நபிகள் - ராமன்

நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் பலர்.சிலர் உறவுகளாக இருக்கலாம்.வேறு சிலர் புதியவராகவும் இருக்கலாம்.நாம் அவர்களுடன் பேசும் வகையிலேயே எமது உறவும்,நட்பும் விருத்தியடைகிறது.ஆனால் நாம் காண்போரை எப்படிக் கடித்து ருசி பார்க்கலாம் என்றே எண்ணுகிறோம்.அவை எத்தனை காலத்திற்குத்தான் செல்லுபடியாகும் என்பது அவர்களினை விட்டு சமுதாதாயம் விலகிச் செல்லும்போதே அவர்களினால் உணர முடியும்.அடுத்தவர் மனம் நோகாது பழகலை நோக்கமாக  சமய நூல்கள் கூறியுள்ள இரு சம்பவங்களை உற்று நோக்குவோம்.

குகன் ராமனை சந்திக்கும் போது தேனும் மீனும் கொண்டு வந்தான். அதை ராமன் இவற்றை அருந்தினேன் என்று சொல்லி இந்த உணவு மிகவும் புனிதமானது என்று புகழ்ந்து சொன்னதாக இராமாயணத்தில் வருகிறது.

குகன் மனசு நோகக் கூடாது என்று ராமன் நினைத்ததாக சொல்கிறது.


ஒருமுறை நபிகளிடம் ஒரு பெண் திராட்சைப் பழம் கொண்டு வந்து
நீங்கள் மட்டுமே உண்ணுமாறு வேண்டினாள். அவரும் எடுத்து உண்ண
ஆரம்பித்து பின் யாருக்கும் பங்கிட்டுக் கொள்ளாமல் முழுவதுமாக சாப்பிட ஆரம்பித்தார். உடனிருந்தவர்கள் ஏன் எல்லோருக்கும் பங்கிடாமல் சாப்பிடுகிறார் என யோசித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின் அந்த பெண்மணி சென்றவுடன் உடனிருந்தவர்கள் ஏன் எல்லோருக்கும் கொடுக்கவில்லை எனக்கேட்க ஒரு பழத்தை எடுத்து ஒருவரிடம் கொடுத்து உண்ணுமாறு சொன்னார். அதை சாப்பிட்டவர் தூ புளிக்கிறது எனத் துப்பினார். அந்த பெண் முன்னால் இது போல் நடந்து விடக்கூடாது என்பதால் யாருக்கும் கொடுக்கவில்லை என்றார்

இரண்டு இடங்களிலும் ஒரே சிந்தனை தான். மற்றவர் மனம் கஷ்டப்படக்கூடாது என்பது தான்

No comments:

Post a Comment