தென்னிந்திய அரசியல்வாதிகள் பலர் சினிமாவிலிருந்து தான்அரசியலுக்கு வந்தவர்கள். அவர்கள் சினிமா நடிகர்களக இருந்தபோழுது சம்பாதித்துக்கொண்ட செல்வாக்கும், வருவாயும்
துணையாக இருக்க, அரசியலில் குதித்து, ரசிகர் படையையே பின்னர், அரசியல் தொண்டர்களாக உருமாற்றுவது தெரிந்த விஷயம்தானே.
இதற்கு எதிர்மாறாக இலங்கையில் ஒரு அரசியல்வாதிக்கு, சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது.
அவரது முதல்படமான 'புதியகாற்று" மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதேபோல "நான் உங்கள் தோழனும்' தென்னிந்திய பாணியில் அமைந்து வெற்றி கண்டது. அவரிடம் ஒரு வழக்கம் இருந்தது. தான் கதாநாயகணாக் நடித்தாலும், தன்னுடன் சமமான (அல்லது சற்றுக் குறைவான) பாத்திரத்தில் இன்னுமொரு இளம் நடிகரை அறிமுகப்படுத்துவார். புதியகாற்று திரைப்படத்தில் டீன்குமார் நடித்தார். அடுத்தபடமான 'நான் உங்கள் தோழ்னில்' டீன்குமாருக்குப் பதிலாக. அரிதாஸ் என்ற யாழ்ப்பாண நாடக நடிகர் நடித்தார். மூன்றவது படத்தின் நடிகர் தேர்வு நடைபெற்றபோது, நான் நடித்த "வாடைக்காற்று' வெளியாகி, எனக்கு நல்ல பெயரும் கிடைத்திருந்தது.
எனவே "நாடு போற்ற் வாழ்க' திரைப்படத்தில், தனக்கு இணையான 'விஸ்வநாத்' என்ற பாத்திரத்தில் என்னை நடிக்கவைக்க
இயக்குனர் யசபாலித்த நாணயக்காரா
இவர் இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் சகோதரர். சிங்கள சினிமாவின் பல வெற்றிபெற்ற படங்களை இயக்கியவர். ஏற்கெனவே ஒரே கதைகயைக் கொண்ட"கீதிகா" என்ற சிங்களப்படத்தையும், "அநுராகம்" என்ற தமிழ் படத்தையும் ஒன்றாக இயக்கிய அனுபவம் அவருக்குண்டு. கதை ஒன்று. நடிகர்கள் வேறுவேறு. இதேபோல தமிழ் "நாடுபொற்ற வாழ்க"வில் வி.பி.கணேசனும், நானும் நடித்த பாத்திரங்களில் சிங்களத் திரைப் பட்மான "அஞ்சானா" வில் புகழ்பெற்ற சிங்கள் நடிக்ர்களான விஜய குமாரதுங்கவும், றொபின் பெர்னாண்டோவும் நடித்தார்கள். கதாநாயகிகள் என்ற வகையில் இரண்டு மொழிகளிலும் கீதா குமாரசிங்க, சுவர்ணா மல்லவாராச்சி இருவருமே நடித்தார்கள்.
சுவர்ணா
நான் பார்த்த பல சிங்கள 'கலை'ப் படங்களில் முக்கியபாத்திரங்களில்
நடித்த சுவர்ணா எனது ஜோடியாக நடித்தது சந்தோசமே. அவரோடு நடிப்பது சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.
ஒரு காட்சியில் அவரது கன்னத்தில் அறைவது போல நடிக்கவேண்டும். நான் நிஜமாகவே அறைந்து விட்டேன். அவரது காதுத்தோடு பறந்துவிட்டது. அத்தோடு அவ்ர் கண்கள் கலங்கி விட்டன. இருந்தாலும் கோபித்துக் கொள்ளாமல் நடித்து முடித்தார். இதற்கு பிறகும் எங்கள் காதல்காட்சிகள் நெருக்கமாக அமைந்தன என்பதுதான் ஆச்சர்யம்.
இன்னும் ஒரு மறக்கமுடியாத சம்பவம், நான் மலையை சுற்றி வளந்து, வளைந்து போகும் பாதையில், படு வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடியது. எதிர்எதிரே வாகனங்கள் வந்தால் விலகிப்போக முடியாத, அகலம் குறைந்த பாதை. சற்று விலகினாலும், அதல பாதாளத்தில் விழுந்து விட வேண்டிவரும். இந்தப் பாதையில், கணேசன் HONDA வில் ஓடிக்கொண்டிருக்க, நான் அவ்ரை புதிய KAWASAKKI யில் துரத்தி செல்கிறேன்.
மலை விளிம்பில் நாங்கள் வளந்து, வளைந்து ஓடுவதை. மலையின் ஒரு வளைவில் நின்று படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் சென்று ஓட்டத்தை முடிக்கவேண்டும். அவ்வேளையில் எனது மோடார் சைக்கிள் பாதையை விட்டு விலகி, விளிம்பு நோக்கிச் சென்றது. அவ்வளவுதான்..எனது முடிவு இதுதான் என்று நான் நினைக்க முன்னரே, கமராக்காரருக்கு பின்னால் நின்ற நடிகர் றொபின் பேர்னாண்டோ (இவர்தான் எனது பாத்திரத்தை சிங்கள்ப் படத்தில் நடித்தவர்) நேராக வந்து, சரிந்துகொண்டுபோகும் மோட்டர்சைகிளை கவ்விப் பிடித்து என்னை காப்பாற்றினர்.- அந்தவார 'மித்திரன்' பத்திரிகை ஒரு செய்தி வந்தது. "படப்பிடிப்பில் திகில் சம்பவம் - நடிகர் மயிரிழையில் உயிர் தப்பினார்"
பனிமூட்டம் மூடிய லிப்டன் சீற்(Lipton;s Seat)
படத்தின் உச்சக்கட்டம் - ஹப்புததளையில் உள்ள தம்பரென்ன
எஸ்டேட்டில் ஒரு மலை உச்சியில் Lipton;s Seat என்ற இடம் இருக்கிறது. அங்கிருந்துதான் சேர்.தோமஸ் லிப்டன் (ஆமாம்- லிப்டன் தேயில் என்று அவர் பெயர்தான் இடப்பட்டது) தனது எஸ்டேட் முழுவதையுமே பார்ப்பாராம். சிறப்பு என்னவென்றால் பனிமூட்டம், முகில் கூட்டம் மறைக்காத ஒருநாளில் தெற்குமாகாணம், கிழக்கு மாகாணம் எல்லைகளான கடல் கூட அங்கிருந்து தெரியும். இந்த மலை உச்சியில்தான் எனக்கும் வி.பி.கணேசனுக்கும் இறுதி சண்டை நிகழ்கிறது. சண்டையின் முடிவில் மலையின் விளிம்பை பிடித்துக்கொண்டு நான் தொங்க கணேசன் மனம் மாறி என்னை காப்பாற்றுவதாக காட்சி. கீழே எறும்புகள் போல மனிதர்கள் தெரிகிறார்கள். காட்சி எடுத்து முடிந்ததும்தான் உயிர் எனக்கு திருமப வந்தது.
உச்சியில் இருந்து பார்க்கும்போது..
"நாடு போற்ற வாழ்க" படத்தில் இடம்பெற்ற பாடல்களை ஈழ்த்து இரத்தினம் இயற்ற சரத் தசநாயக்க இசை அமைத்தார். முத்தழ்கு, கலாவதி, சுஜாதா,, சந்திரிகா, சுண்டிக்குளி பாலச்சந்திரன் ஆகியோர் பாடினார்கள். ஜெ.ஜே.யோகராஜா தான் படப்ப்டிப்பாளர்.
31.7.1981ல் ஆறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
கலையுலகில்
வாழ்ந்துகொண்டிருக்கும்
அன்னாரின்
அனுபவங்கள்
தொடரும்..
No comments:
Post a Comment