நமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இச்சொற்களின் சரியான அர்த்தம் என்னவென்று விளக்கமே இல்லாமல், நம் முன்னோர்கள் சொன்னார்கள், ஆகவே அது சரியாய்த்தான் இருக்கும் என்ற முடிவுடன்,கிளிப்பிள்ளைபோல் நாங்கள் பேசித்திரிவது வழக்க்கமாய் போய்விட்டது. சரி, இந்தக் குணங்களின் அர்த்தம்தான் என்ன? ஒருமுறை கிளறி அறிவோமா? அறிந்ததும் பலர் வியப்பில் ஆழ்வீர்கள்!
அச்சம்:
பெண் பயப்பட்டுக் கொள்ள வேண்டுமாம். எல்லா விடயங்களிலுமா? கருத்து சொல்கிறார்கள், அச்சம் கொள்ள வேண்டியவற்றிற்கு மட்டும் அச்சம் கொள்ளவேண்டும் என்று. உதாரணமாக, ஒரு களவு செய்ய, பொய் சொல்ல அச்சம் கொள்ளவேண்டும். ஆஹா! நல்ல புத்திமதிதான்!
அப்படி என்றால், ஆண் மட்டும் அச்சப்பட வேண்டியவற்றிற்கு ஒதுங்கி இருக்காமல், மோட்டுத்தனமாக உள் நுழைதல் ஆணுக்கு ஏற்ற நல்ல குணமா? அவன் களவும் பொய்யும் சொல்லலாமா?
மடம்:
பெரியோர், அதாவது மூத்தோர், பெற்றோர், கணவன் ஆகியோர் காட்டும் வழியில் தவறாது செல்லும் மனப்பாங்கு. அவள் எவ்வளவு அறிவு ஜீவியாய் இருந்தாலும், தனது சுய புத்தியை ஒருபோதும் பாவிக்காது, ஒரு முட்டாளாட்டம், பெரியோர் என்ன செய்யச் சொல்லிப் பிதற்றினாலும், தட்டாது மனப்பூர்வமாகச் செய்து முடிப்பவளே ஒரு பூரணமான பெண்ணாம்!.
அப்படி என்றால், ஆண் மடம் உள்ளவராய் இருக்கத் தேவை இல்லையா? அவன் பெரியோர் சொல் கேட்கத் தேவை இல்லையா?
நாணம்:
வெட்கப்படுதல். எதன்பால் வெட்கப்படுதல்? பலர் முன் நிற்கவா அல்லது வீட்டில் உள்ள கணவன் மற்றும் பெரியோர்களுக்கா? அன்றேல் எதைக் கண்டாலும் வெட்கப்படுவதா? யார் அறிவர்!பொருள் கூற வரும் கல்விமான்கள் அவள் செய்த பிழைகளைக் கண்டு வெட்கப்படுதல் என்றும் விளக்கம் கொடுப்பார். அல்லது உடைக் குறைவையும் சுட்டிக்காட்டலாம். அல்லது, வெட்கப்பட வேண்டியவற்றிற்கு மட்டும் வெட்கப்படவா? எதுக்கோ அவள் வெட்கப்பட்டுப் போகட்டும்!
அப்படி என்றால், ஆண்கள் மட்டும் ஒன்றுக்குமே வெட்கப்படாமல் படு ஜோராய்ச் சுற்றித்திரியலாமா?
பயிர்ப்பு:
இது ஒரு விளங்காத சொல். இதன் சரியான பொருள் அருவருப்பு, அசுத்தம்! இது பெண்ணைக் கற்போடு வைத்திருக்க ஆணின் ஒரு சூட்சும வழி.பெண் அருவருப்பான தோற்றம் உள்ளவளாய்-சில வேளை கணவரைத் தவிர்ந்த மற்றையோர் பார்வையில் அசுத்தமானவளாய்- இருக்க வேண்டுமோ? (நல்ல காலம், முஸ்லிம் பெண்களின் ஆடை அக்காலத்தில் இல்லை,பெண் தப்பினாள்). ஆனால், இன்னொரு விளக்கம்தான் சரியெனக் கூறுவர். பெண், தனக்குப் பழக்கம் இல்லாதவர்பால், முக்கியமாக ஆடவர் பால், கட்டாயமாக, காம நோக்கம் கொண்டோர்பால் அருவருப்புக் கொண்டு விலகி இருக்க வேண்டும் என்பது. அதாவது, ஆணுக்குப் பயம் பெண் வேறு ஆண்களைத் தொட்டுப் போடுவாள்; கற்பு போய்விடுமே என்று.
அப்படி என்றால், ஆணுக்கு மட்டும் பயிர்ப்பு தேவை இல்லை. அவன் எத்தனை பிற பெண்களுடனும் (ஆண்களுடனும்?) கூடி உல்லாசம் காணலாமா?
இந்த நாற்குணங்கள் கதை எல்லாம் பெண்ணை அடிமையாக வைத்திருந்த ஆணாதிக்கத்தின் எச்சங்கள். இவை பெண்ணுக்கு என்றால் அது ஆணுக்கும் பொருந்த வேண்டும். இவற்றின் உண்மையான விளக்கங்கள் மிகவும் கீழ்த்தரமாய் இருந்தாலும், பழம் பெருமை பேசுவோர் தற்கால ஒவ்வாமைக்கு அஞ்சி, திரிவு படுத்த பட்ட விளக்கங்கள் கூறி நியாயப் படுத்திக் கொள்ளுவார்கள்.
மணமான பெண்ணை விட்டுக் கணவன் போய் விலைமாதருடன் இருந்தாலும், எத்தனை வருடங்கள் ஆனாலும் அவன் திரும்பி வரும்வரை கற்பைக் காத்து வைத்திருப்பவள் சரித்திர நாயகி! தெய்வம்!. தனது நொண்டிக் கணவனின் காம இச்சையைத் தணிக்க விலைமாதரிடம், ஒரு கூடையில் வைத்து சுமந்து கொண்டு சென்றவள் பத்தினி. பரத்தைகளுடன் காலம் கழித்தவன் கதா நாயகன். அவனைப் பற்றி இழிவாகச் சொல்ல மாட்டார்கள்.
ஆகவே, நம் முன்னோர் சொன்னார்கள், ஆகவே எல்லாமே சரி என்று ஆமாம் போட்டு வாழாது, கொஞ்சம் சுயபுத்தியையும் சேர்த்துச் சிந்தித்துச் செயல் படுத்தல் நவீன தமிழனின் தேவையாகும்.
முடிவில், நல்லது என்று நாம் நினைத்திருந்த நாலு குணங்கள்தான் தற்போது நம் தமிழ் பெண்களிடம் இல்லாமல் போய்விட்டதே! மாறாக, வாழ்வுக்கு ஒவ்வாத, சந்தோசத்தைக் குலைக்கும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் பல நவகால (துர்க்) குணங்கள் எங்கள் பெண்கள்பால்,அவர்கள் வாழ்வில், படிப்பில், உழைப்பில், உடுப்பில், நடிப்பில் ஒட்டிக்கொண்டு விட்டதே! அவை என்ன என்று இன்னொரு முறை சம்பாஷிப்போம்.
ஆக்கம்:செல்லத்துரை சந்திரகாசன்
(இத் தலைப்பின் சம்பந்தமாக மேலும் வாசிப்பதற்கு 14,அக்டோபர்.2013 ற்கு செல்லுங்கள்.)
வள்ளுவனாக இருக்கட்டும்,பெண்களான அவ்வையார்களாக இருக்கட்டும் பெண்ணுக்கு மட்டுமே புத்தி சொல்லிச் சென்றார்கள்.ஆண்கள் பாவங்கள்.
ReplyDeleteஉண்மை தான் சற்றே சிந்திக்க வேண்டிய விசயம்
Deleteஉண்மை தான் சற்றே சிந்திக்க வேண்டிய விசயம்
DeleteSiva
ReplyDeleteAt last some one thinking in a right way.
they didn't tell only to girls. all our elders told that every things for our well fair only. they are not enemy for girls they told that gents should have the four characters. that is than , orppu , nirai and kadaipidi. girls are only looking for their safety and their convenience. just mind one thing that our elders are very intelligent. they used a lot of things in very manner and showed a good way to us. but we are not willing to follow because we are thinking that we are the intelligent then our elders.
ReplyDeletei am sorry to say this. but the face is that u r trying to show of that u are intelligent then our elders. our elders are not fools to blaber something without knowing the fact.
ReplyDeleteநம் மூதாதையர்கள் என்ற காரணத்திற்காக எல்லோருமே மிகவும் புத்திசாலிகள் என்று முடிவு கட்டுதல் ஆகாது. பெரும்பாலான அறிவுரைகள் இன்றைய சூழலுக்கு ஒத்துப் போகாது.
ReplyDeleteஅத்தோடு, தற்போதைய மக்கள் எத்தனையோ மடங்கு அறிவு படைத்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும், இன்னும் 500 வருடங்களுக்குப் பின்னர் வாழும் மனிதர்களோடு பார்க்கும்போது இன்றைய நாங்கள் படு முடடாள்கள்!
ஆண்களின் நாற்பண்புகள்
ReplyDeleteஅறிவு
நிறை
ஓர்ப்பு
கடைபிடி
உங்கள் ஆக்கம் முட்டாள் தனமானது.
ReplyDeleteமூதாதையரின் அறிவோடு உங்களின் அனுகுமுறை கண்டிக்கத்தக்கது.
அது சரி, இந்த ஆண்களுக்கான குணங்கள் பெண்களுக்குத் தேவை இல்லையா என்பதுதான் என் கேள்வி. பெண்கள் தொடர்ந்து அச்சத்தோடும், மடத்தோடும், நாணத்தோடும், பயிர்ப்போடும் சமூகத்திலிருந்து ஒதுங்கியே வாழ வேண்டுமா?
ReplyDeleteபயிர்ப்பு என்பதன் அர்த்தம் என்ன??
ReplyDeleteஅருவருப்பு என்பது பொருள்
Deleteகவி பாடும் ஆண்கள் இளவயதில் பெண்களைப்பற்றி பலவாறு எழுதுவார்கள்,ஆனால் அதே ஆண்களை வயது போனபின் எழுதச் சொன்னால் எல்லாமே எதிர் மாறாகவே இருக்கும்.உந்த அச்சம் முதல் அனைத்துமே இன்று இல்லை,முந்தி இருந்ததோ என எனக்கு தெரிய வாய்ப்பும் இல்லை.இருக்கவேண்டும் என கூறவும் இல்லை.மனிதர்கள் பலவிதம்,பலவாறு இருப்பர்.சிலரிடம் சில இருக்கும்,இராது அதுவே வழமை.
ReplyDeleteதவறான விளக்கம்,அது சரியானதாகவே இருந்தாலும் சொல்லப்பட்ட விதம் சரியாக இல்லை... ஏற்று கொள்ளும் படி இல்லை...
ReplyDeleteஎந்த பெண்ணும் முழுமையான பெண் அல்ல. எந்த ஆணும் முழுமையான ஆண் அல்ல. பெண்ணினில் ஆணும் ஆணினில் பெண்ணும் கலந்தே நிதர்சன உலகில் நடமாடுகிறோம். எப்படி ideal machine களுக்கு வகுக்கப்பட்ட விதிகளும் வரைமுறைகளும் நடைமுறைக்கு பொருந்தாதோ அப்படித்தான் இதை பார்க்க வேண்டும். இது என்னுடைய கருத்து. மேலும் நாம் அன்றாட வாழ்வில் வெறும் ஆணாகவோ பெண்ணாகவோ மட்டுமே வாழ்வது இல்லை. மருத்துவராகவோ ஆசிரியராகவோ அரசியல்வாதியாகவோ எழுத்தாளராகவோ நடிகர்களாகவோ கீழ்நிலை பணியாளராகவோ உதவியாளராகவோ இருக்கிறோம் இந்த நிலையில் ஆணுக்கான நான்கு குணங்களையோ பெண்ணுக்கான குணங்களையோ வேறு குணங்களையோ சூழலுக்கேற்ப பயன்படுத்துகிறோம். இந்த நான்கு குணங்களோ அந்த நான்கு குணங்களோ அனைத்தும் நல்ல குணங்களே ஏற்ற இடத்தில் பயன்படுத்தினால். ஒரு மருத்துவமனையில் மருத்துவரை பாருங்கள் ஆணையோ பெண்ணையோ பார்க்காதீர்கள். ஆணையோ பெண்ணையோ எங்கு காண்பீர்களோ அங்கு மட்டும் காணுங்கள். அங்கும் உங்கள் மறுபாதியின் ஆண்தன்மைக்கும் பெண்தன்மைக்கும் மதிப்பும் சுதந்திரமும் கொடுங்கள். உங்கள் ஆணையோ பெண்ணையோ வரையறுத்து மதிப்பிடுகையில் அவர்கள் இறுகிவிடுவார்கள் அங்கு எப்படி முழுமையான புரிதல் ஏற்படும்? முன்னோர்கள் வாழ்வின் பலவற்றை கண்டு எழுதியது ஆகையில் அவற்றை ideal நோக்கில் கற்றுவைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நிதர்சனத்தோடு பொருத்திப் பார்த்தல் ஏற்புடையதல்ல. அனைத்தும் நன்றே அறிந்து பயன்படுத்தினால். அனைத்தும் தீதே இடம் பொருள் ஏவலுக்கு உட்படாத நிலையில். அனைவரும் அறிவாலிகளே. விதையில் இருந்து விழுந்த மற்றொரு விதை அவ்வளவுதான்.
ReplyDeleteநீங்கள் புத்திசாலி என்று காட்ட விருப்பம் கொள்ளுகிரீர் போலும்............
ReplyDeleteதமிழ் இலக்கியாம் பற்றி சிறிது ஆராய்ந்து விளக்கம் அழிப்பது நல்லது
ஐயா பெயரில்லா அன்பரே!
ReplyDeleteநீங்கள் பெரிய பொல்லாத பழமை விரும்பி போலத் தோன்றுகின்றது.
அவர்கள் நூல்களைப் பற்றிப் பேச, முதலில் தமிழை நன்றாகப் படியுங்கள்.
உங்கள் கருத்திடலில்,
நீங்கள் கொள்ளுகிரீர் அல்ல; நீர் கொள்கிறீர் - அல்லது நீங்கள் கொள்கிறீர்கள். ( ளு வும் அல்ல, ரீ யும் அல்ல),
இலக்கியாம் அல்ல; இலக்கியம்,
அழிப்பது அல்ல; அளிப்பது,
என்று இருந்திருக்க வேண்டும்.
நிச்சசயமாக, காலம் போகப் போக, மேலும் மேலும் அதி புத்திசாலிகளான சந்ததியினர்தான் பிறந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை.
Perfect reply 💯
ReplyDeleteசரியான செருப்படி
ReplyDelete