தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகள் , தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது.
கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது.
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
"தீபத்திற்கும் மனுவேந்தனுக்கும் மற்றும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது உளம் கனிந்த தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!"
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழர்களின் உள்ளத்தைப் போல்!வருங்காலம் தமிழர்களுக்கு ஒளிமயமான காலமாக அமையும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் , தரணி எங்கும் வாழும் தமிழர்களுக்கும் நேச உணர்வுடன் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteவாழ்க வையகம்........
ReplyDeleteவாழ்க வையம்............
வாழ்க வளமுடன்......
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிவுக்கு ஒளியூட்டும் தீபம் இணையத்த்திற்கும் உலகம் வாழ் தமிழருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன் இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்! மனங்களில் மகிழ்ச்சி பொங்குக! மண்ணில் மானுடம் மலர்க!
ReplyDelete