மருத்துவ செய்திகள்

நீரிழிவு; பழங்களை சாப்பிட்டார் தீர்வு, ஜூஸ் என்றால் ஆபத்து

திராட்சை இனிப்பான பழமென்றாலும், இனிப்பு நீர் ஆபத்தைக் குறைக்க அது உதவுகிறது
பழங்களை தினமும் உண்பதால் டைப் 2 டயபடீஸ் எனப்படும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
சுமார் இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான 25 வருட தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.
பழங்கள் அதிலும் குறிப்பாக, திராட்சை, ஆப்பிள், புளூபெர்ரி போன்றவற்றை சாப்பிட்டு வருபவர்களுக்கு சர்க்கரை வியாதி வரும் ஆபத்து 25 சதவீதத்தால் குறைகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தண்ணீரை மருந்தாக ( வாட்டர் தெரஃபி )பயன்படுத்தும் முறை.
தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில், பல் கூட விளக்காமல் சுமார் 1.50 லிட்டர் தண்ணீர் அல்லது 6 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனால் போக போக சரியாகிவிடும்,இந்த முறையை செய்யும் முன்பும், செய்த பின்பும் ஒரு  மணி நேரத்திற்கு எதையும்    குடிக்கவோ மற்றும் சாப்பிடவோ கூடாது. முன்தின இரவு எந்த வகையான  போதை பொருல்களையும்  பயன்படுத்தி இருக்க கூடாது
முதலில் 1.50 லிட்டர் தண்ணீர் அருந்த  முடியாதவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக, அதே நேரத்தில் சிறிய இடைவெளி விட்டும்  குடிக்கலாம்.
தண்ணீர் மருத்துவத்தின் ( வாட்டர் தெரஃபிசில நன்மைகள்;
இதை சரியாக நாம் பின்பற்றினால்
 1,முகம்  பொழிவுபெரும்
2,
உடலில் கொழுப்புகள் நீங்கி உடலின் எடை குறையும்
3, உடல் புத்துணர்வு பெரும்
4, ஜீரணசக்தி அதிகரிக்கும்
5,
நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்
6, இரத்த அழுத்தம் நோய் நீங்கும் 6, சர்க்கரை வியாதி சரியாகும் மேலும் பல நன்மைகள் இதில் உண்டு

 டயட் சோடா என்றாலும் இதயத்திற்கு ஆபத்து

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டயட்  ‌சோடா குடிப்பதை  ஒரு பழக்கமாக வைத்திருப்பவர்கள்  தங்களை தாங்களேமாரடைப்பு நோய்க்கு உட்படுத்துகிறார்கள் என  கண்டறியப்பட்டு உள்ளது.
2011ல் நடந்த அனைத்து உலக மாரடைப்பு மாநாட்டில்   அமெரிக்க நாட்டு மாரடைப்பு சங்க ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை ஒன்றை  அளித்தனர். அந்த ஆய்வில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டது.பல இனத்தை  256 4 நபர்கள்  ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.அவர்களை அவர்கள்சோடா அருந்தும் முறையினை கொண்டு பல குழுக்களாக பிரித்தனர். சோடாவை ஒரு போதும் குடிககாதவர்கள். தினமும் சோடா குடிப்பவர்கள். டயட் சோடா குடிப்பவர்கள் , ரெகுலர்  சோடா    டயட் சோடா என மாற்றி மாற்றி குடிப்பவர்கள்  மிதமான அளவு குடிப்பவர்கள்   வழக்கமாக குடிப்பவர்கள்  என வகைப்படுத்தப்பட்டனர்.
y. ஆய்வில்  சோடா குடிக்காதவர்களை விட  தினமும் டயட் சோடா குடிப்பவர்களில்   48 விழுக்காடு நபர்கள்   9 ஆண்டு காலத்திற்குள் மாரடைப்புக்கோ அல்லது  இரத்த குழாய் சம்பந்தமான நிகழ்வுக்கோ உள்ளாகிறார்கள் என கண்டறிந்து உள்ளார்கள். ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களின் வயது பாலினம் புகை பிடிக்கும் பழக்கம்  உடற்பயிற்சி   மது பழக்கம்  இரத்த நாள நோய்கள்  இதய நோய்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்து கொண்டார்கள்.
எனவே சோடா  குடிப்பதற்கு பதிலாக தண்ணீர் அருந்துவது தான் சிறந்தது  எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 நா வறட்சிக்கு சில யோசனைகள்
சிலருக்கு எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் நா வறட்சி குறைவதில்லை. நா வறட்சியைப் போக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள்
நல்லெண்ணெய் மற்றும் தேங்காய்ப்பாலை வாயில் விட்டுக் கொப்பளித்துத் துப்புவதால் வாய் வறட்சியையும் நாக்கு வறட்சியையும் போக்கிக் கொள்ள முடியும். எள்ளை மென்று வெகுநேரம் வாயில் வைத்திருந்து பிறகு உமிழ்ந்து கொப்பளிப்பதும் நல்லதே.
இரவில் சாப்பிடும் உணவு மாவு வகைகளாகிய இட்லி, தோசை என்று அமைந்திருந்தால், நடு இரவில் நாக்கு உலர்ந்துபோய் அதிக தண்ணீரின் தேவையை உணர்த்தக் கூடும். மாவினுடைய அம்சம் ரத்தத்தில் கலந்திருக்கையில் அதை நீர்க்கச் செய்து, செரிமானம் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உடல் ஆட்படும்போது, நீரின்  தேவைக்கான உத்தரவை நீர் வேட்கையின் மூலம் உத்தரவிடுகிறது. அதனால் நீங்கள் மாவுப் பண்டங்களை இரவில் சாப்பிடாமல், கோதுமையை உப்புமா, சப்பாத்தி என்ற வகையில் மாற்றி அமைத்துச் சாப்பிடவும்.
பகல் வேளைகளில் ஆடை சத்து முழுவதும் எடுத்துக் கடைந்த தயிரில் நிறைய நீர் சேர்த்து, நீர் மோர் தயாரித்து கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை உப்பு சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. நல்ல குளிர்ச்சியானது. நா வறட்சியைப் போக்கும்.
இரவில் அதிகம் தண்ணீர் பருகினால், சிறுநீரின் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் தூக்கம் கெட்டுவிடக் கூடும். தூக்கம் குறைந்தால் அனேக உபாதைகள் தலைதூக்கிவிடும். அதனால் உலர்ந்து போய்விட்ட நாக்குக்கு வெட்டி வேர் போட்டு ஊறிய மண் பானைத் தண்ணீரை, நாக்கின் மீது படர விட்டு, சிறிதுநேரம் வைத்திருந்து சிறிய அளவில் பருகினால், மேலும் மேலும் ஏற்படக் கூடிய நாவறட்சியை எளிதில் போக்கிக் கொள்ளலாம்.
கண் மருந்திடுபவர்கள் அவதானிக்க வேண்டியவை
எனக்கு அடிக்கடி கண்ணிலை மெல்லிய அராத்தல் இருக்குது.அதோடை சில நேரம் கண்ணால் பூளையும் வருவதுண்டுஎன்றார் அந்த மத்திய வயது மனிதர்.
இது கண்நோயா?
இருக்காது கண்நோய் (Conjuntivitis) என்பது தொற்றுநோய்.ஆனால் அடிக்கடி வருவதில்லை.அத்துடன் இவரது கண்ணானது,கண்நோயில் இருப்பது போல அதிக சிவப்பாகவும் இருக்கவில்லை.
ஒவ்வாமையால் வரும் (Allergic Conjuntivitis) நோய் எனில் கண்ணில் அரிப்பு இருக்கும். தூசி போன்ற அந்நியப் பொருட்கள் விழுவதாலும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
காரணம் என்னவாக இருக்கும் என யோசிக்க வைத்தது.
வேறை கண் வருத்தம் ஏதாவது இருக்கோ? அதற்கு கண் மருந்து வழமையாக விடுகிறீர்களாஎன விசாரித்தேன்.
குளுக்கோமா இருக்கு. தினமும் துளி மருந்து விடுகிறேன்என்றார்.
கண்ணுக்கு மருந்து விடும் செயலானது சரியான முறையில் செய்யப்பட வேண்டும்.இல்லையேல் அந்த மருந்தின் பலன் முழுமையாகக் கிட்டாது என்பதுடன் வேறு நோய்களுக்கும் கராணமாகிவிடும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.
எனவே சரியான முறையில் கண் மருந்து விடும் முறையை அறிந்திருப்பது அவசியம்.
முதலில் கண் மருந்துள்ள குப்பியின் மூடியைக் கழற்றுவீர்கள் அல்லவா? அழுக்குகள் பட்டு மாசடையும் வண்ணம் அந்த மூடியின் வாய் புறத்தை மேசையிலோ தரையிலோ வைக்க வேண்டாம். மூடி மாசடைந்தால் குப்பியை மூடும்போது அதிலுள்ள மருந்திலும் கிருமி பரவி அடுத்த முறை உபயோகிக்கும்போது கண்ணுக்கு பரவலாம்.எனவே மூடியை மறுகையில் வைத்திருங்கள். அல்லது அதன் வாய்ப்புறம் கீழே படாதவாறு வையுங்கள்.
மிக முக்கியமாக, கண்ணுள் மருந்துத் துளியை விடும்போது குப்பியின் முனை கண்ணில் தொடாதவாறு கவனம் எடுக்க வேண்டும். கண்ணில் முட்டினால் இரண்டு வெவ்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.
அவ்வாறு முட்டும்போது அதன் முனை கண்ணினுடைய மென்மையான திசுகளில் பட்டு நுண்ணிய உராசல் காயங்களை ஏற்படுத்திவிடும். மீண்டும் மீண்டும் இவ்வாறு நடந்தால் கண் புண்படும் அபாயம் உண்டு.
இராண்டாவது ஆபத்து என்னவென்றால் குப்பியின் முனை கண்ணில் தொட்டால் ஏற்கனவே கண்ணில் இருக்கக்கூடிய மாசுகள் அல்லது கிருமிகள் முனைவழியாக உட்சென்று கண்மருந்தையே மாசடையச் செய்துவிடும். அங்கு அவை பெருகி மீண்டும் இடும்போது ஊறுவிளைக்கும்.
துளி மருந்தை கண்ணில் இடுவது எப்படி?
மூடியைக் கழற்றிய பின் மருந்துக் குப்பியை வலது கையின் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் பற்றி எடுத்து கண்ணருகே கொண்டு சென்று குப்புற பிடியுங்கள். மறுகையால் கண்ணின் கீழ் மடலை சற்று இழுங்கள்.
அப்போது இங்கு சிறு குழிபோல் தோன்றிய இடத்தில் துளி மருந்தை இடுங்கள். முன்பு கூறியதுபோல குப்பியின் முனை கண்ணில் படாதிருக்கவேண்டும் என்பது முக்கியமாகும்.
ஒரே கையால் மருந்து விடக் கூடிய முறையும் உள்ளது. முன்பு கூறியதுபோல வலது கையால் குப்பியை எடுத்து பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் பற்றியபடி சின்ன விரலால் கண்ணின் கீழ் மடலை இழுத்தபடியே குப்பியைக் சரித்து கண்ணில் துளி மருந்தை விட வேண்டும். மேற்கூறிய இரண்டு முறைகளிலும் மருந்து விடும்போது குப்பியின் நுனியானது கண்ணிலிருந்து இரண்டு அல்லது மூன்று சென்ரிமீற்றர் மட்டும் மேலே நிற்பதால் மருந்து குறி தவறி வெளியே விழுந்து கன்னம் வழியே வழிந்தோடி வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.
கண் மருந்து விடுவதற்கு முன் உங்கள் கைகளைக் கழுவி சுத்தம் செய்வது முக்கியமானதாகும். அத்துடன் ஒட்டுக் கண்வில்லை (Contact Lens) அணிந்திருந்தால் அதை எடுத்துவிடவும் மறக்கவேண்டாம்.
கண் மருந்து விட்டவுடன் கண்களை மூடுவது அவசியம். உங்கள் சுட்டுவிரலால் கீழ் கண் மடலின் உட்புற மூலையை மூக்கோடு சேர்த்து சிறிதுநேரம் அழுத்திப் பிடிப்பது நல்லது. அவ்வாறு செய்வதன் மூலம் கண்ணுள் விழும் மருந்தின் பெரும் பகுதியானது கண்ணுக்கும் மூக்கிற்கும் இடையேயுள்ள சிறு குழாய் (Nasolacrimal duct) வழியாக தொண்டைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் கண்மருந்து வீணாகாமல் இருப்பதுடன், அது உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமலும் தடுக்கிறது. இரண்டு வெவ்வேறு வகையான மருந்துகளை கண்ணுக்கு இடவேண்டியிருந்தால் குறைந்தது ஜந்து நிமிட இடைவெளியாவது இருப்பது அவசியம்.
முன்பு குறிப்பிட்டவர் மருந்து விடும்போது அடிக்கடி குப்பியின் முனை கண்ணில் முட்டியதாலேயே கண்ணில் வேதனை ஏற்பட்டது. சரியான முறையில் மருந்து இடுவது பற்றி அறிந்ததும் அப் பிரச்சினை தீர்ந்தது.





No comments:

Post a Comment