நினைத்ததை அடைய

இந்த உலகில் மனிதன் தனதுஅறிவைக் கொண்டு எவ்வளவு பெரிய விசயங்களை எல்லாம் கண்டு பிடித்து விட்டான்.ஆனால் அவனால் அவனை திருப்தி படுத்திகொள்ளவோ தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவோ முடியவில்லை.உதாரணமாக உலகில் எவ்வளவு வன்முறைகள் நடக்கின்றன.நாடுகள் சண்டையிட்டு கொல்கின்றன. நாடு மக்களை கொல்கிறது.ஏன் தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாமல் பல பேர் உள்ளார்கள்.ஏழை மேலும் ஏழை ஆகிக்கொண்டே இருகிறார்கள்.வியாதிகள் மேலும் பெருகிகொண்டே இருகின்றன.இவை எல்லாவற்றையும் சரி செய்ய முடியுமா?இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன?நாம் இவற்றை எல்லாம் மாற்ற முடியாது.ஆனால் நம்மால் நம்மை சரி செய்து கொண்டால் நம் ஒருவர் மூலம் இந்த சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை கொடுக்க முடியும்.இதே போல் எல்லோரும் நம்மை சரி செய்து கொண்டால் அனைவருக்கும் எல்லாம் கிடைத்து விடும்.ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குத் தேவைப் பட்டதை எவ்வாறு அடைவது என்பதை பற்றித்தான்.பொதுவாக எல்லா மனிதனுக்கும் ஒவ்வொரு இலக்கு இருக்கும்.உதாரனமாக ஒருவர் .. பரிட்சை எழுதி பாஸ் பண்ண வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.எவ்வளவு பேர் அதை செய்கிறார்கள்.ஏன் செய்ய முடியவில்லை?மனித உறவுகளுக்கு உள்ளே எவ்வளவு முரண்பாடுகள்?
“ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்பது விதி.அதன் விளைவாக மனப்போக்கு அதை ஒத்த சூழல்களை கண்டிப்பாக தன்பால் ஈர்க்கும்.”
-சார்லஸ் ஹானால்
நாம் அனைவரும் ஒரே மஹா சக்தியுடன் தான் இணைந்து செயல்படுகிறோம்.ஒரே விதிகள் (சக்தி) தான் எல்லாவற்றையும் வழி நடத்துகின்றன. அதாவது ஈர்ப்பு விதி தான் அந்த ரகசியம்!
நீங்கள் இப்போது மனதில் என்ன என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்களோ அவை அனைத்தையும் இப்போது நீங்கள் ஈர்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!
இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விதி நீங்கள் தான் என்று இந்த உலகில் வாழ்ந்து மறைந்த மாபெரும் ஆசான்கள் கூறியுள்ளார்கள்.வில்லியம் ஷேக்ஸ் பியர், ராபர்ட் பிரௌனிங், வில்லியம் போன்ற கவிதை மூலமாக இதை கூறி உள்ளார்கள். இன்னும் பல பேர் தங்களது இசை மூலமும், ஓவியங்கள் மூலமும் இதை வெளிப்படுத்தி உள்ளார்கள்.இந்து மதம், புத்த மதம், யூத மதம், கிருத்துவ மதம்.இஸ்லாம் போன்ற மதங்களும் மற்றும் பாபிலோனிய மற்றும் எகிப்து நாகரிகங்களும் இதை வெளிப்படுத்தி உள்ளன.
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும்,ஒவ்வொரு செயலையும் நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு விசயத்தையும் இவ்விதி தான் நிர்ணயிக்கிறது.இந்த ஈர்ப்பு விதியை நடைமுறை படுத்துவது நீங்கள்தான்.அதை நீங்கள் உங்களது எண்ணங்கள் மூலமாக செய்கிறீர்கள் .
சுலபமா சொல்றேன் கேளுங்க
உங்களுடைய நண்பர்களை எல்லோரையும் பாருங்கள் நீங்கள் எல்லோரும் ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பீர்கள்.அதே உங்களுடைய எண்ணத்திற்கு எதிரான எண்ணங்கள் உள்ளவர்களுடன் நீங்கள் நெருங்கி பழக மாட்டீர்கள்.அன்னாஹசாரே ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்தவடன் எப்படி இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு கை கொடுத்தார்கள்.இங்கே பாருங்கள் அன்னா ஹசாரே -வின் எண்ணமும் மக்களின் எண்ணமும் ஒன்றாக இருந்த காரணத்தால் சுலபமாக அவர்களை அவரால் ஈர்க்க முடிந்தது.உங்களது வாழ்கையிலும் இந்த ஈர்ப்பு விதியின் தாக்கத்தை உணர்ந்து இருக்க கூடும்.உங்களுக்கு நடந்த சோகமான நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் எண்ண ஆரம்பித்தவுடன் அது தொடர்பாக மேலும் சோகமான நினைவுகள் உங்களுக்கு வர ஆரம்பித்திருக்கும்.நீங்கள் நீடித்து இருக்கும் ஒரு எண்ணங்களை பற்றி எண்ணும்போது, ஈர்ப்பு விதி உடனடியாக அதனுடன் ஒத்த எண்ணங்களை உங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.அதனால் நீங்கள் மேலும் சோகமாக மாறுகிறீர்கள்.
நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு என்ன தேவையோ அது குறித்த எண்ணங்களை நம் மனதில் விடாபிடியாக பிடித்து கொண்டிருப்பதோடு, அவை குறித்த முழுமையான தெளிவையும் நம் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்.அப்பொழுது நீங்கள் எதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகி விடுவீர்கள்.
நீ என்ன நினைக்கிறாயோஅதுவாகவே ஆகிவிடுவாய்சுவாமி விவேகனந்தர்.
இன்றையஉங்களது வாழ்க்கை உங்களது கடந்தகால எண்ணங்களின் பிரதிபலிப்பே.அதில் நல்லவையும் அடங்கும் கெட்டவையும் அடங்கும். நீங்கள் அதிகமாக யோசிக்கும் விசயங்களை உங்களின் பக்கம் ஈர்ப்பதால் உங்களின் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் அந்த எண்ணத்தின் ஆக்கிரமிப்பு அடங்கியுள்ளது என்பதை நீங்களே உணரலாம்.
“உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்கமுடிந்தால் அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும்.”
-பாப் பிராக்டர்
உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால், உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால், கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி.
எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை.நாம்மால் எண்ணத்தை அளவிட முடியும்.நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணிகொண்டே இருக்க வேண்டும்.நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும். பெரிய வீடு வாங்க வேண்டும். கார் வாங்க வேண்டும் நீங்கள் இது போல தொடர்ந்து எண்ணிகொண்டே இருக்கும்போது,நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கறீர்கள்.எண்ணங்கள் அந்த காந்த சமிக்கைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இணையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன.
எண்ணங்கள் காந்த சக்தி உடையவ.நீங்கள் சிந்திக்கும் போது எண்ணங்கள் குறிபிட்ட அலைவரிசையில் பிரபஞ்சதினுள் அனுப்பபடுகின்றன.அவை அதே அலைவரிசையில் உள்ள அனைத்து விசயங்களையும் ஈர்க்கின்றன.பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் திரும்ப அதன் மூலத்துக்கே அனுப்பப்படும் அந்த மூலம் தான் நீங்கள்.
உதரணமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம்.அது எப்படி நம் டிவியை வந்து சேர்கிறது.அதன் ஒளிபரப்பு நிலையத்தில் இருந்து ஒளிபரப்பபடுகிறது.நாம் வீட்டில் நமக்கு எந்த சேனல் தேவையோ அதற்கு ஏற்ற சேனல் மாற்றும் போது அது சம்பந்தமான அலைகளை உள்வாங்கி நமக்கு படமாக காண்பிக்கிறது டிவி.
இதே போல மனிதனும் ஒரு ஒளிபரப்பு கோபுரம் தான்.அதாவது சிக்னல்களை வெளியே அனுப்பிக்கொண்டு இருக்கும் ஒரு உயிர் உள்ள ஒளிபரப்பு கோபுரம்.நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது.ஏன் என்றால் நம்மிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும்.
உங்களது வாழ்வில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் உங்களிடம் இருந்து வெளியே போன எண்ணங்கள் கவர்ந்து இழுத்தவையே.உங்கள் வாழ்கையில் நீங்கள் எதாவது மாற்ற விரும்பினால் முதலில் நீங்கள் வெளிப்படுத்தி கொண்டிருக்கும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்ற வேண்டும்.
எப்போதும் நல்ல எண்ணங்களையேசிந்தியுங்கள்.
நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது.பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம்.பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்.

0 comments:

Post a Comment