தெய்வமும்...... :- ஆக்கம்- அழ.பகீரதன்

காதில் தோடில்லை 
கையில் வளையல் இல்லை 
காலில் வலிமை இல்லை 
முகத்தில் ஒளிர்வு இல்லை 
அகத்தில் நிறைவு இல்லை 
அவளிடம் நானோ 
எப்படிக் கேட்பேன் 
அடைவு வைத்த நகையை 
மீட்குமாறு... 
நானோ
வட்டிக் கடைத் தொழிலாளி
.. 
அவளோ..
நடையில் தளர்வுடன்
உடையில் ஏழ்மையுடன் 

குரலில் வெறுமையுடன்..
அரசு தந்ததில்லை பணம்
கடன் பட்டே கட்டினம் வீடு
மீளாக் கடன் சுமைக்குள் வாழ்வு
நகை விற்றுப் பணம்
மிஞ்சுமென்றால்
அப்படியே செய்யலாம்
என்றாள் அவள்..!
வள்ளல் தன்மை
வாய்த்தவர் யாரும்
வழங்காரோ தர்மம்..
அறம் காக்க என்றமர்ந்த 
அம்மன் முகம் மலர்ந்து 
அருளை வழங்க என்று 
அள்ளிப் பணம் கொடுத்திட 
ஆயிரம் பேர் உளர் 
தங்கமாய் மின்னும் 
அம்மனது மேனி 
அந்த அம்மன் மனமிரங்கி 
இந்த பெண்ணின் துயரம் 
போக்க வருவாரோ 
அம்மன் அருள் 
அந்த செழுமையில் 
வளம் கொழிக்கும் 
மாந்தர்க்கு என 
மட்டுந் தானோ
ஏனோ இந்த வேற்றுமைகள் 
அள்ளி வழங்கினால் தானோ 
அம்மன் மனமும் குளிரும்.. 
கடன் சுமைக்குள் 
வீழ்ந்த மனிதரிடம் 
அறா வட்டி பெறும் 
அவர்க்காய் தானோ 
தெய்வமும் அருளும்!




"இப்படியும்...''கவிதைத் தொகுப்பிலிருந்து

No comments:

Post a Comment