உறவினில் திழைத்த கனவினில்
எழுத விடுங்கள்
அன்புடன் உன்னை நோக்குவதையும்
ஆவலுடன் நீயெனைப் பார்ப்பதையும்
இன்புடன் நாளைய உயர்விற்காய்
எமதிருப்பினை நிலை நிறுத்திட
ஏங்கிடும் எங்கள் ஏக்கங்களை
எழுத விடுங்கள்
சாதியம் எம்மை நொருக்கிடும் இனபேதம் எம்மைச் சிதைத்திடும்
மொழி எமது உறவை குலைத்திடும்
இன்றைய காலம் ஒழிந்திட
எங்கள் நினைப்பினை
நோக்கினை
எழுத விடுங்கள்
இன்றெம் உறவினை
புதுப்பிப்பதாய் வந்துபோகிறார்
சந்தை வேண்டும் அவர்க்கு
சிந்தையில் அதனை நிறுத்தியே
அமைதி வேண்டி நிற்கின்றார்
பிச்சை தந்தே நிற்கின்றார்
எமதுழைப்பில் நாம் வாழ்வோம்
உயர்வோம் என்றும் மகிழ்வோம்
எனும் என் நினைப்பை
என் முயல்வை
எழுத விடுங்கள்.
-அழ பகீரதனின் 'எப்படியெனினும்... 'கவிதைத் தொகுப்பிலிருந்து.
கவிதை பிரசுரித்தமை நன்று. இந்தக்கவிதையை பே,விஜயநாதன் குரலில் கேட்டபோது கவிதை உயிர்ப்பு பெற்றதை உணர்ந்தேன்,.அழ. பகீரதன் என்பதே சரியான பெயர், பண்ஒளியிலும் தவறுதலாக பகீதரன் என வந்துள்ளது.
ReplyDeleteஇது ஒரு புனை கவியல்ல,சுதந்திரமற்ற சூழ்னிலைஇல் வாழும் ஒரு எழுத்தாழனின் ஏக்கம் என எண்ணுகிறேன்.
ReplyDelete'சந்தை வேண்டும் அவர்க்கு'......
ReplyDeleteஉலகமென்ன,உறவுகளே லாபமிருந்தால் தானே உறவாடுகிறார்கள்.தேவை முடிந்ததும் good bye