சினிமா செய்திகள்

மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேருகிறார் த்ரிஷா!
சிம்புவும், த்ரிஷாவும் அலை, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இப்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் மூன்றாவது முறையாக ஜோடி சேருகிறார்கள். பெரிய பட்ஜெட்டில் எடுத்த இரண்டாம் உலகம் பெரிய தோல்வியை அடைந்ததால் சின்ன பட்ஜெட்டில் சிறப்பான படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார் செல்வராகவன். இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில், த்ரிஷா ஏற்கெனவே தெலுங்கில் ஆடவாரி மாட்லாகு அர்த்தலே வேறுலே என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம்தான் தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் ஆனது. த்ரிஷா கேரக்டரில் நயன்தாரா நடித்தார். அதற்கு பிறகு இப்போது மீண்டும் செல்வராகவன் படத்தில் நடிக்க இருக்கிறார். செல்வராகவன் இப்போது இசை அமைப்பாளர் யுவனுடன் இணைந்து படத்துக்கான பாடலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
த்ரிஷாவை வீழ்த்தி விக்ரமுக்கு ஜோடியானார் ஹன்சிகா!

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷங்கரின் படத்தில் நடித்து வந்தார் விக்ரம். அப்படத்தில் உடல் எடையை அதிகப்படுத்தி, குறைத்து என மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்ததால் அந்த படத்தை முடிக்கிற வரைக்கும் அவரால் வேறு படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், கதை கேட்பதைகூட தள்ளிவைத்து விட்டு படத்துக்காக முழு நேரத்தையும் செலவிட்டு வந்தார் விக்ரம்.

ஆனால், தற்போது விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால், டப்பிங் பணிகளில் இறங்கி விட்டனர். அதனால், தனது பாடிலாங்குவேஜை மாற்றி வரும் விக்ரம், அடுத்து தன்னை வைத்து தில், தூள் படங்களை இயக்கிய தரணியின் இயக்கத்தில் ராஸ்கல் என்ற படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார். அவர்கள் கூட்டணியில் முன்பு வெளியான படங்களைப்போன்று இதுவும் ஒரு அதிரடி ஆக்சன் படம்தானாம்.

இந்த சேதியறிந்த த்ரிஷா, ஏற்கனவே விக்ரமுக்கு ஜோடியாக சாமி, பீமா ஆகிய படங்களிலும், தரணி இயக்கத்தில் கில்லி, குருவி ஆகிய படங்களிலும் நடித்திருப்பதால், இந்த முறையும் தனக்கே சான்ஸ் தர வேண்டும் என்று உரிமையோடு சான்ஸ் கேட்டாராம். அவரைப்போலவே, தற்போது சிம்புவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட ஹன்சிகாவும் இந்த படத்தில் நடிப்பதற்கு தீவிரமாக முயற்சி எடுத்தாராம்.

இதையடுத்து, த்ரிஷாவா? ஹன்சிகாவா? என்று விக்ரமுடன் கலந்து பேசிய தரணி, இப்போது த்ரிஷாவை விட ஹன்சிகாவுக்கே மார்க்கெட் இருப்பதால் இருவரும் ஒருமனதாக ஹன்சிகாவையே ஒப்பந்தம் செய்யலாம் என்று பேசி முடிவெடுத்து விட்டார்களாம். இதனால் தனது ஆஸ்தான ஹீரோவும், அபிமான டைரக்டருமே தன்னை கழட்டி விட்டு விட்டார்களே என்று அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் த்ரிஷா.
அப்பா கமல் படத்தில் பின்னணி பாட ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்!

கமல் நடித்த தேவர்மகன் படத்தில், இளையராஜாவின் இசையில் பொற்றிப்பாடடி பெண்ணே என்று சிவாஜியை புகழ்ந்து பாடும் பாடலில் ஸ்ருதிஹாசனும் குழந்தை குரலில் பாடினார். அதையடுத்து இளையராஜா உள்பட பல இசையமைப்பாளர்களின் இசையிலும், பின்னணி பாடி வந்திருக்கிறார். அந்த வகையில, சிறு வயதில் இருந்தே இசையில் அதிக ஈடுபாடு கொண்டவரான ஸ்ருதிஹாசனை, தனது உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவே அறிமுகம் செய்தார் கமல்.

மிகப்பெரிய என்ட்ரியை அவர் கொடுத்தபோதும் அதன்பிறகு ஸ்ருதிஹாசனுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மாறாக, நடிப்பதற்கே சான்ஸ் கிடைத்தது. அதனால் லக் என்ற இந்தி படத்தில் நடிகையாக பிரவேசித்த அவர் தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகையாகி விட்டார். இந்த நிலையில், தனது தந்தை கமலுடன் நடிப்பதற்கு இரண்டு முறை வாய்ப்புகள் தேடிவந்தும், கால்சீட் இல்லை என்று தவிர்த்து விட்டார் ஸ்ருதி.

இருப்பினும், அப்பாவுடன் நடிக்கும் சூழ்நிலைகள் அமையாதபோதும், அவர் நடிக்கும் படத்தில் தனது பங்களிப்பை செலுத்த ஆசைப்படுகிறார் ஸ்ருதி. அதனால் விஸ்வரூபம்-2 படத்தையடுத்து கமல் நடிக்கும் உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பு கேட்டுள்ளாராம் அவர். ஆக, சமீபத்தில் என்னமோ ஏதோ, மான்கராத்தே படங்களில பின்னணி பாடிய ஸ்ருதிஹாசன், விரைவில் கமல் படங்களிலும் பின்னணி பாடுவார் என்று தெரிகிறது.
மீண்டும் கமலுடன் நடிக்க மறுத்த ஸ்ருதிஹாசன்!

விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் இருக்கும் கமல், அடுத்து தன்னை வைத்து ஏற்கனவே சதிலீலாவதி என்ற படத்தின் கன்னட ரீமேக் படத்தை இயக்கிய ரமேஷ்அரவிந்த் தமிழில் இயக்கும் 'உத்தமவில்லன்' படத்தில் நடிக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் சில டீன்ஏஜ் பெண்களின் தந்தையாக நடிக்கிறாராம் கமல். அதனால், அவரது மகளான ஸ்ருதிஹாசனும் ஒரு கேரக்டரில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று அவரிடம் பேசினார்களாம். ஆனால், தெலுங்கு, இந்தி என்று இந்த ஆண்டு முழுக்க தனது கால்சீட் டைரி புல்லாக இருப்பதாக சொல்லி, தனது இயலாமையை தெரிவித்து விட்டாராம் ஸ்ருதி. ஆக, இரண்டாவது முறையாகவும் கமல்-ஸ்ருதி இணைந்து நடிப்பது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தள்ளிப்போய் விட்டது.

இதனால் மார்க்கெட்டில் இருக்கும வேறு சில இளவட்ட நடிகைகளை கமலின் மகள்களாக நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. மேலும், சமீபகாலமாக நடிப்பதோடு தனது எல்லையை நிறுத்திக்கொள்ளாமல், இயக்கத்திலும் ஈடுபட்டு வரும் கமல், இந்த உத்தமவில்லன் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதும் பொறுப்பையும் ஏற்றுள்ளாராம்.

பறவை முனியம்மாவுடன் கலக்கும் சிவகார்த்திகேயன்
மான் கராத்தே படத்தில் பறவை முனியம்மாவுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் தற்போது தான் நடித்துவரும்மான் கராத்தேபடத்தில் பீட்டர் என்ற நகரத்து வாலிபனாக நடிக்கிறார்.
இதற்காக தனது ஹேர்ஸ்டைல், நடை, உடை எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். காரணம் இந்தப்படத்தின் பீட்டர் கேரக்டர் அதையெல்லாம் பிரதிபலிக்கிறதாம்.
இதற்கேற்ற மாதிரி படத்தில்ராயபுரம் பீட்டருஎன்கிற ஓப்பனிங் பாடலும் வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் திருக்குமரன்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப்பாடலை பரவை முனியம்மாவுடன் சிவகார்த்திகேயனும் இணைந்து பாடியுள்ளார், இந்தப்பாடலை ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் ஐந்து நாட்களில் படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

No comments:

Post a Comment