திரைக்காக சூர்யா,அஜீத்,கே.பாலசந்தர்,விஜய்:புதினம்


சூர்யா தயாரிப்பில் படப்பிடிப்பு தொடங்கியது
இயக்குனர் பாண்டிராஜ் தற்போது சிம்புவை வைத்துஇது நம்ம ஆளுஎன்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாண்டிராஜ் அடுத்தப் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கிறார்.

இரண்டு சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் காமெடி நடிகர் சத்யன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்திலும் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

இதில் நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், நடிகை பிந்து மாதவி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

அஜீத்துடன் மோதும் அதிரடி வில்லன் ராஜசிம்மன்!
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் அண்ணன் தம்பியாக நடித்தார் அஜீத். அதோடு அந்த கேரக்டர்களையே ஹீரோ, வில்லனாகவும் கதை பண்ணியிருந்தார்.

அதையடுத்து தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் சத்யதேவ் படத்திலும் இரண்டு வேடங்களில் அண்ணன் தம்பியாகத்தான் நடிக்கிறார். ஆனால் ஹீரோ-வில்லனாக இல்லையாம்.

அதனால், க்ரைம் சப்ஜெக்ட்டில் தயாராகும் இந்த படத்தில் ஒரு அதிரடியான வில்லன் நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று அப்படம் தொடங்கப்பட்டதில் இருந்தே வில்லனை தேடி வந்தார் கெளதம்மேனன்.

அந்த வகையில் தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்திய வில்லன் நடிகர்களையும் அழைத்து போட்டோ செஷன் நடத்தினார். ஆனால், கொலை செய்து விட்டு தலைமறைவாகும் அந்த கேரக்டருக்கு ஏற்ற வில்லன்கள் அவர் எதிர்பார்த்தபடி செட்டாகவில்லை.

இந்த நிலையில், முதலில் பிரபல வில்லன்களாக தேடிக்கொண்டிருந்தவர்கள், பின்னர் வளர்ந்து வரும் நடிகர்களின் போட்டோக்களை வரவைத்து தேடிக்கொண்டிருந்தபோது, சசிகுமார் நடித்த குட்டிப்புலியில் வில்லனாக நடித்த ராஜசிம்மன் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தினாராம்.

இதனால் இப்போது அவரை கமிட் பண்ணி வில்லனுடன அஜீத் மோதும் காட்சிகளை துரிதமாக படமாக்கி வருகிறார் கெளதம்மேனன்.

இதனால், பல மாதங்களாக வில்லனை தேர்வு செய்தவர்கள், அதிலிருந்து ஒரு 10 வில்லன்களை நிலுவையில் வைத்திருந்தனர். அவர்களெல்லாம் தங்களில் யாராவது ஒருத்தருக்கு அஜீத்துடன் மோதும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் இப்போது ராஜசிம்மன் வில்லன் என்று அறிவிக்கப்பட்டதால் அவர்கள் அத்தனை பேருமே பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.


உத்தம வில்லனில் கே. பாலசந்தர், கே.விஸ்வநாத்…!
தமிழில் சிறந்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவரான கே. பாலசந்தர், தெலுங்கில் சிறந்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவரான கே.விஸ்வநாத் இருவரும்உத்தம வில்லன்படத்தில் நடித்துள்ளார்கள்.

கே. விஸ்வநாத், தமிழ், தெலுங்கில் கடந்த சில வருடங்களாகவே நடித்து வருகிறார். கே. பாலசந்தர்ரெட்டைச் சுழிஎன்ற படத்தில் மட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது இந்த இரு சிறந்த இயக்குனர்களும் முதன் முறையாக ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த இரு இயக்குனர்களுமே கமல்ஹாசனை வைத்து தமிழ், தெலுங்கில் மிகச் சிறந்த படங்களை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனை வைத்து கே. பாலசந்தர்அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், உன்னால் முடியும் தம்பிஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில்சாகர சங்கமம், சுவாதி முத்தியம்போன்ற படங்களில் கமல்ஹாசன் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தன்னை வைத்து மிகச் சிறந்த படங்களைக் கொடுத்த இயக்குனர்களை முதன் முறையாக நடிகராக தான் நடிக்கும் படத்தில் கமல்ஹாசன் இணைந்து நடிக்க வைத்திருக்கிறார்.

எங்களது காலத்தில் நாங்கள் இருவரும் அவரவர் படப்பிடிப்பில் மாறி மாறி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அவரிடம் நானும், என்னிடம் அவரும் பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தோம், ஆனால் அது நடக்கவேயில்லை.
 இருவரும் மிகவும் பிஸியாகவே இருந்தோம். இப்போது நாங்கள் இருவரும் இணைந்துஉத்தம வில்லன்படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் இருவரையும் சம்மதிக்க வைத்து இந்த படத்தில் கமல்ஹசான் நடிக்க வைத்தார்.
 இந்தக் கால நடிகர்களுடன் நடித்தது சுவாரசியமாக இருந்தது,” என பாலசந்தருடனான நடிப்பு அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறார் இயக்குனர் கே. விஸ்வநாத்.


ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த விஜய்யின் கத்தி ட்ரைலர்
விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் முதல் ட்ரைலரை இதுவரை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, விஜய்-சமந்தா நடிக்க, ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ள படம் கத்தி. இதன் படப்பிடிப்பு முடிந்து, பின் தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக உள்ளனர்.





No comments:

Post a Comment