தொழில்நுட்பச் செய்திகள்

தொடர்ச்சியாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி ஸ்மார்ட் கைப்பேசிகள்டேப்லட்கள் என அறிமுகப்படுத்திவரும் Samsung நிறுவனம் குழந்தைகளுக்கான டேப்லட் தயாரிப்பில்
மும்முரமாக இறங்கியுள்ளது.
 Galaxy Tab 3 எனும் இந்த புதிய டேப்லட்டினை இந்த மாதத்தில் அறிமுகப்படுத்த காத்திருக்கின்றது.
கூகுளின் Android 4.2.2 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட் ஆனது 7 அங்குல அளவுடைய திரையினைக் கொண்டதாகவும்,1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, 1GB RAM, 2MP கமெரா மற்றும் 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

இதன் விலையானது 175 டொலர்கள் ஆகும்.

புதிய வடிவமைப்பில் Lenovo அறிமுகப்படுத்தும் S5000 மடிக் கணணி!!
Lenovo நிறுவனமானது தனது புத்தம் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட S5000 மடிக் கணணியை அறிமுகம் செய்துள்ளது.
கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கணனிகள் 1280 x 800 Pixel Resolution உடைய 7 அங்குல தொடுதிரையினைக் கொண்டுள்ளன.
இவை தவிர 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய MediaTek 8389 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியனவும் காணப்படுகின்றன.
மேலும் 5 மெகா பிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 1.6 மெகா பிக்சல்களை உடைய துணையான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.
LG நிறுவனத்தின் புதிய தயாரிப்பான G3 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகிய வண்ணம் இருந்தன.
இந்நிலையில் இக்கைப்பேசி எதிர்வரும் ஜுன் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான பெரிய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 2.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் இதில் 16 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியம் வாய்ந்த கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இக்கைப்பேசியின் விலை மற்றும் ஏனைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜிமெயில் அறிமுகப்படுத்தும் புதிய வசதி!!

தனது பயனர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.
அதாவது ஒன்லைன் சொப்பிங், செய்தி சேவை போன்றவற்றிற்கு தமது மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி சந்தாதாரர் (Subscribe) ஆகியிருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக மின்னஞ்சல் வந்துகொண்டே இருக்கும்.
இதில் சில மின்னஞ்சல்களை தவிர்க்க வேண்டியிருந்தால் அது இதுவரை காலமும் கடினமானதாகவே இருந்தது.
ஆனால் தற்போது ஒரே ஒரு கிளிக் மூலம் Unsubscribe செய்து குறித்த மின்னஞ்சல் முகரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களை தவிர்க்கும் 
வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கார்களில் பயன்படுத்தக்கூடிய சாதனத்தை வெளியிடும் அப்பிள்
கார்களில் பயன்படுத்தக்கூடிய CarPlay எனும் சாதனத்தை 
அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜெனீவாவில் இடம்பெற்ற மோட்டார் வாகனக் கண்காட்சியில் அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக 
இருப்பதுடன், குறுந்தகவல்களை அனுப்புதல், மேப் சேவையினைப் 
பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு வசதிகளையும் பெற்றுக்கொள்ள 
முடியும்.
மேலும் இத்தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதற்காக பிரபல்யமான
Land Rover, BMW, Jaguar, Hyundai, Ford, GM, Peugeot Citroen, Honda 
போன்ற கார் உற்பத்தி நிறுவனங்களுடன் அப்பிள் நிறுவனம் ஒப்பந்தம் 
செய்துள்ளது.
  
கார்களி

0 comments:

Post a Comment