மதிப்புக்குரிய தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நாளாந்தம் அதிகரித்து வரும் வாசகர்களின் தொகை எமக்கு பெரும் ஊக்கத்தினை கொடுப்பதுடன் எமது வாசகர்கள் இன்னும் பெரும் பயன் அடையும் வகையில் சஞ்சிகையினை வளம்படுத்த எண்ணியுள்ளது.''ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்த்தி ''என்ற கவிஞனின் வரிகள் பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட கருத்து.வாசிப்பதினால் மனிதன் பூரணம் அடைகிறான் என்பது பயனடைந்த அனுபவசாலிகள் கூறும் கூற்று.
எழுத்தாளரினது படைப்புக்களுடன், யாம் படித்து சுவைத்தவைகளையும் தீபம் வாசகர்கள் பயன் பெரும் வகையில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறோம். நீங்களும் நல்லதொரு எழுத்தாளராக மலர உங்கள் படைப்புக்களை தீபம் என்றும் வரவேற்க காத்திருக்கிறது.