புதிய
பொலிவுடன்
வரும்
பிரசாந்த்
முன்னணி இயக்குநர்கள் அனைவருடைய படங்களிலும் நடித்த இளம் ஹீரோ என்ற பெருமையை பெற்றவர் நடிகர் பிரசாந்த். தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்த பிரசாந்த் சிறு இடைவெளிக்குப் பிறகு சரித்திரப் படமான 'பொன்னர் சங்கர்' படத்திலும், அவருடைய தந்தை நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மலையூர் மம்பட்டியான்' படத்தின் ரீமேக் ஆன 'மம்பட்டியான்' படத்திலும் நடித்தார். மக்களிடையே இப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், இப்படங்கள் வெளியாகி ஒரு வருடமாக பிரசாந்தை வேறு எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை.
என்ன சங்கதி என்று அவருடைய தந்தை தியாகராஜனிடம் விசாரித்ததில், பொன்னர் சங்கர், பம்பட்டியான் படங்களுக்காக பிரசாந்த், தனது உடல் எடையை அதிகமாக கூட்டிவிட்டார். தற்போது உடல் எடையை குறைப்பதற்காகவே, படங்கள் எதிலும் நடிக்கவில்லை, என்று கூறியவர். தற்போது பிரசாந்த் நடித்து வரும் 'சாஹசம்' படத்தைப் பற்றியும் கூறினார்.
பிரம்மாண்டமான பொருட்ச்செலவில் உருவாகும் சாஹசன், காமெடி, செண்டிமெண்ட், காதல் என்று அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறதாம். ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் படமாகும் இப்படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு பிராசாந்த் இதில் தனது அனைத்து சாஹச திறமைகளையும் காட்டப்போகிறாறாம்.
தற்போது உடல் எடையை குறைத்து 'ஜீன்ஸ்' படத்தில் பார்த்த பிரசாந்த் போலவே மாறியிருக்கும் பிரசாந்த், சாஹசம் படத்திற்கு பிறகு ஏகப்பட்ட படத்தில் நடிக்கப் போகிறார். தமிழ் மட்டும் இன்றில் இந்தியிலும் ஒரு படம் நடிக்க இருப்பதுடன், பல புதுமுக இயக்குநர்களிடமும் கதை கேட்டு ஓகே சொல்லியிருக்கிறாராம்.
சாஹசம் படத்தில் நாயகியாக முன்னணி நடிகையை நடிக்க வைக்க உள்ளனர். இதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அப்பாவாக நாசரும், அம்மாவாக துளசியும் தங்கையாக லீமாவும், மற்றும் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, மலேசியா அபிதா, ஸ்வாமிநாதன், சோனு சூது, கோட்டா சீனிவாசராவ், ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதையை விக்ரம் எழுத, இயக்குநர் மனோகர் வசனம் எழுதுகிறார். அருண் ராஜ்வர்மா இயக்குகிறார். இவர் இயக்குநர் மேஜர் ரவியிடம் பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
ஸ்டார் மூவிஸ் சார்ப்பில் நடிகர் தியாகராஜன் மிகுந்த பொருட்செலவில் சாஹசம் படத்தை தயாரிக்கிறார்.
நள்ளிரவு படப்பிடிப்பில் அஜீத்!
சாதாரண நடிகர்-நடிகைகள் நடித்துக்கொண்டிருந்தாலே ஒரு பெருங்கூட்டம் அந்த ஏரியாவை முற்றுகையிடும்.
அப்படியிருக்க, அஜீத்-அனுஷ்கா நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் விடுவார்களா? அப்படித்தான் அஜீத்தின் 55வது படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தபோது சாரை சாரையாக ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தது.
அந்த கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல்தான் சில நாட்களிலேயே படப்பிடிப்பை நிறுத்தினார் கெளதம் மேனன்.
அதையடுத்து, இனிமேல் அவுட்டோரில் குறிப்பாக வெட்டவெளி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால், தற்போது மிகப்பெரிய செட் அமைக்கும் துரித பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆனால், அந்த பணிகள் முடிகிறது வரை ஓய்வாக இருக்க முடியாதே என்பதால், தற்போது சத்தமில்லாமல் படப்பிடிப்பை முடுக்கி விட்டிருககிறார் கெளதம்மேனன்.
ஆனால், பகலில் நடத்தினால்தானே ரசிகர்கள் வருவார்கள். இரவில அதுவும் ஆள் நடமாட்டமே இல்லாத நட்டநடுராத்திரியில் நடத்தினால் எப்படி வருவார்கள் என்று அதே ஈசிஆர் பகுதிகளில் ஒதுக்குப்புறமாக இரவு நேர படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
குறைவான நபர்களை வைத்தே படப்பிடிப்பு நடத்தப்படுவதோடு, தினமொரு லொகேசன் என்று இடத்தை மாற்றிக்கொண்டேயிருப்பதால், ரசிகர்களுக்கு அவர்கள் படப்பிடிப்பு நடத்தும் இடங்களை கண்டுப்பிடிப்பது இயலாத காரியமாக உள்ளதாம்.
வசூலுடன் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்! –
எம்ஜிஆர் படத்தின் வெற்றிச் செய்திகளை நாமும் எழுதுவோமா என்ற பல நிருபர்களின் கனவை நனவாக்கியிருக்கிறது ஆயிரத்தில் ஒருவன்.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் இது. புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன், இன்றைய முதல்வர் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார்.
அன்றைக்கு தமிழ் சினிமா வசூலில் சரித்திரம் படைத்த இந்தப் படத்தை, 50 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியிட்டனர். கிட்டத்தட்ட 100 அரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு.
திரையுலகப் பிரபலங்களும் திரண்டு போய் இந்தப் படத்தைப் பார்த்தனர். மதுரையில் மட்டும் படம் சுமாராகத்தான் போனது. ஆனால் அங்கும் மறுவெளியீடு செய்து வசூலை ஈட்டினர்.
இப்போது இப்படம் சென்னை சத்யம், ஆல்பர்ட் தியேட்டர்களில் 75 நாட்களை தாண்டி ஓடுகிறது. பிற மாவட்டங்களிலும் 100 - வது நாளை நோக்கி ஓடிக்கொண்டுள்ளது இப்படம்.
இதுவரை ரூ.1 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிரத்தில் ஒருவன் 75 நாள் விழா சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடினர். டைரக்டர் பி.ஆர்.பந்தலு மகன் பி.ஆர்.ரவிசங்கர், எம்.ஜி.ஆரின் மெய் காப்பாளர் கே.பி.ராம கிருஷ்ணன், திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
சத்யம் தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடிக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment