ஒளிர்வு-(39)- தை,2014

வணக்கம், அனைவருக்கும் நேரம் பொன்னானது.வள்ளுவன் குறளில் "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று." என்று அதாவது பேசுவதற்கு நல்ல பல விடயங்கள் இருக்கும்போது அனாவசியப் பேச்சுக்கள் பேசுவது  -சுவை மிகுந்த கனிகள் இருக்க அதைவிடுத்து கசக்கும் காய்களை நாடுவது போன்றது, எனக் கூறுவதை நாம் நோக்குகிறோம்.அதேபோல் அனைவருக்கும் பயன்படு வகையில் பயனுள்ள விடயங்களுடன் உங்கள் நேரத்தை நற் பலனுடன் கழியும் வகையில் உங்களை சந்திப்பதில் தீபம் சஞ்சிகை மகிழ்வடைகிறது. சிந்தனைஒளி தை இதழ் தரும்  பொன்மொழிகள் எவ்வளவு தான் பந்த பாசமானாலும்...

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?

இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவித மான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண் டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய் களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத் தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த் தமான அக்கறையும் விலகி...