************************************
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்"
என்று பாடிப் பெருமிதம் அடைந்தார் பாரதியார்.
தமிழை மட்டுமே தெரிந்த ஒருவர் இப்படிக் கூறின் நம்பவேண்டிய அவசியமே இல்லை. இவரோ, தமிழுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளம், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, லத்தீன், ஜெர்மன், அரபு, உருது என்று பல
கீழ், மேல் நாட்டு மொழிகளை அறிந்திருந்தார். இப்படியான பல
மொழிகளினைப் படித்து, பேசி, கேட்டு சுவைத்த பின்னர்தான், தமிழின் இனிமையை உணர்ந்து அவர் இவ்வாறுபெருமை கொண்டார். ஆகவே இவர் சொல்வது உண்மையாகத்தான்
இருக்க வேண்டும்.
தமிழ் மொழி இனிமை மட்டும் கொண்டது அல்ல. அது தமிழர்
அல்லாதவர்கள் மிகவும் இலகுவாகக் கற்றுக் கொள்ளும்படியான எழுத்துகளையும், உச்சரிப்புகளையும்,
ஒலிவகைகளையும் தன்னுடத்தே கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழைப் படிப்பதற்கு
எவரும் அளவுக்கு மிஞ்சிய சிரமம் கொள்ளத் தேவை இல்லை.
பிறமொழிகளில், தேவைக்கு அதிகமான, மிகவும் சிக்கலான
ஒலி உச்சரிப்பு முறைகளை ஏற்படுத்தி வைத்து எல்லோரையும் திணறடிக்க வைக்கின்றார்கள்.
இப்படியான சிக்கல் வாய்ந்தஒலிகளுக்கான எழுத்துக்களே இல்லாமல், நம் தமிழ் மொழியானது
காலம் காலமாக வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
பிற மொழிகளைப்போல, தமிழ் மொழியில் kha ,
ga , gha , ha , sha , cha , dha , tha ,
ba , bha , fa என்ற ஒலிகளைக் குறிப்பதற்கான எழுத்துக்கள் இல்லையே என்று குறைப்பட்டுக்
கொள்ளுபவர்கள் இருக்கின்றார்கள். தமிழில் இருந்து தோன்றிய பல இந்திய மொழிகளில் இப்படியான
எழுத்துக்கள் நிறையவே உள்ளன.
இவ்வொலிகளை எழுப்புவற்கு நாம் எமது வாயில் உள்ள
நாக்கு, மூக்கு, உதடுகள், பற்கள், ஈறு, அண்ணம், அண்ணாக்கு, சொக்கை என்று எல்லாவற்றையும்
பலவித சேர்க்கைகளில், வித்தியாசமான அசைவுகளுடன், துல்லியமான காற்று ஊதல்கள், இழுத்தல்கள்மூலம்
எழுப்ப மிகவும் கடினமாக முயற்சி செய்யவேண்டி இருக்கின்றது. ஒரு சிறிய வித்தியாசமான
அசைப்பு எதிர்பாராத, பிழையான ஒலியினையே விளைவிக்கும்.
இலகுவாக உச்சரிக்கும் எத்தனையோ பல வழிகள் இருக்கத்தக்கதாக
ஏன்தான் கஷ்டமான வழிமுறைகளைத் தேடிப்பிடித்து
நம் பற்களை உடைக்கவேண்டும்?
இது,
"எளிய உளவாக கடியது தேடல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"
-:-
No comments:
Post a Comment