நம் உடலும். உடலில் உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித் தனி வயது உண்டு. பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:
*தலைமுடி : முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பி க்கும் முடி தோன்றும்.

*கண்: பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண் களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.
*பற்கள்: எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வய தில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான் சிலரிடம் கப்ஸ்.
*குரல் : தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக் கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு பலவீனமாகி, குரல் ‘கரகர’ தான்.
*இருதயம் : ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி
படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப் புகளுக்கு ரத்தம் பாயும் வேக மும் குறைகிறது.
குடல்:குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப் போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கா ன நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.
*நுரையீரல்: 20 வயது வரை தான் முழுவீச்சில் இயங் கும். அதன்பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள் ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு, உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூர ம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான்.
*சிறுநீர்ப்பை : இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ள ளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.
*கல்லீரல் : இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது. குவாட்டரை நினைக்காதவரை இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.
*சிறுநீரகம் : ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலை யை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலு விழக்க ஆரம்பிக்கிறது.
*எலும்புகள் : 25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.
*தசைகள் : முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரைஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.
*தோல் : தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனம டைய ஆரம்பிக்கும்.
இவ்வாறாக எல்லோருக்குமே இருக்கப்போவதில்லை.அவர்களின் உணவு,பழக்கவழக்கங்களினைப் பொறுத்து உறுப்புகளின் செயற்பாட்டுக் காலம் மாறுபடலாம்.
0 comments:
Post a Comment