மெல்லத் தமிச் இனி வாசுமா? அல்லது அசிந்து ஒசியுமா?
மன்னிக்கவும். தமிழ் சீர்திருத்தம் என்று கூறிக்கொண்டு 'ழ' என்ற எழுத்தை 'zh ' என்று இட்டு வாசித்ததால் இந்தக் கதி நேர்ந்தது மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பதற்குச் சான்றாகப் பலவிதமான காரணிகள் உள்ளன:
மன்னிக்கவும். தமிழ் சீர்திருத்தம் என்று கூறிக்கொண்டு 'ழ' என்ற எழுத்தை 'zh ' என்று இட்டு வாசித்ததால் இந்தக் கதி நேர்ந்தது மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பதற்குச் சான்றாகப் பலவிதமான காரணிகள் உள்ளன:
* வேறு மொழிகளில் உள்ள பலவிதமான ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் நம் தமிழ் மொழியில் இல்லாது இருந்தும், அதற்கான புது எழுத்துகளையோ, அல்லது குறிகளையோ உருவாக்கித் தமிழைச் செம்மைப்படுத்தாது, ஏற்கனவே இருந்த 'ழ' என்ற எழுத்திற்கு அழகு கூட்டுவதாகக் கூறிக்கொண்டு, வாசிப்பதை இன்னமும் சிக்கல் படுத்தி விட்டுள்ளனர். இதனால், தமிழில் உள்ள 'ழ' விற்கும் 'zh '' போட்டு எழுதி, தமிழ் தெரியாதோர் தமிழ் வாசித்தால் தமிழைத் தமிழ் என்றது வசிக்காது தமிச் என்று வாசித்து தமிழின் பெயரையே தமிழர் கொன்றுவிட்டனர்.
* தமிழ் உணர்வினர் பலர் பெரு முயற்சிகள் எடுத்தும், தமிழ் வளர வேண்டிய தமிழ் நாட்டில் தமிழ் எப்பவோ சாகத் தொடக்கி விட்டது. அங்கு பெரும்பாலோரின் கல்வி, மற்றும் பேசும் மொழி ஆங்கிலமே. தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பெயர்கள், அவற்றைக் கொண்டு நடத்துவர் உரை எல்லாம் ஆங்கிலத்திலேயே. இளைய சமுதாயத்தினருடன் கதைக்கும் போது, அவர்களுக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு அவசியமாகின்றது.
அப்படி மீறித் தமிழில்தான் கதைக்க வேண்டி வந்தாலும், ஒவ்வொரு வரிக்கும் so , and , but என்று எல்லாம் போட்டு இணைத்துக் கதைப்பது வழக்கமாய் விட்டது. தொலைக்காட்சியில் சில சொற்கள், songs , lyrics ,contestants ,
participants ,audiance , welcome , thank you என்று பல சொற்களுக்கு என்ன தமிழ் வார்த்தையோ என்று இன்னமும் தேடிக்கொண்டு தான் இருக்கின்றேன்..
*வெளிநாடுகளிலும் தமிழ் மிகவும் கேவல நிலையிலேயே உள்ளது. பெரும்பாலும் பிள்ளைகள் தமிழைத் தவிர மற்றைய மொழிகளைப் படிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு, தற்போது தமிழ் பேசுவது கஷ்டமாய் இருந்தாலும் விளங்கிக் கொள்கிறார்கள். ஆனால் வரும்காலத்தில், இவர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் என்ற ஒரு மொழி இருப்பதாகவே கேள்விப்பட மாட்டார்கள்.
பாரதி தன் வாயாற் சொல்ல அஞ்சியது உண்மையிலே நம் முன்னால் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
-ஆக்கம்:செல்வதுரைசந்திரகாசன்
No comments:
Post a Comment