‘’நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே’’
சத்திமுத்தப் புலவர் என்பது அவரது இயற்பெயரா என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில் சத்திமுத்தம் என்பது ஒரு ஊர்..அவரது கதை இவ்வாறு செல்கிறது.
—வானில் பறந்து செல்லும் நாரையைப் பார்த்து தன்னுடைய நிலைமையையும் குடும்பத்தின் நிலைமையையும் எடுத்துக் கூறியதை, நகர சோதனைக்காக அவ்வழியே சென்ற பாண்டிய அரசன் கேட்டு, இவர் மீது இரக்கம் கொண்டுதான் அணிந்திருந்த சால்வையை அவர் மீது போர்த்திச் சென்றான்.. மறு நாள் காவலாளிகளை அழைத்து, புலவரைத் தேடிக் கண்டு பிடித்து, அவரை வருத்தாது கொண்டுவரும்படி ஆணையிட்டான்.. அவைக்குவந்த புலவரை அரசன் வெகுமதி அளித்துக் கௌரவித்தான் — கதை இத்துடன் நின்று விடவில்லை — சில காலம்
கழித்துப் புலவர் இன்னொரு கவிதையின் மூலம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்:
‘வெறும்புற் கையும்அரி தாம்கிள்ளை சோருமென் வீட்டில் வரும்
எறும்புக்கும்
ஆர்ப்பத மில்லை,முன் னாளென் இருங் கவியாம்
குறும்பைத் தவிர்த்தகுடி தாங்கியைச் சென்றுகூடியபின்
தெறும்புற் கொள்யானை கவனம் கொள்ளாமல் தெவிட்டியதே!!’
(பாண்டியமன்னன் பரிசு கொடுத்து ஆதரிப்பதற்கு முன், என் வீட்டில் வெறுஞ்சோறு பெறுவது கூட அருமையாகும் – கிளியும் பசிப்பிணியால் வாடி மிகவும் தளர்வினை அடையும்; வருகின்ற எறும்புகளுக்கும் ஆகாரம் கிடையாது -எனது பெரிய வறுமையாகிய சிறுமையினைப் போக்கிய மன்னனிடம் போய்ச் சேர்ந்தபின்னர், கொல்லும் செயலினை உடைத்தான புலியயையும் மிதித்துக் கொல்லா நின்ற யானையானது வாய் கொள்ளாமல் கரும்புக் கழிகளை உமிழ்ந்து சிதறியது என்பதா!!
+படித்ததில் நெஞ்சில் பதிந்தது +
0 comments:
Post a Comment