ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :

 ஒரு நடிகர் நடிக்க இருந்த படத்தில் திடீரென அவர் விலக ,அவருக்கு பதில்வேறு நடிகர்கள் நடித்த படங்கள் ஏராளமாய் சொல்லலாம்.சில படங்கள் வெறும் கதை மட்டும் பிடிக்காமல் மறுத்திருப்பார்கள்.இந்த பதிவு ஓரளவு அந்த படங்களை பற்றி சொல்லும் .ஒருவர் நடிக்க மறுத்து விலக பல காரணங்கள் இருக்கலாம்.இறுதியில் அந்த நடிகர் நடிக்காமல் விட்ட படம் வெற்றி அடைந்ததா என்பதே முக்கியம்.ஒரு சின்ன உதாரணம்.பாக்கியராஜ் மகன் சாந்தனு இதுவரை ஒரு ஹிட்டும் கொடுக்கவில்லை.சூப்பர் ஹிட்டான களவானி படம் அவர் நடிக்க மறுத்த படம்.கிராமத்து படம் தனக்கு ஒத்து வராது என்று ஒதுக்கிய படம்.

 எம் ஜி ஆர் நடிக்க மறுத்த படங்கள்:
கர்ணன்: சிவாஜிக்கு முன் கர்ணனாக நடிக்க முதலில் அணுகப்பட்ட நடிகர்
எம்.ஜி.ஆர். ஆச்சர்யமாக உள்ளது இல்லையா? அண்ணா இதிகாச படங்களில் நடிக்க வேண்டாம் என்று எம்.ஜி,ஆரை கேட்டு கொண்டதால் அவர் விலக ,பிறகே சிவாஜி நடித்தார்.ஆனாலும் அது அந்த காலத்தில் தோல்வி அடைந்து இன்று வெற்றி பெற்றது வேறு கதை.
சிவந்த மண் : இந்த படம் வேறு பேரில் எம்.ஜி.ஆரை வைத்து துவங்கப்பட்டு பின் சிவாஜியை வைத்து சிவந்த மண் என்று பெயர் மாற்றம் கண்டது.
இது போல் சில படங்கள் எம்.ஜி.ஆர் தனக்கு இந்த பாத்திரம் ஒத்துவராது தம்பி சிவாஜி கணேசனே இதற்க்கு சரியான தேர்வு என்று கை காட்டிய படங்களும் உண்டு.

 சிவாஜி நடிக்க மறுத்த பழைய படங்கள் பற்றி தெரியவில்லை. ஆனால் அவ்வை ஷண்முகி(ஜெமினி கணேசன்),நட்புக்காக (விஜயகுமார்) போன்ற படங்கள் அவர் மறுத்தவை.
ரஜினி நடிக்க மறுத்த படங்கள் :  முதல்வன்,மக்கள் ஆட்சி,ஜக்குபாய்
கமல் : ஜென்டில்மேன் ,எந்திரன்,பச்சை கிளி முத்துச்சரம்,
எந்திரன் கமல் நடிப்பில் எடுக்க பட்ட புகை படங்கள் :

 விஜய்: முதல்வன், உன்னை நினைத்து ,சண்ட கோழி,தூள்,வேட்டை

அஜித்: இவர் மறுத்த படங்கள் எல்லாம் சூரியாவை வளர்த்து விட்ட படங்கள் . நேருக்கு நேர்,நந்தா,கஜினி,நான் கடவுள்,நியூ .
சூர்யா : நண்பன் விஜயிடம் இருந்து இவரிடம் வந்து மீண்டும் விஜய்க்கே சென்றது,வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் பிரியாணி சூர்யா நடிக்க இருந்து இப்போது கார்த்தி நடிக்கிறார்.முகமூடி படமும் இவர் நடிக்க வேண்டியது.அவன் இவன் படத்தை சூர்யா கார்த்தி இருவரை வைத்து எடுக்க தான் பாலா முதலில் திட்டமிட்டார்.
சிம்பு : பாய்ஸ்,கோ,நண்பன் .
விமல் நடிக்க மறுத்த வேடத்தில் தான் எங்கேயும் எப்போதும் படத்தில் சர்வானந் நடித்தார்.
சத்யராஜ் - சிவாஜி படத்தில் சுமன் வேடத்தில் நடிக்கவும்,தசாவதாரம்,விருமாண்டி போன்ற படங்களில் நெப்போலியன் ஏற்ற வேடத்தில் சத்யராஜ் மறுத்துள்ளார்.


சில படங்களில் இப்போதும் சில நடிகர்களை பார்க்கும் போது  இவரை தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியாது என்று நாம் நினைப்போம்.ஆனால் முதலில் அனுகப்பட்டவரே  நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார்த்தால் விடை தெரியவில்லை.இதனால் இந்த படங்கள் வெற்றி தோல்வி மாறி இருக்குமா

No comments:

Post a Comment