புத்தியான பிள்ளை வேணுமா! டிவியை ஆப் பண்ணுங்க!


Temple images
மகாபாரதமும், பாகவதம் என்னும் நூலும், கர்ப்பிணி பெண்களைப் பற்றிய விசேஷ செய்தி ஒன்றைத் தருகின்றன. இரணியனின் மனைவி கயாது கர்ப்பவதியாக இருந்தாள். ஒருமுறை நாரதர் அவளது இல்லத்துக்கு வந்து திருமாலின் பெருமை பற்றி உபதேசித்தார். அதை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அமர்ந்த நிலையிலேயே தூங்கிவிட்டாள். ஆனால், அவளது கருவில் இருந்த குழந்தை நாரதரின் உபதேசத்தைக் கேட்டபடி இருந்தது. பிரகலாதன் பிறந்தவுடன் விஷ்ணு பக்தனாக மாறி விட்டான்.
அதேபோல, அர்ஜூனனின் மனைவி சுபத்ரை கர்ப்பவதியாக இருந்த போது, கிருஷ்ணரிடம் பேசிக் கொண்டிருந்தாள். நடுவே போர் வியூகம் பற்றிய பேச்சு எழுந்தது. அதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையே அபிமன்யு. பாரதப்போரில் அவன் இந்த வியூகத்தையே அமைத்து எதிரிகளை அசைய விடாமல் சாதனை செய்தான். இன்றளவும் அந்த சாதனை பேசப்படுகிறது.இதன் அடிப்படையில் அறிவியலும் கர்ப்பிணிகளை கவனமாக இருக்கும்படி அறிவுறுத்துகிறது.
முக்கியமாக டிவி பார்க்க வேண்டாம் என்கிறார்கள். டிவி தொடர்களில் வரும் வன்முறை, வரைமுறையற்றயற்ற காட்சிகள், பேச்சுகள் கர்ப்பிணிகளின் மனநிலையை மட்டுமல்ல! கருவிலிருக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது. குழந்தைகள் பிற்காலத்தில் கெட்டுப்போவதற்கும், வழி தவறி வாழ்வதற்கு காரணமும் இதுவே. கர்ப்ப காலத்தில் பக்தி செலுத்துவது, இனிய இசை கேட்பது, தரமான புத்தகங்கள் படிப்பது, நல்ல பொழுதுபோக்கில் ஈடுபடுவது என இருந்தால் பிள்ளைகளும் சமர்த்தாக இருப்பார்கள்.

No comments:

Post a Comment