எங்கோ தொலைவில் - அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்கள்.


89ல் நான் பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளுக்கு போய்விட்டு இலங்கை திரும்பிய பின்னர், அந்த நினைவுகளை அடிப்படையாக வைத்து, "எங்கோ தொலைவில்" என்ற சிறுகதையை எழுதி அது வீரகேசரியில் பிரசுரமானது.

1995
கனடா வந்ததின் பின்னர், வின்னிபெக் நகருக்கு

சென்றபொழுது, அங்குள்ள சிலர் நாடகம் ஒன்று எழுதிதரச்சொல்லி கேட்டபொழுது, அந்தச்சிறுகதையை நாடகமாக்கிக் கொடுத்தேன். தற்செயலாக அமைந்ததோ என்னவோ, அந்த நாடகத்தில் நடித்தவர்களில் என்னைத்தவிர மற்ற எல்லோருமே மருத்துவர்கள்.

தொடர்ந்து வன்கூவரிலும், அங்குள்ள இளஞர்கள் இதே நாடகத்தை என்னோடு சேர்ந்து நடித்தார்கள்.

ரொரன்ரோ திரும்பியபின் உலகப் பண்பாட்டு மகநாட்டுக்கான கலைநிகழ்ச்சிகளில் ஒரு நாடகம் இடம்பெற வேண்டுமென்றவுடன் - மீண்டும் அதே நாடகம் ஆனால் நீண்ட கல ஒத்திகையுடன் திறமையான கலைஞர்கள் என்னோடு இணந்து கொண்டார்கள். எஸ்.ரி.செந்தில்நாதன்,எஸ்.மதிவாசன், எஸ்.பாலச்சந்திரன், கமல் பாரதி, சுப்புலக்ஷ்மி காசிநாதன், ஆர்.காசிநாதன் என்று பலரும் நடித்து பாராட்டு பெற்ரர்கள்.

அந்த உற்சாகத்தில் கனேடியத் தமிழ் கலைஞர்கள் கழகம் - பாரதி

புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாக 'எங்கோ தொலைவில்' திரைப்படத்தை வீடியோ படமாக தயாரிக்க முற்பட்டார்கள். நாடகத்தில் நடித்தவர்களோடு, துஷி ஞானப்பிரகாசம், மேகலா துரைராஜா, வி.சத்தியவரதன், பாலசிங்கம் சபேஸ், சித்திரா பீல்க்ஸ், ராதிகா என்று பலரும் இணந்து நடித்தார்கள்.

திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றை நான் கவனித்துக்கொள்ள எம்.ஜெயக்குமார் (கண்ணன்) ஒளிப்பதிவு செய்தார். இசை பவதாரிணி மதிவாசன். தயாரிப்பு- எஸ்.மதிவாசன் என்று பங்களிப்பு வழங்கப்பட்டது.

இத்திரைப்படம் பலதடவைகள், ரொரன்ரோ, ஒட்டாவா, வின்னிபெக் என்று பல இடங்களிலும் திரையிடப்பட்டு. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வரவேற்பை பெற்றது.

கனடாவில் இருக்கும் அண்ணனுக்கு ஊரில் இருக்கும் தங்கை கடிதம் எழுதும் கட்டம், பலரையும் கண்கலங்க வைத்தது. ரிவிஐ தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டபோதும் இது முக்கியமாகச் சொல்லப்பட்டது
.
அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து..தொடரும்
அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து..தொடரும்

No comments:

Post a Comment