மூளை : வயது ஏறஏற மூளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9 சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம். மூளையின் கன அளவு சிறியதாகிப் போவதால் மூளையின் வெண்ணிற பகுதியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது.வயது அதிகரிப்பால் மட்டுமல்லாது, மதுகுடிப்பதாலும் கூட மூளை சிறியதாகிப் போகிறது என்கிறார்கள் அறிவியலார்கள். மிகக்குறைந்த அளவில் மதுகுடிப்பதால் இதயநோயின் பாதிப்புகள் குறைவதாகவும் ஆனால் மூளை சிறியதாகிப் போவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சிலந்தி:சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை! ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன.
உட்கார்வது ஆபத்து: இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அமித் கெஃபன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரே நேரத்தில் அதிக நேரம் உட்காரும்போது, ப்ரிடிபோசைட் செல்கள் கொழுப்பு செல்களாக மாற்றம் பெறுகிறது. ஒரே இடத்தில் அமரும் போது அழுத்தம் கொடுக்கப்படும் இடங்களில் உள்ள இத்தகைய செல்கள் விரைவாக அதிகரிக்கும்.இதனால் அப்பகுதிகளில் கொழுப்பு அதிகரிக்கும். இது ‘மெக்கானிகல் ஸ்ட்ரெச்சிங் லோட்ஸ்’ எனப்படுகிறது. ஒரே இடத்தில் அசைவின்றி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ பின்புறம் பெருத்து விடும் . உடலின் மற்ற பகுதிகளைவிட கொழுப்பு செல்கள் சீக்கிரம் அதிகரிக்கும். இதனால் அந்த பகுதியில் மட்டும் அதிக சதை போடும் இதை தவிர்க்க போதிய உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியம். அது மட்டுமின்றி, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி எழுந்து நடக்கவேண்டும்.
மடிக்கணனி: மடிக்கணனிகளில் வை-பை மூலம் இணையத்தினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு மடியில் வைத்து மடிக் கணனிகளைப் பாவிப்பதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ் ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
18 கிரகங்கள்:சூரியனை விட பல மடங்கு பெரியதாக 18 புதிய கிரகங்களை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளதாக வொஷிங்டனில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அனைத்தும் சூரியனை விட பல மடங்கு பெரியவை. குழுவின் தலைவர் ஜோன் ஜொன்சன் கூறுகையில், இதற்காக 300 நட்சத்திரங்களை சுற்றி தீவிர ஆராய்ச்சி நடந்தது என்றார்.
ஓய்வு:ஆசியாவின் நரம்பு அறிவியல் ஆராய்சி மையம் மேற்கொண்ட சோதனையில், கால்களுக்கும், பாதத்திற்கும் சரியான முறையில் ஓய்வு கொடுக்காவிட்டால் மூளையின் செயல் திறன் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இருபது நபர்களில் ஒருவர் இந்த பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூளையின் செயல் திறன் பாதிப்பதால், அன்றாட வேலைகளில் நாட்டம் இல்லாமல் இருப்பதும் நினைவாற்றல் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் இரவில் தூக்கம் கூட தடைபடும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது
அழகு:லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வொன்றை நடத்தினர். தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
தாய்ப்பால்:புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கூறும் அறிவுரை.ஆனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு இளம் தாய்மார்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில், தாய்ப்பால் கொடுத்தால் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படாது என்பது தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் அமெரிக்காவில் ஆய்வு நடந்தது. அப்போது, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்களை விட கொடுக்காத பெண்களுக்கு பின்னாளில் உயர் ரத்த அழுத்த நோய் அபாயம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.தாய்ப்பால் கொடுப்பதால் வேறு சில நன்மைகளும் தாய் மற்றும் குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.
ரகசியத்தைக் காப்பதில் பெண்கள் :பெண்களால் ரகசியத்தை ரகசியமாக வைக்கவே முடியாது என்பது ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 3,000 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 10ல் ஒரு பெண் தன்னால் ரகசியத்தை மனதில் வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் ரகசியமாக வைக்க வேண்டும் என்று சொன்னால் கூட அவர்களால் ரகசியத்தை காப்பாற்ற முடியதாம்.ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் 85 சதவீதம் பேருக்கு அடுத்தவர்களைப் பற்றிப் பொறணி பேசுவது என்றால் அலாதிப் பிரியமாம். 13 சதவீதம் பேருக்கு வேண்டும் என்றே பொறணியைக் கிளப்பிவி்டுவதில் ஒரு ஆத்ம திருப்தி. அதனால் ஆண்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகிறார்கள். ஏதாவது ஒரு விஷயத்தை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றால் அதை ஒரு பெண்ணிடம் கூறி யாருக்கும் சொல்லிவிடாதே என்று கூறுகிறார்கள். உடனே அந்த விஷயம் ஊருக்கே பரவி விடுகிறது. உலக விஷயங்களைத் தெரிந்து கொள்வதை விட அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் பெரும்பாலான பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம்.
No comments:
Post a Comment