புலி உறுமும் - "பனிவிழும் மலர்வனம் என விளம்பரப்படுத்தப்பட்டு வரும் "பனிவிழும் மலர்வனம் திரைப்படம் மெய்யாலுமே தமிழ் சினிமா இதுநாள்வரை கண்டிராத புலிஉறுமும் திரைப்படம் தான் என்றால் மிகையல்ல!
அதற்காக அதன் இயக்குநர் பி.ஜேம்ஸ் டேவிட்டிற்கு
ஆரம்பத்திலேயே ஒரு "ஹேட்ஸ் ஆப் சொல்லிவிடுவோம்! "ஹேட்ஸ் ஆப் யூ - பி.ஜேம்ஸ் டேவிட்!
கதைப்படி., நாயகன் அபிலாஷூம், நாயகி சானியதாராவும் காதலர்கள். இருவரும் இருவீட்டு எதிர்ப்பால் நாட்டை விட்டு(அதாங்க ஊரைவிட்டு) ஓடி, தேனி பக்கம் ஒரு காட்டில் அடைக்கலாம் ஆகின்றனர்.
அங்கு சில வெறி கொண்ட மனிதர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகாமல் தப்பிக்கும், அதுவும் ஒருமலைவாழ் பெண்ணால் தப்பிக்கும் இருவரும், அப்பெண்ணின் உடம்பு முடியாத சிறுவனுக்கு உதவுவதற்காக அங்கேயே சில நாட்கள் தங்குகின்றனர்.
ஒருநாள் சிறுவனின் மருத்துவத்திற்கு கிளம்பும் நால்வரும் ஒரு காட்டு புலியிடம் சிக்கி செய்வதறியாது ஒரு மரக்கிளையில் ஏறி தவிக்கின்றனர், தத்தளிக்கின்றனர்.
ஒரு முழு இரவு புலியின் கண்ணியில் சிக்கிய அதன் குட்டியும் அந்த இடத்தை விட்டு நகர மறுக்க., புலியிடமிருந்து உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் தன் மகனையும், மற்றவர்களையும் காக்க மரத்தை விட்டு இறங்குகிறார் அந்த தாய், கண்ணியில் மாட்டிக்கொண்டு இருக்கும் புலிக்குட்டியை மீட்கும் அவர், புலியிடம் சிக்கி சிதைகிறார். சிறுவனும், காதலர்களும் உயிர் பிழைக்கின்றனர்.
தன் மகனுக்காக உயிரை இழந்த அந்த தாயின் வாயிலாக தாய்மையின் புனிதம் உணர்ந்து காதலை துறந்து, சிறுவனை அவனது தந்தையிடம் சேர்த்து விட்டு தங்களது பெற்றோரை நோக்கி புறப்படுகின்றனர் காதலர்கள்.
அறிமுகம் அபிலாஷ், சானியதாரா, வர்ஷா அஸ்வதி, பாவா லெட்சுமணன், ஜெகன்.ஜி, செந்தியாதவ், அனுராதா, செவ்வாளை சுருளிமனோகர் உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். புலியும், அதன் குட்டியும் கூட பிரமாதம்.
புலியையும் அதன் உறுமலையும் கிராபிக்ஸோ, ஸ்பெஷல் எபெக்ட்ஸோ, எப்படியோ இயக்குநர் நம் கண்முன் மிரட்டலாக, இதுவரை தமிழ் சினிமாவை யாரும் காட்டிராத அளவிற்கு உலாவவிட்டிருக்கிறார். அது ஒன்றுக்காகவே "பனிவிழும் மலர்வனம் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
"லைப் ஆப் பை ஹாலிவுட் ஸ்டைலில் புலியையும், அதன் உறுமலையும் நம் கண்முன் ரியலாக உலாவவிட்டிருக்கும் இயக்குநர், சில இடங்களில் கோட்டைவிட்டிருப்பதும் தெரிகிறது.
குறிப்பாக மரக்கிளையில் இருக்கும் ஹீரோ அபிலாஷின் ரத்தத்தை ஒரு சந்தர்ப்பத்தில் ருசிபார்க்கும் காட்டுபுலி க்ளைமாக்ஸில் நாயகரையும், நாயகி மற்றும் அந்த சிறுவனுடன் கோட்டை விட்டுவிட்டு, புலிக்குட்டியை காபந்து செய்ய வரும் சிறுவனின் தாயரை கடித்து குதறுவது லாஜிக்காக இடிக்கிறது (பொதுவாக புலிமாதிரி பிராணிகள் முதலில் நுகர்ந்த ரத்த வாடை உடைய மனிதர்களை தான் சுவாகா செய்யும் என்று எங்கோ படித்த ஞாபகம்...)
என்.ராகவ்வின் இருட்டிலும் மிளிரும் ஒளிப்பதிவு, பி.ஆர்.ரஜின் மரட்டும் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் பி.ஜேம்ஸ் டேவிட்டின் எழுத்து-இயக்கத்தில், "பனிவிழும் மலர்வனம் - தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய புலி உறும்பும் ""திகில் வனம்!
No comments:
Post a Comment