சூர்யா படத்துக்கு தலைப்பு மாறுகிறது!
லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படத்துக்கு அஞ்சான் என்று பெயர் வைத்து விட்ட நிலையில், மும்பை, ஆந்திரா என்று படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
திமிரு, சண்டக்கோழி, ரன் என்று பல ஆக்சன் படங்களை இயக்கியவரான லிங்குசாமி, இப்படத்தையும் ஏற்கனவே சூர்யா நடித்து வெளியான சிங்கம் படத்துக்கு குறைவில்லாத ஆக்சன் கதையில் இயக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், சமீபகாலமாக, அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களே ஒரே படத்தை நம்பாமல், ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு மாறியிருப்பதால், இந்த படத்தை முடிக்கும் முன்பே, வெங்கட்பிரபு நடிக்கும் படத்திலும் நடிக்கிறாராம் சூர்யா.
ஆனால், ஏற்கனவே அதற்கான கதை விவாதம் முடிந்து விட்ட நிலையில், படத்திற்கான தலைப்பு விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.
கமல் நடித்த கல்யாணராமன் என்ற தலைப்பை வைத்தால் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று முன்பு முடிவு செய்திருந்த வெங்கட்பிரபு. அதையடுத்து அந்த தலைப்பு குறித்தும் முன்பு அப்படத்தை தயாரித்த நிறுவனத்திடனம் பேச இருந்தார்.
திடீரென்று அந்த தலைப்பு ரொம்ப பழசாக இருக்கும் என்று சில அபிமானிகள் கருத்து சொன்னதையடுத்து, லேட்டஸடாக வேறு நல்ல தலைப்பு வைக்கலாம் என்று கூறி விட்டாராம் சூர்யா.
அதனால், சிம்பு நடிக்கும் படப்பிடிப்பை நடத்திக்கொண்டே டைட்டில் விவாத்திலும் கெளதம்மேனன் ஈடுபட்டு வருவதுபோல், சூர்யா நடிக்கும் படத்தையும் தொடங்கியுள்ள வெங்கட்பிரபு, அவ்வப்போது டைட்டீல் பற்றியும் டிஸ்கஸ் செய்து வருகிறாராம்.
அஞ்சான் மாதிரி நறுக்கென்று இருக்க வேண்டும் என்று சூர்யா தரப்பு கூறியிருப்பதால், வீரம், ஜில்லா போன்று மூன்று, நான்கு எழுத்தில் தலைப்பு யோசித்து வருகிறார்களாம்.
‘13-ம் பக்கம்
பார்க்க’
படத்தில்
பேயோட்டும்
பெண்ணாக
நடிகை
நளினி
இன்று உலகம் முழுவதும் திகில் படங்களின் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களின் தேவைக்காக உலக மொழிகளில் பலர் திகில் படங்களை உருவாக்கி வருகின்றனர். அதேபோல தமிழில் இதுவரை சொல்லாத / வெளிவராத பரபரப்பான அதிர்ச்சியூட்டும் திகில் படத்தை உருவாக்கி வருகின்றனர்.
ஒரு புத்தகத்தில் உள்ள அதுவும் 13-ம் பக்கத்தில் உள்ள ஒரு சாத்தான் வெளிவந்து செய்யும் அட்டகாசத்தை படத்தின் கருவாக வைத்து ‘13-ம் பக்கம் பார்க்க’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர். ஆர்.வி.கே.பிலிம் மீடியா சார்பில் ஆர்.வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். பல வெற்றிப்படங்களுககு கதை, வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றிய புகழ்மணி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
பயங்கர ஆவிகளை ஏவிவிடுவது, பேயோட்டுவது, பில்லி சூனியம் செய்வது போன்ற முரட்டுத்தனமாக கதாபாத்திரத்தில் நளினி நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 40 அடி உயர முனீஸ்வரர் சிலை உள்ள கோவிலில் படமாக்கப்பட்டது. அப்போது நாயகி ஸ்ரீபிரியங்காவை ரத்தக்காட்டேரியிடமிருந்து காப்பாற்ற நளினி மந்திர உச்சரிப்பு செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதை வேடிக்கைப் பார்க்க வந்த பெண்களுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே சாமி வந்து ஆட ஆரம்பிக்க படப்பிடிப்புக் குழுவினர் பரபரப்பாகிவிட்டனர்.
இப்படத்தில் ரத்தன் மௌலி, ராம் கார்த்திக் இருவருடன் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ராம்ஜி, டெல்லி கணேஷ், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா, சிங்கப்பூர் துரைராஜ் ஆகிய தெரிந்த முகங்களும் நடிக்கின்றனர்.
சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கும் இப்படத்தின் இசையை பிப்ரவரியில் வெளியிடவுள்ளனர்.
இவரைத் தெரியுமா?
இவர்தான் மதுரைக்காரன் சூரி.2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார்.
இதுவரையில் 47 வது தமிழ் திரைப்படமான பெயர் வைக்காத பாண்டியராஜ் ஜின் படத்தில் நடித்துக்கொண்டிருப்பதுடன் 2012இல் வெளிவந்த சுந்தர பாண்டியன் திரைப்படத்தின் நகைச்சுவைக்கான விஜய் விருதினையும் தட்டிக்கொண்டவர்.
அத்துடன் 2012 இல் வெளிவந்த பாகன் திரைப்படத்திற்காக ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளிவந்த 'சிம்பா சிம்பா' என்ற பாடல் மூலம் ஒரு பாடகராகவும் கருதப்படுகிறார்.
இருந்தாலும் இவரும் வளர்ந்துவரும் ஒரு தமிழ் நடிகரே.
இருந்தாலும் இவரும் வளர்ந்துவரும் ஒரு தமிழ் நடிகரே.
No comments:
Post a Comment