வணக்கம்,
தீபம் வாசகர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
''பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ''
சொந்த ஊரினை விட்டு புலம் பெயர்ந்து வாழும் எங்களுக்கு கண்ணதாசனின் இவ்வரிகள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தவைகளாம். இருந்தாலும் தீபம் சஞ்சிகை மூலம் பிரிந்து வாழும் தமிழ் உள்ளங்களை இலக்கிய வடிவில் நெருங்கிவாழும் உணர்வு நம்மைப் போன்றோருக்கு மகிழ்ச்சியினையே கொடுத்து வருகிறது.மூட நம்பிக்கையற்ற நல்ல சிந்தனைகளும்,இனிமையான உரையாடலும், ஆரோக்கியமான பணிகளும் மனிதனை நலவாழ்வின் உச்சிக்கு அழைத்துச் செல்பவை மட்டுமல்ல மனித ஆயுளையும் நீடிக்க வல்லன என்பது அனுபவசாலிகளின் கருத்து.. அதற்காக தீபம் சஞ்சிகை என்றும் உறுதியுடன் உழைக்கும் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
www.theebam.com