சினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்


தமிழ்ப்புத்தாண்டில் ரஜினியும்விக்ரமும் மோதுகிறார்கள்?
பொங்கல் ஜல்லிக்கட்டில் குதிக்க வேண்டிய படம் ரஜினியின் கோச்சடையான். ஆனால், அதேநாளில் வீரம், ஜில்லா படங்கள் வெளியாவதால், தியேட்டர் பிரச்னை மட்டுமின்றி வசூல் பிரச்னையும் ஏற்படும் என்று பின்வாங்கி விட்டனர்.
இந்த நிலையில், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துவதாக அறிவித்தவர்கள் இப்போது ஜனவரிக்கு மாற்றி விட்டார்களாம். அதோடு, தமிழ்ப்புத்தாண்டில் கோச்சடையானை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
ஆனால், தமிழ்ப்புத்தாண்டில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாது. அதனால் கோச்சடையான் ஷோலோவாக நின்று சொல்லியடிப்பார் என்று பார்த்தால், அங்கேயும் போட்டிக்கு ஷங்கரின் படம் அதிரடியாகத் தயாராகிக்கொண்டிருக்கிறதாம்.
கடந்த ஒரு வருடமாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் படம் . இதற்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படத்தை விடவும் இப்படம் மிக அதிரடியாக உருவாகியுள்ளதாம். அதனால் இப்படத்தின் மீது மிகுந்த ஆர்வத்துடன் உள்ளாராம் ஷங்கர்.
பொங்கலுக்கு விஜய்-அஜீத் மோதுகிறார்கள் என்றால், தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியும், விக்ரமும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 மாஸ்டர் ஸ்ரீதர் திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது
நடிகர்மாஸ்டர்ஸ்ரீதர் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.

மாஸ்டர் ஸ்ரீதர்குறத்தி மகன்படத்தில் ஜெயசித்ரா ஜோடியாக நடித்தார். ‘கர்ணன்படத்தில் சிவாஜியுடன் நடித்துள்ளார். ‘கந்தன் கருணைபடத்தில் முருக கடவுள் வேடத்தில் வந்தார். 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான நாடகங்களிலும் நடித்துள்ளார்.

மாஸ்டர் ஸ்ரீதருக்கு நீண்ட நாட்களாக ஆஸ்துமா கோளாறு இருந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது
மரணம் அடைந்த மாஸ்டர் ஸ்ரீதருக்கு இந்திரா என்ற மனைவியும், பிரசாந்த், ரக்ஷித் பாலாஜி என்ற மகன்களும் உள்ளனர். மாஸ்டர் ஸ்ரீதர் உடல் கொட்டிவாக்கம் கற்பகாம்பாள் நகரில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடக்கிறது.

சென்னை திரைப்பட விழாவுக்கு வரும் அமீர்கான்

சென்னையில் நாளை தொடங்க உள்ள 11வது சர்வதேச திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். அவருடன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள்.

சென்னையில் 8 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா மட்டும் மல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விழாவின் தொடக்க நாளின்போது தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் மற்றும், நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்கள்

பாக்யராஜுக்கு ஜோடியாகும் சுவேதா மேனன்
நிஜ பிரசவக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய, பிரபல மலையாள கவர்ச்சி நடிகை சுவேதா மேனன், மீண்டும் தமிழில் நடிக்கிறார்.

'
சிநேகிதியே', 'நான அவன் இல்லை 2', 'அரவான்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சுவேதா மேனன், சமீபத்தில் தனது பிரசவத்தை மலையாள படம் ஒன்றுக்காக நேரடியாக படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இந்நிலையில், இவர் மீண்டும் தமிழில் நடிக்க முன்வந்துள்ளார். இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இயக்கும் 'துணை முதல்வர்' என்ற படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
.


சேர்ந்து நடிக்க சம்மதம் தெரிவித்த விஜய் - அஜீத்
தனிப்பட்ட முறையில் நடிகர்கள் விஜயும், அஜீத்தும் நண்பர்களாக இருந்தாலும், அவர்களுடைய படங்கள் வெளியாகும் போது, அவர்களுடைய  ரசிகர்கள் என்னவோ, இந்தியா - பாகிஸ்தான் போல அவ்வபோது உருமிக்கொள்வார்கள். சமீபத்தில் இந்த உருமல்கள் குறைந்துள்ளது.

இதற்கிடையில், விஜய் - அஜீத் இருவரையும் ஒன்றாக வைத்து படம் இயக்க சில முன்னணி இயக்குநர்கள் முயற்சித்து வருகிறார்கள். அதில் ஒருவரான இயக்குநர் வெங்கட் பிரபு, தான் விரைவில் அஜீத் - விஜய் இருவரையும் ஒன்றாக வைத்து படம் ஒன்றை இயக்குவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவருடைய நம்பிக்கைக்கு காரணம், விஜய் மற்றும் அஜீத்தை அவர் தனித்தனியாக சந்தித்து தனது விருப்பத்தைச் சொன்ன போது இருவரும் ஓகே சொல்லிவிட்டார்களாம். தற்போது விஜய் - அஜீத் இணைப்புக்குக்காக கதையை தேடிக்கொண்டிருக்கும் வெங்கட் பிரபு, பிரியாணி ரிலீஸுக்காக காத்திருக்கிறார்

இதுகுறித்து கூறிய சுவேதா மேனன், "பாக்யராஜ் படங்களில் சில படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய படங்கள் குடும்பப்பாங்கான கதை கொண்டவையாக இருக்கும். இப்போது அவர் ஜோடியாக 'துணை முதல்வர்' என்ற படத்தில் நடிக்கிறேன்.
இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கிளாமரானதா என்பது பற்றி தெரியாது. பாக்யராஜ் படங்களுக்கு குடும்பப் படம் என்ற முத்திரை இருக்கிறது. அதற்கேற்ப இந்த படத்தில் எனது கதாபாத்திரமும் அமைந்திருக்கும் என நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் சென்னையில் தொடங்குகிறது

சினிமா படங்களில், மது அருந்துகிற காட்சிகளை வைக்காதீர்கள். அந்த காட்சிகளை வைத்தால் வரிவிலக்கு கிடைப்பதில்லை. தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது’’ என்று பட அதிபர் கே.ராஜன் கூறினார்.
சினிமா படவிழா
ஜெயம் ரவிஅமலாபால் ஜோடியாக நடித்து, சமுத்திரக்கனி டைரக்டு செய்துள்ள படம், ‘நிமிர்ந்து நில்.’ இந்த படத்தில், சரத்குமார் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. இந்த விழாவில், பட அதிபர் கே.ராஜன் கலந்துகொண்டு பேசும்போது, சில பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். அவர் பேசியதாவது:–
‘‘கடந்த 10 நாட்களாக தணிக்கைக்கு அனுப்பப்பட்ட சில படங்களில் மது அருந்துகிற காட்சிகளும், கவர்ச்சி காட்சிகளும், ஆபாச வசனங்களும் அதிகமாக இடம்பெற்றுள்ளன. அந்த படங்களுக்கு எல்லோரும் பார்க்க தகுந்த வகையில், ‘யுசான்றிதழ் தரப்படவில்லை. ‘யு சான்றிதழ் தரப்பட்டு இருக்கிறது. ‘யு சான்றிதழ் கொடுக்கப்பட்ட படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது.

தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்
சில டைரக்டர்கள் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவை வைத்து விடுகிறார்கள். தணிக்கையிலும் பிரச்சினையாகி, வரிவிலக்கு கிடைப்பதில்லை. அதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். டைரக்டர்கள் கதைவசனம் எழுதி, படத்தை டைரக்டு செய்யும்போது, தணிக்கைக்கு உட்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டும்.
தாய்மார்களும், இளைஞர்களும் மனஅழுத்தத்துக்கு ஆளாகாதபடி தரமான படங்களை எடுத்து தந்தால், தயாரிப்பாளர்கள் லாபம் அடைவார்கள். டைரக்டர்கள் மனது வைத்தால்தான் இது நடக்கும்.

திருட்டு வி.சி.டி.காம்
திருட்டு வி.சி.டி.காம்என்று ஒரு இணையதளம் தொடங்கப்பட்டு கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். இதை போலீசும் கண்டு கொள்ளவில்லை.’’
இவ்வாறு கே.ராஜன் பேசினார்.
கேயார்
விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், துணைத்தலைவர் டி.ஜி.தியாகராஜன், செயலாளர் டி.சிவா, ‘பிலிம்சேம்பர்தலைவர் கல்யாண், செயலாளர் எல்.சுரேஷ், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், ‘பெப்சிதலைவர் அமீர், பட அதிபர்கள் பஞ்சு அருணாசலம், கே.முரளிதரன், யுடிவி தனஞ்செயன், டைரக்டர்கள் சேரன், கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன், சுசீந்திரன், சசிகுமார், ராஜேஷ், பாண்டிராஜ், பாலாஜி தரணிதரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டர் மோகன், நடிகர்கள் ஜெயம் ரவி, ஆர்யா, சூரி, நடிகை அமலாபால் ஆகியோரும் பேசினார்கள்.
பட அதிபர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் வரவேற்றார்கள். டைரக்டர் சமுத்திரக்கனி நன்றி கூறினார்.


0 comments:

Post a Comment