எந்த ஊரு போனாலும்.. நம்ம ஊர்{காரைநகர்}போலாகுமா!

காரைநகர் (Karainagar
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு சப்த தீவுகளில் ஒன்றாகும். மற்றைய தீவுகளை விட யாழ்நகருக்கு அண்மையில் இருப்பதுதான் காரைநகர். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும்.
இவ்வூரில் அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான பாக்கு நீரிணைக் கடலாலும் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ள பரவைக் கடலாலும் சூழப்பட்டுள்ளது.
பிரித்தானியரின் ஆட்சியில் 1869 அம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த
துனவைந்து துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.
9ம் நூற்றாண்டின் பிற்பகுதிகள் இங்கு தமிழ்மொழி சிரேஷ்ட வகுப்புக்கள் வரை தமிழ்மொழிகல்வி போதிக்கும் பாடசாலைகளாக சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை, சைவப்பிரகாச வித்தியாசாலை, சுப்பிரமணிய வித்தியசாலை ஆகிய மூன்று பாடசாலைகள் மட்டுமே இயங்கிவந்தன.
ஆங்கில மொழி கற்பிக்க காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த திரு. கந்தப்பர் இலட்சுமணபிள்ளை, திரு. சிதம்பிரப்பிள்ளை கந்தப்பு, திரு. மு. கோவிந்தப்பிள்ளை ஆகியோரின் முயற்சியினால் திரு. மு. கோவிந்தப்பிள்ளை அவர்களது நிலத்தில் 1888 ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் பெரியார் முத்து சயம்பு அவர்களால் ஒரு கிடுகு கொட்டகையில் ”இந்து ஆங்கிலப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும். இப் பாடசாலை காலப்போக்கில் திருஞானசம்மந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1936 இல் இந்து ஆங்கில வித்தியசாலை சிரேஷ்ட வித்தியசாலையாகி காரைநகர் இந்துக்கல்லூரி என பெயர்மாற்றம் பெற்றது.
கலாநிதி ஆ. தியாகராசா  அவர்கள் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றகாலம் கல்லூரியின் பொற்காலம். 1946 தொடக்கம் தொடர்சியாக 28 வருடங்கள் சேவையாற்றிய பெருமைக்குரியவராக இவர் இருப்பதுடன் இவரது காலப்பகுதியல் விஞ்ஞான ஆய்வு கூடம், மனையியல் கூடம், நூல்நிலையம், வகுப்பறைகள் எனப் பௌதீக வளங்கள் விஸ்தரிக்கப்பட்டன.
இங்கே வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு
வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல கசூரினா கடற்கரை உள்ளது.
காரைநகர் துறைமுகத்துக்கு அருகில்வோர்ட்டலெடு காயெஸ்எனும் கோட்டையை போர்த்துக்கேயர் கட்டினர்.  கோட்டைக்குள் என்ன உள்ளது தெரியுமா..?




தொகுப்பு:செ.மனுவேந்தன்
(குறிப்பு:ஒவ்வொரு மாதத்தின் ஆரம்ப நாளில் இப்பக்கத்தினை ஒவ்வொரு ஊரும் அலங்கரித்துக்கொண்டு   இருக்கிறது.உங்கள் எஊரின் பெருமைகளை பறைசாற்றி எல்லோரும் அறிந்திட ழுதி அனுப்புங்கள்.நன்றி-தீபம் )

No comments:

Post a Comment