்கும் தொழிலாக இருந்த முசலிப்பிரதேச முத்துக்குளித்தல் நிகழ்வு மனக்கண் முன் வருகிறது.
முத்துக் குளிக்கும் பார்கள் மன்னாரில் மேற்குக் கரைகளில் அதிகம் இருந்து உள்ளன. உதாரணம்: மறிச்சுக்கட்டிபார், கொண்டச்சிபார், அரிப்புபார் சிலாபத்துறைபார். முசலிப் பிரசேத்தில் வருடாவருடம் சித்திரை, வைகாசி மாதங்களில் முத்துக் குளித்தல் நடைபெற்றுள்ளது. இதற்குரிய ஆயத்தங்கள் பெப்ரவரி மாதம் முதல் செய்யப்படுவது வழக்கம். இதில்; இத்தொழிலுடன் தொடர்புபட்ட அடிப்படைவசதிகளான மருத்துவ வசதிகள், வாடிகள், ஓய்வு விடுதிகள், களஞ்சிய அறையமைப்பு,கடைகள் இங்கு நடை பெறும் முத்துக்குளிக்கும் அழகிய கைத்தொழிலைப் பார்வையிட உள்ளுர், வெளியூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் போன்றோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பார்வையிட்டுள்ளாக அறியக் கிடைக்கிறது.

முத்துச் சேகரித்தல்
முத்துச் சிப்பிகளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது பெறப்படுவனவற்றிலேயே அதிசிறந்த முத்துக்கள் காணப்படும். நல்ல தரமான அரிய வகையான மூன்று அல்லது நான்கு முத்துகளை பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டன் சிப்பிகள் சேகரிக்கப்பட வேண்டும். வருடத்தில் எல்லா மாதங்களிலும் முத்துக் குளித்தல் நடைபெறுவதில்லை. மார்ச் திங்களே இதற்கு உகந்ததாகக் கருதப்படுகின்றது.
முத்தெடுக்கும் முறை
சிப்பிகளைச் சேரிப்பதற்காக இடுப்பைச் சுற்றி பையொன்றைக் கட்டிக்கொள்வார்கள். நீரில் மூழ்கும் போது சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக் களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போடப்படும். அதேவேளை தோணியில் இருப்பவர் முத்துக் குளிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.மேலே வந்தவர் தோணியில் இருப்பவரிடம் தான் சேகரித்த முத்துச் சிப்பிகளை ஒப்படைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் முத்துக் குளிக்கக் குதித்துவிடுவார். முத்துக் குளிக்கும் பணிமுடிவுற்றதும் சிப்பிகளைக் கடற்கரையில் கொட்டி ஏலத்தில் விற்பனை செய்வார்கள். சில நாட்களின் பின்பு சிப்பிகளை ஒவ்வொன்றாகத் திறந்து நன்றாகக் கழுவி முத்துக்களை வெளியில்எடுப்பார்கள்.
முத்தின்வகைகள்:
1. ஆணி,2. கனதாரி, 3. மக்கை, 4. மடக்கு, 5. குறவில்,6. களிப்பு, 7. பீசல், 8. குறல் 9. தூள் 10. ஓட்டு முத்து.
1. ஆணி,2. கனதாரி, 3. மக்கை, 4. மடக்கு, 5. குறவில்,6. களிப்பு, 7. பீசல், 8. குறல் 9. தூள் 10. ஓட்டு முத்து.
இன்றைய நிலை:
இயற்கைச் சுற்றாடலை சாதாரணமாக மிக அதிகமாகவே மனிதன் பயன்படுத்துகிறான். விலங்கினங்களும் தாவரங்களும் வளரவும் பெருகவும் வேண்டும். ஆயினும்; சிலவேளைகளில் இத்தகைய விலங்கினங்களும் தாவரங்களும் பெருகவும் வளரவும் சந்தர்ப்பமளிக்கப்படாமல் மனிதனால் பிடிக்கப்பட்டு அல்லது அறுவடை செய்யப்பட்டு விடுகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடைபெறும்போது, அடுத்த தடவை பிடிப்பதற்கோ அல்லது அறுவடை செய்யவோ போதுமானளவுக்கு அவை கிடைக்காதுபோகின்றன. இவ்வாறாக நீண்ட காலத்துக்கு மிக அதிகமானளவுக்கு இவை எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தால் இறுதி விளைவாக எதுவுமே எஞ்சியிராமல் அல்லது சொற்ப அளவே எஞ்சியிருக்கும். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக மன்னார் வளைகுடாவின் முத்து அகழ்வுகள் மிக அதிகமானளவுக்கு நடைபெறுவதனை கூறலாம்.
No comments:
Post a Comment