உண்மைகள்
கசக்கத்தான்
செய்யும்
நன்மைகள்
விளையும்
என்ற
எதிர்பார்ப்பில்
தான்
எல்லாம்...
யாழ்ப்பாணத்துக்
கலாச்சாரம்
என்று
வாய்
கிழியக்
கத்தல்
எதிர்
வீட்டில்
கலியாணம்
எடுப்பாய்
காட்டி
செய்தனர்
என்றால்
தன்வீட்டில்
தன்பிள்ளைக்கு
இன்னும்
அதிகம்
எடுப்பாய்
காட்டச்
செய்வதுவோ
எங்களது
கலாச்சாரம்?
முத்துப்
பந்தலும்
மூக்கில்
விரலை
வைக்கும்
தடபுடல்
வீடியோப்
பதிவும்
உடன்
வருமோ
ஆயுளுக்கு
கடன்
பட்டு
சோக்கு
காட்டிப்போட்டு
வீட்டில்
வரிசையாய்
கடன்
கொடுத்தவர்
நின்றால்
அக்கம்
பக்கம்
என்ன
நினைக்கும்
பெருமை
எதுவென
அறியாப்
பெருமையுள்
ஆட்பட்டு
ஏனிந்த
ஆட்டம்
பாட்டம்
கூத்து...
மணம்முடித்து
வைத்து
உமக்குள்
மகிழும்
பெற்றோரே
கூடி
இணைந்த
மணமக்கள்
தமக்குள்
கூடி
மகிழ்வு
கூட்டவென்று
ஒரு
ஐம்பதினாயிரம்
கைக்குள்
திணித்து
கனிமூன்
சென்றுவருக
என்று
வழியனுப்பி
வைக்கும்
பழக்கம்
உமக்குள்
உள்ளதுவோ...
இல்லை..
இல்லை....
என்றால்
ஏனுந்த
கலாச்சாரம்...?
-அழ.
பகீரதனின் எப்படியெனினும் கவிதைத்
தொகுப்பிலிருந்து.
0 comments:
Post a Comment