சடங்குகளும்,சம்பிரதாயங்களும் தமிழர்களின் வாழ்வியல் வட்டத்துக்குள்
தவிர்க்கமுடியாதவைகள் என்பது என்னவோ உண்மைதான்.ஒருபக்கம்
கோவில்கள்,தேவாலயங்கள் இவற்றின் உற்சவகாலங்கள்,விரதகாலங்கள்,
என்று மக்கள் ஆன்மீகத்துக்குள் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு பூஜைகள் ,புனஸ்காரங்கள்,நேர்த்திகள்,நிறைவேற்றல்கள் என்று வருடம் முழுவதும் வளைய வருவார்கள்.இதைவிடுத்து,நல்ல நாள்,பெருநாள் என்று வருடத்தில் பல நாட்கள் வந்தவண்ணமிருக்கும்.குறிப்பாக உழவர் திருநாள்,வருடப்பிறப்பு தீபாவளி போன்ற பண்டிகைகள் இவற்றில் அடங்கும்.இவைதவிர கொம்புமுறி,தேங்காய் உடைப்பு,தொழிலாளர் தினம் ஆகியவை தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்களாக விளங்கும்.
மற்றும் திருமணவைபவங்கள்,பூப்புனித நீராட்டு,என்று பல
சடங்குகளும்
தமிழர்களின் சம்பிரதாயங்கள் என்ற வட்டத்துக்குள்வருகின்றன.இவைகள்
எல்லாம் தாயகத்தில் காலம் காலமாக இருந்துவருகின்ற, எம்மக்களால் கட்டிக்காக்கப்படுகின்ற,வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த, பிரிக்கமுடியாத சடங்குகளும்,சம்பிரதாயங்களும் ஆகும்.
இப்பொழுது எம்மக்களில் லட்சோப லட்சம் மக்கள் தாயகத்தை விட்டு வந்து உலகம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அத்தோடு மேற்கூறப்பட்ட அத்தனை அம்சங்களும் தமிழர்களின் அடையாளங்கள் என்பது உண்மையே.ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில்
இவற்றின் அவசியம் என்ன?இவைகளில் எல்லாம் அனுட்டிக்கப்பட வேண்டுமா? ஒரு அந்நிய தேசத்தில் இயந்திரமயமான வாழ்வியல் முறையில் மாற்றுக் கலாச்சார சூழலில் இந்த சடங்குகளும், சம்பிரதாயங்களும் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டுமா? இவை அவசியம்தானா? என்பதை சற்று ஆராய்ந்து பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
புலத்தில் வாழும் எம் மக்களில் பலர் இன்னும் இந்த சடங்கு,சம்பிரதாயம்.
மற்றும் மூடநம்பிக்கைகள் என்று மூழ்கிபோய் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
ஒவ்வொரு சனி,ஞாயிறு தினங்களிலும் அநேகமானவர்களுக்கு பிறந்தநாள்,
திருமண விழா,அரங்கேற்ற நிகழ்வு,பூப்படைந்த பெண்ணுக்கு ஒரு விழா,
என்று ஏகப்பட்ட வைபவங்கள் இருக்கின்றன.ஒரு அவசரத்திற்கு,அல்லது
ஒரு முக்கியமான விடயத்திற்கு இவர்களை சந்திப்பதென்பது முடியாத
காரியம்.சொல்வார்கள்,"இன்று எங்களுக்கு அந்த பார்ட்டி,இந்தப் பார்ட்டி"
இருக்கிறதென்று.ஐந்து நாட்களும் இரவுபகலாக உழைத்த இவர்களுக்கு
வீட்டில் ஆறஅமர இருந்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் இருப்பதற்கும்
முடிவதில்லை.காரணம் இந்த "பார்ட்டிகளுக்கு"இவர்கள் கண்டிப்பாக சென்றே ஆகவேண்டும் என்ற ஒரு நிலை இருக்கிறது.சரி அது போகட்டும்......
இந்தக்காலக் கட்டத்தில் இந்த சடங்குகள்,சம்பிரதாயங்கள் தேவையா?
ஒரு வாழ்வு கல்யாணம் என்பது மிக முக்கியமான நிகழ்வுதான்,அதை யாரும் மறுக்க முடியாது.எல்லா இனத்தவர்களிடமும் இந்த திருமண வைபவம் இருக்கிறது. ஆனால் இந்த பெண்பிள்ளைகள் வயசுக்கு வந்துவிட்டார்கள் என்று,அதை ஒரு சடங்காக,"சாமத்திய வீடு"என்று ஆடம்பரமாக எம்மக்கள் கொண்டாடுவதை நாம் பார்க்கிறோம். இது அவசியம்தானா?என்ற கேள்வி இப்பொழுது எழுகிறது.
நன்றி;Koviloor Selvarajan
சாமத்திய சடங்கு அவசியமற்றது மட்டுமல்ல தமிழர் பெரும் பண்பாடு உள்ளவர்களாக பெருமை பேசிக்கொண்டு உலகத்தில் இல்லாத ஒன்று நடை பெற்றதை போல் அறியாத வயதுப்பிள்ளைகளை வைத்து கேலி பண்ணி பெரும் எடுப்பில் செலவு செய்து அதையும் பெருமையாக எண்ணும் ஏமாளிகள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது செய்து முடிந்தபின்னர் என்ன பயனை கண்டார்கள் என்றால் அது பூச்சியம் தான்.
ReplyDeleteஇதனை செய்து முடிக்கும் வரை பெற்றோர் படும் பாடு ஒரு நகைச்சுவை சினிமாப்படமே தயாரிக்கலாம்.ஹோல் தேடும் படலம்.உடுப்புகள் தேடும் படலம்.பெற்றோர் தம்மை அழகு ராஜா/ராணியாக்க அலையும் படலம்,பிள்ளையை அதில் நடிக்க தயாராக்கும் படலம்,பிள்ளையின் மாமன்/மாமி ஆயத்தப்படுத்தும் படலம்,மாமன் மாமி ,பெற்றோர் ,பிள்ளை வேலையில் லீவு எடுத்து ஹோல் சென்று அந்நாளுக்கு முதல் ஒத்திகைகள் செய்யும் படலம், என ஒரு மெகா சீரியலே தயாரிக்கலாம்.
Deleteசாமத்திய சடங்கு அவசியமற்றது மட்டுமல்ல தமிழர் பெரும் பண்பாடு உள்ளவர்களாக பெருமை பேசிக்கொண்டு உலகத்தில் இல்லாத ஒன்று நடை பெற்றதை போல் அறியாத வயதுப்பிள்ளைகளை வைத்து கேலி பண்ணி பெரும் எடுப்பில் செலவு செய்து அதையும் பெருமையாக எண்ணும் ஏமாளிகள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது செய்து முடிந்தபின்னர் என்ன பயனை கண்டார்கள் என்றால் அது பூச்சியம் தான்.
ReplyDeleteஅக்காலத்தில் தமிழ் நாட்டில் குடும்பத் தொழிலாகக் கொண்ட விலைமாதர்களின் வீடுகளில் பெண் வயதுக்கு வந்ததை பறைதட்டி தம் தொழிலுக்கு வலு சேர்ப்பார்கள். இன்று நடப்பது கொடுமையிலும் கொடுமை சார்.
ReplyDeleteஇது அறிவிலிகளின் வேலை. போட்டிக்குப் போட்டி, விதம் விதமாக ஆடம்பரமாகச் செலவு செய்து இச்சடங்குதனைப் பெரிதாகச் செய்வதன் மூலம் தாங்கள் ஏதோ பெரிய கௌவரம் அடைந்துவிட்டோம் என்று எண்ணிக்கொண்டு, உண்மையில் படு முட்டாள்கள் என்று தங்களைத் தாங்களே அடையாளம் காட்டிக்கொள்கின்றார்கள். வெள்ளைகள் வீட்டில், மகளுக்கு முதல் மாதவிடாய் வந்த விடயம், அவள் அம்மாவுக்கே பல காலங்களின் பின்தான் அவதானித்துக் கண்டு பிடிக்கக் கூடியதாக இருக்கும். இப்படியான சிநேகிதிகளுடன் பழகும் எங்கள் சிறுமிகளும் இக்கேவலமான ஒரு சடங்குக்கு சம்மதம் தெரிவித்து ஒத்துப் போவதுதான் நம்ப முடியவில்லை.
ReplyDeleteகொடுமையா? கேவலம் சார்
ReplyDelete