மனிதனின் நம்பர் ஒன் பெட் அனிமல் என்று சொன்னால் அது நாய்தான்.
மனித இனத்தால் பழக்கப்பட்ட விலங்கு எனும் வரலாற்றில் முதலிடம்நாய்க்குத்தான் கிடைத்திருக்கிறது. பரிணாம மாற்றக்கொள்கையின் அடிப்படையில்சாம்பல் நிற ஓநாய்களிடமிருந்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் /
33000 / 15000ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து உருவான இனம்தான் நாய் என்று விதவிதமானஅறிவியல் ஆய்வுகள் கூறுகிறது.
நாய்கள் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளாக மாற்றப்பட்டது 13000 முதல் 37000வருடங்களுக்கு முன்புதான் என்றும் விதவிதமான ஆய்வுகள் கூறியிருக்கிறது.கடந்த சில நூறாண்டுகளில் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான்நாய்களின் பல்வேறு வகை என்றாலும், நிலத்தில்வாழும் விலங்குகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது நாய்க்குமட்டும்தான் என்பது கூடுதல் தகவல்.
பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டுதல், வீட்டைப்பாதுகாத்தல், காவல் துறைமற்றும் ராணுவத்தில் உதவுதல், வேட்டைக்கு உதவுதல் என்று நாய்களின்உபயோகத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். நாய் வகைகளிலேயே மிகவும்சிறியது Yorkshire Terrier. இதன் உயரம் வெறும் 2.5 இன்ச்சும், நீளம் 3.7 இன்ச்சும்,எடை வெறும் 113கிராமும்தான் (ஒரு சிறிய செல்போனின் எடையளவு) இருக்கும்.
நாய்களில் உயரமான வகை என்றால் அது Great
Dane. சராசரியாக 48இன்ச் வரையிலும் உயரம் வளரக்கூடியது இது.
நாய் வகைகளிலேயே பெரியது என்றால் அது English
Mastiff எனப்படும் வகை. இதன்எடை 155 கிலோ வரையிலும், வாலுடன் சேர்ந்த நீளம் 98 இன்ச் வரையிலும்வளரக்கூடியது.
நாய்களின் கர்ப்பகாலம் 63 நாட்கள். குட்டிகளை ஈனும்போது குறையுடன் பிறக்கும்குட்டியையும், தேறாது எனத்தெரியும் குட்டியையும், தாய் நாயே பிரசவ காலமருந்து போல தின்று விடுவதும் உண்மைதான்.
39நாள் கருவில்...
60 நாட்களுக்கு
மேல் பிரசவத்திற்கு தயாராய்...
-நன்றி சாய்ரோஸ்
No comments:
Post a Comment