வளர்ந்து வரும் குழந்தைகள் `டீன் ஏஜ்' பருவத்தை அடையும்போது, பெற்றோர் என்ற முறையில் அவர்களைப் பற்றி கவலை ஏற்படுவது இயற்கை தான். அவர்களது மனம், உடல், எண்ணம் ஆகியவற்றைப் பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் உள்ளன.
மேலும் அவர்களால் பெற்றோர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் ஏராளம். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் அதிகம். அவற்றை எதிர்கொள்ளவும், முன்கூட்டியே காத்துக்கொள்ளவும், எதிலிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது? எப்படிக் கையாள்வது? என்பதை பற்றி பார்ப்போம்.
இன்றைய காலத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பி விட்டு மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறோம். நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப்பார்த்து நமக்கு பயமாக இருக்கிறது. தற்போது உள்ள குழந்தைகளுக்கு நாம் சிறு வயதில் கற்றுக்கொண்ட விஷயங்களை விட அதிகமாக கற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
யார் மூலமாகவோ சில விஷயங்கள் தவறாக போதிக்கப்படுவதை விட,
அதன் விளைவாக தவறான நடவடிக்கைகளுக்கு அவர்கள் சென்று தவறான முடிவுகள் எடுப்பதை விட, பெற்றோர்களே அவர்களுக்கு அவற்றை நாசூக்காக சொல்லிக்கொடுத்தால் நல்லது. டீனேஜ் குழந்தைகளிடம் கருத்துப்பரிமாற்றம் செய்ய வேண்டிய அடிப்படையான விஷயங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.
இவ்விஷயங்களை பற்றி குழந்தைகளிடம் மென்மையாகப் பேசலாமே!
பாலுறவு மற்றும் பாலியல்..........
வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஊடகங்கள் வாயிலாகவோ, நண்பர்கள் மூலமாகவோ அல்லது தற்செயலாக ஏற்படும் அனுபவங்கள் வாயிலாகவோ, பாலுறவு மற்றும் பாலியல் தொடர்பான விஷயங்கள் தெரியவர வாய்ப்புள்ளது.
எனவே கருத்தடை, தேவையில்லாத கர்ப்பம், கருக்கலைப்பு முதலிய விஷயங்கள் குறித்து டீனேஜ் குழந்தைகளிடம் சொல்லி வைப்பதுடன், அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும், ஒருவரை முறையுடன் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்தும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
போதை மருந்துகள், மதுபானங்கள்.........
ஒரு மனிதனாக வளர்ந்து வருகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் வயதில் உயர் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது உடன் பயிலும் நண்பர்களுடன் ஜாலியாகப் பார்ட்டியில் கலந்து கொள்வார்கள். பார்ட்டிகளில் கலந்து கொள்வதில் அவர்களுக்கு நிறைய விருப்பம் இருக்கும்.
அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு போதை மருந்துகள், மது பானங்கள் மற்றும் இதர போதையேற்றும் பொருட்களை யாராவது அறிமுகப்படுத்தலாம். அவர்களது நண்பர்கள் பல் வேறு சமூகப் பின்னணியை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இதெல்லாம் மிகச் சாதாரணமான விஷயங்களாக இருக்கும்.
அத்தகைய நண்பர்களின் வற்புறுத்தலால் இவற்றை குழந்தைகள் உட்கொள்ள வாய்ப்புண்டு. எனவே குழந்தைகளுக்கு இவற்றைப் பற்றிச் சொல்லி சரியாக வளர்க்க வில்லையென்றால், அவர்கள் இதனை ஜாலிக்காகச் செய்கிறேன் என்று ஆரம்பித்து, பின்னர் அடிமையாகி விடுவார்கள்.
குழந்தைகள் இதுபோன்ற பார்ட்டிகளுக்குச் செல்கிறார்கள் என்று தெரிய வந்தால் உடனே அவர்களை அழைத்து இது குறித்து அவர்களுக்கு சொல்லி வைக்க வேண்டும். போதுமான அறிவுரைகளை மட்டும் கூறுங்கள். இது மிகவும் அவசியமானது.
பணத்தை கையாளுதல்...........
குழந்தைகள் உழைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றால் அதன் அருமை, மதிப்பு எல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அவற்றை எப்படி சேமிக்க வேண்டும் என்றும், அது எப்படி பிற்காலத்தில் உதவும் என்றும் தெரிந்திருக்கும். ஆனால், பணம் சம்பாதிக்காத குழந்தைகளுக்கு, அதன் அருமை தெரியாது.
செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். பணம் சம்பாதிக்க பெற்றோர்கள் படும் கஷ்டம் அவர்களுக்குத் தெரியாது. இந்த மாதிரியான குழந்தைகளிடம் பணத்தின் மதிப்பு பற்றியும், சேமிப்பின் அவசியம் மற்றும் சேமிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும். அது முதன்மையான வேலையாக இருக்கட்டும்.
குடும்பத்தின் மேன்மை.........
டீனேஜ் பருவத்தினருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். பாடங்கள், பாடம் தொடர்பான குறிப்பெடுத்தல், புராஜெக்ட், நண்பர்களூடன் அரட்டையடித்தல், பார்ட்டிகளுக்கு செல்லுதல், கிரிக்கெட் விளையாடுதல் போன்ற பல வேலைகளுக்கிடையில், அவர்கள் வீட்டில் இருப்பது குறைவு.
அப்படி வீட்டில் இருந்தாலும், குடும்பத்திலுள்ள மற்றவர்களுடன் பேசி மகிழ்வதும் குறைவாகவே இருக்கும். அவர்களது இளமை வேகத்தில் வீட்டில் அமைதியாக இருக்க அவர்களுக்குப் பிடிக்காது. நேரம் கிடைக்கும் போது, குடும்பத்தின் மேன்மை மற்றும் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு இதமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
குடும்பத்தினரிடையே எப்படி அன்பாக, பாசப்பிணைப்புடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும், வீட்டில் நடைபெறும் சிறுசிறு சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
டேட்டிங்.........
துணைவரை அடிக்கடி மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும், உறவுகளை முறித்துக் கொள்வது சகஜம்தான் என்றும், நம்முடன் உறவாக இருப்பவர்களை ஏமாற்றுவது பெரிய தவறு ஒன்றும் இல்லை என்றும் டீனேஜ் பருவத்தினர் நினைத்துக் கொள்கிறார்கள்.
இந்த மாதிரியான தவறான எண்ணங்களுடன் குழந்தைகள் வளர்வதற்கு இடம் கொடுக்காமல், நட்பு மற்றும் உறவுகளின் மேன்மை பற்றியும், முக்கியத்துவம் பற்றியும், அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் ஒரு நண்பனாக அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இணையதளத்தில் உலவுதல்............
தற்போதுள்ள இளைஞர்கள் இணைய தளம் வழியாக ஆன்லைன் சாட்டிங், ஃபேஸ்புக் வழியாக கருத்துப்பரிமாற்றம், நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றை விரும்புகிறார்கள். இத்தகைய ஆன்லைன் உறவுகள், அவர்களது எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதை மறந்து போகலாம்.
அவர்கள் இணையதளம் வழியாக என்னென்ன நடவடிக் கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை பெற்றோர்களால் கண்காணிக்க முடியாமல் போனாலும் கூட, இவ்வித ஆன்லைன் நடவடிக்கைகள் அவர்களது எதிர்காலத்தினை எவ்வாறு பாழ்படுத்தக்கூடும் என்பது குறித்த விழிப்புணர்வினை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மேலும் இதுகுறித்து நாளிதழ்களில் வரும் செய்திகளை, அவர்களது கவனத்திற்குக் கொண்டு வந்து, அது குறித்த அச்சத்தினை ஏற்படுத்த வேண்டும்.
வெற்றியின் ருசி...........
குழந்தைகளிடம் வெற்றி என்றால் என்னவென்றும், அது குறித்து அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேட்க வேண்டும். கல்வி, விளையாட்டு அல்லது அவர்கள் விரும்பும் வேறு ஏதாவது துறை ஆகியவற்றில் அவர்கள் சாதிக்க வேண்டியவை, வாழ்க்கையில் ஒரு லட்சியம் அல்லது குறிக்கோள் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு, அதனை நோக்கிப் பயணித்தல் போன்ற விஷயங்கள் குறித்து, அவ்வப்போது பெற்றோர்கள் பேச வேண்டும்.
வேண்டுமெனில் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் துறையில் சாதிக்க வேண்டியவை குறித்தும் பேசலாம். `வரலாறு படித்தல் நல்லது தான். ஆனால் வரலாறு படைத்தல் அதனினும் நல்லது' என்றும் கூற வேண்டும். அவர்களது மனதில் "பத்தோடு பதினொன்றாக'' என்று இல்லாமல், வெற்றி வீரனாக தனியாகத் தெரிவதன் பெருமையை பெற்றோர்கள் எடுத்துக் கூற வேண்டும்.
அறிவுரை வார்த்தைகள் அவர்கள் மனதில் பதிந்து, அவர்களது வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு நினைவுக்கு வர வேண்டும். வாழ்வின் அனைத்து கஷ்ட, நஷ்டங்கள், நன்மை, தீமைகளை பிள்ளைகள் நன்கு உணறுமாறு பெற்றோர் எடுத்து கூறவேண்டும்.

No comments:
Post a Comment