பரத்துடன் நகைச்சுவை நடிகர்கள் 18 பேர் நடிக்கும் ….
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து, செல்வம் என்று எதுவும் சேர்த்து வைக்க வேண்டாம். நல்ல படிப்பைத்தேடிக் கொடுத்தால் போதும். அவர்கள் செல்வத்தை தேடிக் கொள்வார்கள். இக்கருத்தை நகைச்சுவையுடன் எடுத்து வருகிறார்கள்.
இப்படத்தின் கதையைக் கேட்ட கே.பாலசந்தர். சிரித்து ரசித்துப் பாராட்டியுள்ளார். சித்த மருத்துவ பரம்பரைப் பின்னணியில் அருமையான நகைச்சுவைக் கதை திரைப்படமாக உருவாவதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இப்படத்தில் காங்கோ பாடகர் ஒருவருடன் கானா பாலா இணைந்து பாடியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜில்லா 100-வது நாள் விழா: விஜய் பங்கேற்பு
விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜில்லா’. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார்.
தமிழில் வெற்றியடைந்துள்ள ஜில்லா படம் தற்போது 100-வது நாளை எட்டியுள்ளது. 100-வது நாளை கொண்டாடு விதமாக விழா ஒன்றை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இவ்விழாவை சென்னை ஆல்பட் திரையரங்கில் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்கிறார்கள். மேலும் இவ்விழாவில் நினைவு பரிசுகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

61-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
61-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் சிறந்த படமாக ஷிப் ஆப் தீசிஸ் என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. ஷாகித் படத்தில் நடித்த ராஜ்குமார் ராவ் சிறந்த நடிகராகவும், அப்படத்தின் இயக்குனர் ஹன்சால் மேத்தா சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் குறும்படமான தர்மம் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த அறிமுக பட இயக்குனர் விருது மராத்தி மொழி படமான ஃபாண்ட்ரி படத்தை இயக்கிய நாகராஜ் மஞ்சுலேவுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த விருது தலைமுறை படத்திற்கும், சமூக பிரச்சினைகளை விளக்கும் சிறந்த படமாக துஹ்ய தர்ம கொஞ்சா (மராத்தி), சுற்றுச்சூழல் குறித்த சிறந்த படமாக மலையாள மொழியில் உருவான பேரரிய தேவர், குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படமாக ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட கப்பால் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தமிழில் சிறந்த படமாக தங்க மீன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பாடல் எழுதிய நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியாகவும், இப்படத்தில் நடித்த சாதனா சிறந்த குழந்தை நட்சத்திரமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வல்லினம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்பிற்கான விருது கிடைத்துள்ளது.
இந்த விருதுகளின் சமூக நலனை முன்னிறுத்தி சிறப்பான திரைப்படங்களை தந்த பாலுமகேந்திரா மறைந்தாலும், அவரது இடத்தை தங்க மீன்கள் படத்தை இயக்கிய ராம் மற்றும் இயக்குனர் பாலா ஆகியோர் நிரப்புவார்கள் என்ற தமிழ் திரைப்பட ரசிகர்களின் நம்பிக்கை வீண் போகாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ராஜராஜ சோழனின் போர்வாள் படத்தில் சினேகா-ஸ்ரேயா!
நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில், சினேகாவின் வேகம் குறைந்தது. இப்போது நான் குடும்ப ஸ்திரியாகி விட்டேன்.
அதனால் என் இமேஜை கெடுக்காத வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அவர் ஸ்டேட்மென்ட் விட்டதால் அவர் வீட்டுப்பக்கம் செல்வதை டைரக்டர்கள் தவிர்த்தனர்.
ஆனால், உன் சமையலறையில் படத்தை இயக்கி நடித்துள்ள பிரகாஷ்ராஜ் மட்டும் தனது கதைக்கு ஒரு மெச்சூரிட்டியான கேரக்டர்தான் வேண்டும் என்பதால் சினேகாவை நடிக்க வைத்தார்.
அதைத் தொடர்ந்து விடியல் என்ற படத்தில் மட்டும் நடிக்கும் சினேகா, இப்போது பாடலாசிரியர் சினேகன் நடித்து வரும் ராஜராஜசோழனின் போர்வாள் என்ற படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறாராம்.
மேலும், 1100 வருடங்களுக்கு முந்தைய காலத்து கதையில் உருவாகும் இப்படத்தில் அந்த காலகட்டத்து பெண்மணியாகவே தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு சினேகா நடிப்பது போன்று, சிவாஜி கேர்ள் ஸ்ரேயாவும் ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்கிறாராம்.
ஆரம்பத்தில் கேரக்டர் ரோல் என்றதும் தயங்கிய இவர்கள், படத்தின் கதையை சொன்னதும் உடனே ஓ.கே சொல்லி விட்டார்களாம். தற்போது 25 சதவிகிதம் படப்பிடிப்பு நடந்துள்ள இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும்போது அவர்கள் இருவருமே ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்து தமிழச்சிகளாக மாறப்போகிறார்களாம்.
ஷாம், ஆர்யா – புறம்போக்கு படத்தின் சீக்ரெட்ஸ்
பேராண்மை படத்தை அடுத்து புறம்போக்கு என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.பி.ஜனநாதன். இந்தப் படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். புறம்போக்கு படத்தில் ஷாம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மெக்காலே.
சட்டத்தை மதிக்கும் போலீஸ் அதிகாரி வேடமாம். சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நம்புகிறவர். அதன்படி நடக்கிறவர். இந்தப் படத்தில் ஷாமுக்கு ஜோடியாக நடிப்பவர் ஒரு வெளிநாட்டுப் பெண். போலீஸ் கனவில் மெக்காலே லண்டன் போய் படித்து வந்தவர். எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும் என்று விரும்புகிற பிடிவாதம் உள்ளவர்.
எத்தனையோ போலீஸ் அதிகாரிகளைப் பார்த்திருப்போம். இதுவழக்கம் போலில்லையாம். இவரது கதாபாத்திரத்தை புதிய பரிமாணத்தில் டைரக்டர் ஜனநாதன் உருவாக்கியிருக்கிறாராம். ஸ்டைலிஷாகவும் இருக்குமாம்.
ஷாம் சட்டத்தை மதிக்கிற கதாபாத்திரம் என்றால் ஆர்யா சட்டத்தை மிதிக்கிறவர். இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி. ஷாம், ஆர்யா இரண்டு பேருடனும் தொடர்பில் இருப்பவராம். புறம்போக்கு படத்தில் 3பேரின் பாத்திரங்களும் 3 மாதிரியாக, அதாவது ஒன்றுக்கொன்று பொருந்தாத தனியான குணம் கொண்டவையாக இருக்குமாம்.
புறம்போக்கு படத்தில் 3 ஹீரோக்கள் என்பதால் 3 பேருக்கும் முக்கியத்துவம் இருப்பதுபோல், பேலன்ஸ் செய்து காட்சிகள் வைத்திருக்கிறாராம் இயக்குநர்.
600 தியேட்டர்களில் தெனாலிராமன்
அரசியல் புயலில் அடித்து வீசப்பட்ட வைகைபுயல் மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் கோடம்பாக்கத்தில் மையம் கொண்டுவிட்டது. தெனாலிராமன் படத்தின் மூலம் தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்து விட்டார் வடிவேலு.
சின்னக் குழந்தைகளை சிரிக்க வைக்கும் தெனாலிராமன் கதையை கையில் எடுத்து அதனை ஏஜிஎஸ் எண்டர்டயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் பண பலத்தின் மூலம் படமாகவும் ஆக்கிவிட்டார்.
விளையாட்டாய் ஆரம்பித்தது ஒரு கட்டத்தில் வினையாய் மாறியது. தெனாலிராமன் கதைகளில் வரும் மன்னர் கிருஷ்ணதேவராயரை அவமதிக்கிறார்கள் என்று தெலுங்கு அமைப்புகள் சில கொதித்து எழ… வடிவேலுக்கு ஆதரவாக தமிழ் அமைப்புகள் கிளம்ப..
“என்னைய வச்சு கலவரம் கிலவரம் பண்ணிடாதீங்கப்பு”ன்னு வடிவேலு கதறுகிற நிலைமை வந்து சேர்ந்தது. இப்போது அத்தனை பிரச்சினைகளும் முடிந்து விட்டது.
படத்தில் கிருஷ்தேவராயரை அவமதிப்பாக சொல்லி மதுரை உயர்நீதிமன்றத்தில் பழந்தமிழர் மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வீரக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதேபோன்று சென்னையில் தொடரப்பட்டிருக்கும் வழக்கும் தள்ளுபடி செய்யப்படும் என்றே நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் படத்தை வருகிற 18ந் தேதி வெளியிடுவதற்கான தீவிர முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இறங்கி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 600 தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. சென்னை நகரில் மட்டும் 20 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களில் உள்ள திரையரங்குகளில் இன்று முதல் முன்பதிவுகள் தொடங்கியது.
0 comments:
Post a Comment