இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கணணி….
இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி(எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.
கணணி துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: கணணி, ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால் கணணி துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கணணிகளை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள்.
இது மெல்ல மெல்ல மாறி புது கணணி உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கணணிகளே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு மனிதனின் உதவி இல்லாமல் கணணிகள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும்.
அந்த அளவுக்கு கணணி தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கணணி ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029-ல் உண்டாகும் என்று தெரிகிறது.
எல்லா ஆராய்ச்சிகளிலும் கணணியே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும்.
இதன்மூலம் சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் கணணியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கணணிகள் குறுக்கிடும்.
அப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கணணியின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால் நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும்.
அதிவேக இணைய தொடர்பு வழங்கும் நகரங்களின் பட்டியல்: தென்கொரியா முதலிடம்
இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வளவு வேகத்தில் இணைய இணைப்பிணையும் தொடர்பினையும் வழங்குகிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்தது.
ஆய்வின் முடிவில் அதிவேக இணைப்பு தரும் நாடுகளில் முதல் இடத்தை தென் கொரியா நாட்டில் இயங்கும் நிறுவனங்கள் பிடித்துள்ளது. இங்கு சராசரியாக நொடிக்கு 2202 கிலோ பிட்ஸ் வேகத்தில் இணைய தொடர்பு இயக்கப்படுகிறது.
ரொமானியா மற்றும் பல்கேரியா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இவை முறையே 1,909 மற்றும் 1,611 கிலோ பிட்ஸ் வேகத்தைத் தருகின்றன.
முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகளில் உள்ள வேக இணைப்பிற்கு இடையே உள்ள வித்தியாசம் மூலம் தென் கொரியா நாடு எந்த அளவிற்கு இதில் முன்னேறியுள்ளது என்பதனை அறியலாம்.
காங்கோ நாடுதான் மிகவும் கீழாக விநாடிக்கு 13 கிலோ பிட்ஸ் வேகத்தில் இன்டர்நெட் தொடர்பினை வழங்குகிறது. பொருளாதாரத்தில் உயர் நிலையை அடைந்துள்ள நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் கனடா நாடுகளில் உள்ள இன்டர்நெட் இணைப்பின் வேகம், அதிவேகம் என்ற எல்லைக்குள் வரவே இல்லை.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அதிவேக இணைப்பு தரப்படுவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா பன்னாட்டளவில் 26 ஆவது இடத்தையே பிடித்துள்ளது. நகரங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் கூட முதல் பத்து இடங்களில் அமெரிக்க நகரங்கள் வரவில்லை.
இந்த ஆய்வு இந்த ஆண்டில் ஜனவரி தொடங்கி ஜூன் வரை மேற்கொள்ளப்பட்டது. 224 நாடுகளில் இரண்டு கோடி கணணிகளில் இரண்டு கோடியே 70 லட்சம் டவுண்லோட் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. உலக அளவில் சராசரி இணைய இணைப்பு வேகம் நொடிக்கு 580 கிலோ பிட்ஸ் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்
வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின் மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.
இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.
இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.
இந்த இணைய Newspaper Map பக்கத்தில் சென்றால் மேப் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த சித்திகளை இலவசமாக படித்து கொள்ளலாம்.
இந்த தலத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆன்லைன் தளங்கள் உள்ளன. இந்த தலத்தில் மேலும் ஒரு பயனுள்ள வசதி இதில் செய்திதாள்களின் மொழிகளை ஒரே கிளிக்கில் கன்வெர்ட் செய்யும் வசதியும் உள்ளது.மற்றும் மொழிவாரியாகவும், இடம் வாரியாகவும் பிரித்து தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது இது கண்டிப்பாக அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment