எந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {குரும்பசிட்டி } போலாகுமா!!!

யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசபைப் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் குரும்பசிட்டி, சுமார் 1.5 சதுரக் கிலோமீற்றர் பரப்புடையது வடக்கே பலாலி விமானத்தளமும், கிழக்கே வயாவிளான், தென்கிழக்கே புன்னாலைக்கட்டுவன், தெற்கே குப்பிளான், ஆகிய கிராமங்களும் எல்லைகளாகவுள்ளன. இப்பகுதி தொன்றுதொட்டு மயிலிட்டி தெற்கு என வழங்கப்பட்டது.
 இக் கிராமம் 1987 இல் சுமார் 730 குடும்பங்களை கொண்டிருந்தது.
கல்வியில் மேலோர், கலைவல்லாளர், கமத்தொழில்
செல்வர்,
கைத்தொழில் வித்தகர் பலரும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தம் கடின ௨ழைப்பினால் உயர்ந்து சுயமாகவே ஒரு எழில் மிகு நகரமாக வளர்ந்து வந்தது

 விநாயகர் ஆலயம் சார்ந்த ஒரு சிறு காணி குரும்பசிட்டி எனப் பெயர் பெற்றிருந்ததுஇங்கு குறும்பர் என்று ஒரு இனத்தவர் பாளையம் அமைத்து வாழ்தனர் என்றும் . அதனாலே இப்பெயர் வந்தது என்றும் கர்ணபரம்பரைக் கதை ஒன்று உண்டு, குறும்பயிட்டி, குறும்பசிட்டி, குரும்பசிட்டி என்று இப்பெயர் மருவிவந்ததாகவும் சொல்லப்படுகிறதுஇன்று குரும்பசிட்டியிலுள்ள ஏனைய குறிச்சிப் பெயர்கள் வவுணத்தம்பை, வளப்புலம், மயிலியகலட்டி, மாயெளு பயிற்றிக்கலட்டி,சத்தியகலட்டி, தேவசூரி, கொக்கன், வள்ளுவன்காடு, பரத்தைப்புலம், வேளான்புலம், இடையாம்புலம் போன்றனவாகும்.
செம்மண்னின் செழுமையும் கிணற்று நீரும் இங்கு விவசாயக்குடியிருப்புகள் தோன்றக்காரணமாயின. இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் வரையும் ஏன் அதற்கு பின்பும் விவசாயமே முக்கியதொழிலாக விளங்கிவந்தது. இவ் விவசாயியற்கு 19ம் நூற்றாண்டு வரை கல்வியறிவு கிட்டவில்லை என்று தெரிகிறது. குன்றும் குழிகளும் நிரம்பிய கல் ஒழுங்கைகளும் பற்றைக்காடுகளும் மண்குடிசைகளும் கொண்ட ஒரு பிந்தங்கிய கிராமமாக எமது ஊர்  விளங்கிவந்ததுசமூக அமைப்பை நோக்கின் காணிகளினதும், விவசாய
நிலங்களினதும் உடைமையாளர்களாக உயர் வகுப்பினர் விளங்க, அவர்களது குடிமக்களாக, நிலபுலமற்ற, அடிப்படை வாழ்க்கை வசதிகளற்ற நாளாந்தக் கூலிகளாகச் சிறுபான்மை மக்கள் வாழ்ந்து வந்தனர்.
யாழ்ப்பாண அரசுக்காலத்திலிருந்து கிராமிய மட்டத்தில் நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள உடையார், முதலியார் போன்ற பதவிகள் இருந்து வந்தன போதுக்கேயர்ஒல்லாந்தர்கள் இக்கிராமிய நிர்வாக அமைப்பை ஏற்றுச் சுதேசமொழிகளின் மூலம் நிர்வாகம் நடத்தினர். இன்நிர்வாகப்பரைம்பரைகள் தொடர்ந்தன. 1979ல் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டபோதும் உடையர், முதலியார் பரம்பரையினர் காணப்பட்டனர். சமூகத்தில் மேற்தட்டு வர்க்கட்தினராக வாழ்ந்த இவர்களது குடும்ப உறவுகள் பெரும்பாலும் ஏனைய கிராமங்களில் உள்ள இவ்வர்க்கங்களுடனேயே இருந்துள்ளன எனலாம். இறுக்கமான வர்ணப்பாகுபாட்டின் வெளிப்பாடு இதுவாம்.
               இம்  மேற்தட்டு வர்க்கத்தினர் சைவசமயப்பற்றுமிக்கவர்களாக விளங்கினர். திண்னைப்பள்ளிகளை  அமைத்தோ அல்லது அவற்றுக்கு ஆதரவளித்தோ நிர்வாகக்கடமைகளைச் செய்யக்கூடிய அளவுக்குக் கல்வியறிவு உடையவர்களானார்கள், இவ்வாறான ஒரு முதலியார் பரம்பரை குரும்பசிட்டியிலும் காணப்பட்டுவந்தது.
19ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் 
1.கிராமிய நிர்வாகக்கடமைகளை மேற்கொண்ட முதலியார் பரம்பரை
2.  நிலபுலமுடைய உயர்சாதி விவசாயிகள்
3.  விவசயக்கூலிகளாகவேலைசெய்யும் குடிமக்கள் என
இனம் காணக்கூடிய சமூக அமைப்பு குரும்பசிட்டியில் காணப்பட்டுள்ளது. 1833இல் ஆங்கிலேயர் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்கியதும் நிர்வாகக்கடமைகளைச் செய்வதற்கோ அல்லது அரச பதவிகளைப்பெறுவதற்கோ ஆங்கில அறிவு இன்றியமயாததாகியது. எனவே திண்ணைப்பள்ளிகளில் தமிழ்கற்ற  மேற்தட்டு வர்க்கத்தினரில் ஒரு சாரார் ஆங்கிலம் கற்கத்தலைப்பட்டனர். குரும்பசிட்டியில் 1850களில் பிறக்கிறாசி சின்னக்குட்டி, சிறாப்பர் கனகசபாபதி, கச்சேரி லிகிதர் மேவின் முருகேசு, முதலித்தம்பி முதலானோர் அரிவுடைய்வர்களாகக் காணப்பட்டனர்எமதூரைச் சேர்ந்த எஸ். ஆர் முத்துக்குமாரு முதலியாரும்  அவரது தம்பியார் வி.எம். முத்துக்குமாரு முதலியாரும் யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூறியில் பதிதொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிறந்த ஆங்கிலப்புலமையுடய முதன்மயான மாணவர்களாகத்தன்னுடன் கற்றனர் என நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் 23.08. 1942 ல் ஈழகேசரியில் கட்டுரை வரைந்துள்ளார். எஸ்.ஆர். முதுக்குமாரு பற்றி மேலும் அவர் குறிப்பிடுவதாவது "சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி, தொகுக்கப்பட்டபோது அதற்கு துணை ஆசிரியராக விளங்கினார். சுமார் 23,000 ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ப்பதங்கள் தேடியெடுத்து ஆங்கில தமிழ் அகராதியொன்றை தொகுக்கும்படி தன்னிடம் வழங்கினார். என்கிறார். 1890களில் ஆர். ஆர்.நல்லையா சகோதரர்கள் யாழ்.மத்தியகல்லூரியில் ஆங்கிலக்கல்வி பெற்றுப் புகழ் பூத்தமாணவர்களாக விளங்கியுள்ளர். ஆங்கிலக்கல்வி பெற்று அரசாங்க உத்தியோகம் நாடிய இத்தகயவர்களை விட மறு பிரிவினர் திண்ணைப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியைத் தொடர்ந்துள்ளனர். சோமனாதமுதலியார் வழிவந்து 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த நன்னித்தம்பியின் புதல்வராக 1861ல் பிறந்த சின்னத்தம்பி ( சின்னச்சட்டம்பி ) தமிழ் கற்றுச் சிலகாலம் தமிழ் ஆசிரியராக விளங்கியுள்ளார். இவரது உறவினரான பொன்பரமானந்தர் தமிழ் கல்வி பெற்று 1890இல் ( 11வயதிலேவீமன்காமம் சென்று கல்வி கற்றுள்ளார் இவற்றிலிருந்து 19ஆம் நூற்றாண்டில்  முதலியார் பரம்பரையினரின் சூழலில் திண்னைப்பள்ளிகூடம் செயற்பட்டதனை ஊகிக்க முடிகிறது. இவர்களில் வேறொரு சாரார் ஆங்கிலக்கல்வியை பெறவிரும்பினர். எனினும் கிறிஸ்தவப்பாடசாலைகளுக்குச் செல்ல விரும்பவில்லை. அத்தகயவர்கள் சுண்ணாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி,(1910இன் பின்மகாஜனாக்கல்லூரி, யாழ்.இந்துக்கல்லூரி போன்ற சைவப்பாடசாலைகலுக்குச் செல்லலாயினர்.
 மேற்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டும் கல்வி என்றிருந்தநிலைபொன்பரமானந்தர் அவர்களது பாடசாலை 1900இல் ஆரம்பித்ததும் பெருமாற்றம் கண்டது. விவசாயிகள், தொழிலாளிகளுடைய பிள்ளைகள் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இது குரும்பசிட்டியைப் பொறுத்தவரை ஒரு அறிவுப்புரட்சியாகியது. பல தமிழ் ஆசிரியர்களை உருவாக்கியது. அயற்கிராமமான கட்டுவனில் 1922இலும் சைவப்பாடசாலை தோன்றின. எனவே கல்விச்செயற்பாடுகளில் இவ் அயற்கிராமங்கள் எமது கிராமத்தைவிட சுமார் 20 ஆண்டு இடைவெளியை சந்தித்தமை காண்கிறோம்.
எமது மக்கள் சமூகநாட்டமுடையவர்களாக, கிராம அபிமானமுடைய்வர்களாக திகழ்தனர்.இதன் பேறாக எமது கிராமம் பல்வளமும் நிறைந்த ஒரு சிறு நகராக வெகுவிரைவில் உயர்ச்சி பெற்றது. எம் மக்கள் எங்கு சென்றாலும் நன்மதிப்பைப் பெறக்கூடிய ஒரு பண்பாடு உருவாகியது.
-நன்றி,குரும்பசிட்டி


No comments:

Post a Comment