நம்மோர் ஆண்டாண்டுகாலமாக ஆலயம் செல்கிறார்கள். ஆலய நிதி எனில்
ஆனால் ஆலயங்களும் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பதனை மறந்து எங்கோ சென்றுகொண்டிருக்கும் நிலையில் மக்களும் மதம் சம்பந்தமான அறிவில் பூச்சியத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதில் கோவில்கள் கவலைப்பட்டுக்கொண்டதில்லை.
பெரும் பக்திமான்களாக பல விரதங்கள் இருந்து தொழும் சில அடியவர்களிடம் மேற்படி கேள்வியினைக் கேட்டபோது அதன் பதிலைக் கூற முடியாமல் திணறுவதினை அவதானிக்கமுடிந்தது.
எதோ விளங்கா மொழியில் ஐயர் பூஜை செய்ய அடியவர்களும் அரோகராப் போட்டு முடியும் -(மக்களுக்கு எந்த வாழ்வியல் விளக்கமும் கொடுக்காத)- இந்த காலத்து கோவில் வழிபாடு மதமாற்றங்களுக்கே பெரும்பாலும் இலகுவாக வழிவகுத்துக் கொடுத்துள்ளது. அது குறித்து இந்து ஆலயங்கள் கவலைப்படுவதிலும் பார்க்க ,சைவர்கள் இருக்குமட்டும் உழைத்துக்கொள்வோம் என்பதிலேயே கவனமாக உள்ளனர்.
ஆலயத்தில் பலிபீடம்
கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகிய தீய எண்ணங்களை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு சுத்தமான உணர்வுடன் இறைவனை வணங்க செல்ல வேண்டும்.
மக்களை நல்வழிப் படுத்தும் அங்கமான பலிபீடத்தினை வெறும் காட்சிப் பொருளாக்கிய குற்றம் ஆலயங்களையே சாரும்.ஆன்மீக வழிபாடில் அமிழ்ந்திருந்த மக்களை இன்றைய கே(லி)ளிக்கை வழிபாடிற்கு மாற்றி வெற்றிகண்டது ஆரியம். இப்படியான வாழ்வியல்சார் ஆன்மீக வழிபாடுகள் அனைத்தும் ஆலய வழிபாட்டினை சுவீகரித்துக் கொண்ட ஆரியவர்க்கத்தினால் ஏப்பமிடப்பட்டவை என்பதுதான் கசப்பான உண்மை.
ஆக்கம்:செல்லத்துரை
மனுவேந்தன்
0 comments:
Post a Comment