மனிதனின் மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் அதிநவீன கணனியை ஐபிஎம் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, அதனை கருத்தில் கொண்டே மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளையை போன்று கணனி ஒருவகை திரவத்தால் சக்தியை பெறுவதுடன் அதே திரவத்தால் தன் வெப்பத்தை நீக்கி குளுமைப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும். மூளையில் உள்ள குருதிச் சுற்றோட்டத்தொகுதி போன்ற ஒருவகை மின்னணு இரத்தத்தை கணனியின் வழியாக ஓடச் செய்வதன் மூலம் அந்தக் கணனிக்கான சக்தியை அதன் உள்ளே கொண்டு செல்லும். அத்துடன் அதிலிருந்து வெப்பத்தை வெளியேயும் கொண்டுவரும். தற்போதுள்ளகணனிகளில் ஒரு சதவிகிதம் மட்டுமே தகவல்களை பெறுவதற்கு பயன்படுவதாகவும், இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்டால் சிறப்பான கணனியை தம்மால் உருவாக்க முடியும் என்று ஐபிஎம் நிறுவனத்தின் டாக்டர் பாட்ரிக் ருச் மற்றும் டாக்டர் புருனோ மைக்கல் தெரிவித்துள்ளனர். மேலும் 2060ஆம் ஆண்டளவில் முழுமையடையக் கூடிய இந்த முயற்சியின் மூலம், தற்போது மிகப் பெரியதாக இருக்ககூடிய கணனியை சிறியதாக உருவாக்கிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த பொது அறிவுப் போட்டியில் இக்கணனி மனித மூளையை தோற்கடித்துவிட்டது. மனித மூளை 20 வாட்ஸ் சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றது என்றும், கணனி 85,000 வாட்ஸ் சக்தியை பயன்படுத்துகின்றது இது நியாயமற்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கேள்விகளுக்கு புதிய மின்னணு இரத்தத்தால் செயல்படும் கணனிகள் பதில் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
3டி படங்களை கண்ணாடி இல்லாமல் பார்க்க புதிய ‘ஸ்க்ரீன் எக்ஸ்’ தொழில்நுட்பம் அறிமுகம்
முப்பரிமாணத்துடன் கூடிய ’3டி’ படங்கள் சிறப்பு ஒலி, ஒளி அமைப்புகளுடன் தயாரிக்கப்பட்டு திரைக்கு வருகின்றன. இப்படத்தை சிறப்பு கண்ணாடி அணிந்து மட்டுமே பார்க்க முடியும். வெறுங்கண்ணால் பார்த்தால் அதற்குரிய ஸ்பெஷல் எபெக்ட் கிடைக்காது. தற்போது, அதையும் மிஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பு கண்ணாடி அணியாமல் சாதாரணமாக வெறுங்கண்ணால் பார்த்து ரசிக்க முடியும். கடந்த வாரம் புசான்சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் சினிமா தொடர் சி.ஜே. சிஜிவி உருவாக்கப்பட்ட 30 நிமிடம் ஓடக்கூடிய ஸ்க்ரீன் எக்ஸ் படம் வெளியிட்டுள்ளனர். இந்த சினிமா 270 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். ‘ஸ்கிரீன் எக்ஸ்’ தொழில்நுட்பத்தில் இந்த சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே காட்சியை ஒரே நேரத்தில் 3 காமிராக்களில் பலவித கோணங்களில் படம் பிடித்து அதை ஒருங்கிணைத்துள்ளனர். சிறப்பு அம்சங்களுடன் கூடிய இந்த சினிமா படத்தை தென்கொரிய டைரக்டர் கிம்ஜிவூன் உருவாக்கியுள்ளார். இதற்கு ‘தி எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய உளவாளி, ‘திரில்லர்’ கதை அம்சத்துடன் கூடிய படமாகும். கடந்த வாரம் தென்கொரியாவின் புசானில் நடந்த சர்வதேச படவிழாவில் ‘பிரீமியர் ஷோ’ ஆக இப்படம் திரையிட்டு காட்டப்பட்டது. இந்த மாத இறுதியில் தென் கொரியாவில் உள்ள 31 சினிமா தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட உள்ளது. அதற்காக கூடுதல் திரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இச்சினிமா படம் உருவாக்கியது குறித்து டைரக்டர் கிம் ஜி வூன் கூறும் போது, ‘இந்த புதிய தொழில்நுட்பம் சினிமாவுக்கு மிகப்பெரிய பிரமாண்டத்தை கொடுத்துள்ளது’ என்று கூறியுள்ளார்.
அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கலாம்
சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் கிரகங்களை ஆராய ஆராம்பித்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன, தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கலாம் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கிரகங்களின் எண்ணிக்கை பற்றி சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ தெரியலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவரை 900க்கும் மேற்பட்ட அன்னிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்கள் பற்றிய அட்டவணை கண்டுபிடிப்புகளை ஐந்து முக்கியதரவுத்தளங்களாக பிரித்து, அதில் 900க்கும் மேற்பட்ட புதிய உலகங்கள் நமது உலகுக்கு வெளியே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் அதில் இரண்டு முக்கிய தரவுத்தளங்களின் கணக்குப்படி 986 புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். 1992ம் ஆண்டில் முதல் முறையாக பல்சார் அல்லது நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வருவது ஆகிய 2 கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல்சார் கிரகம், பூமியிலிருந்து 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலான தொலைவில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி அதிகமாக புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஏற்கனவே இந்த கெப்ளர் தொலைநோக்கி பூமிக்கு அப்பால் உள்ள 3588 புதிய கிரகத்தில் இருந்து அடையாளம் காட்டியுள்ளது. ஒப்பந்தம் முடிவடைய இன்னும் குறைந்தது 90 சதவீதம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பல லட்சம் தலைமுறை காலத்துக்கு ஆபத்து இல்லை பூமி இன்னும் 175 கோடி ஆண்டு வாழும்.
மனிதன் உட்பட உயிரினங்கள் உயிர் வாழும் இந்த பூமியின் ‘உயிர் வாழும்’ காலம் எவ்வளவு தெரியுமா? 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது. இது தொடர்பாக ஆன்ட்ரூ ரஷ்பி கூறியதாவது: பூமி இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பது பற்றி நாங்கள் பல வகையில் ஆராய்ச்சி செய்து வருகிறோம். எங்கள் ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை. காரணம், பூமி பற்றிய ஆய்வுகள் முடிவில்லாதவை. ஆனால், எங்கள் கண்டுபிடிப்புகள் பல கட்டங்களில் உண்மை எனநிரூபிக்கப்பட்டுள்ளன. எங்கள் முந்தைய கணிப்பு படி, பூமி இன்னும் 325 கோடி ஆண்டுகள் வரை ‘உயிர் வாழும்’ தகுதி படைத்ததாக இருக்கும் என்று தான் மதிப்பிட்டிருந்தோம். ஆனால், வானிலை மாற்றங்கள் கடுமையாக மாறி வருகின்றன; கடல் மட்டம் மாறி வருகிறது; கடல் நீர் அதிவேகமாக நீராவி ஆகி வருகிறது. இப்படி பல வகையான வானிலையில் மிக மோசமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால், பூமி ‘உயிர் வாழும்’ காலம் வெகுவேகமாக குறைந்து வருகிறது. அதாவது, எங்கள் இப்போதைய கணிப்பு 175 கோடி ஆண்டுகள் வரை பூமி ‘உயிர் வாழும்’ என்பது தான். ஆம், அதுவரை பூமியில், தண்ணீர் இருக்கும்; வெப்பம், மனிதர்களால் தாங்கும் அளவுக்கு இருக்கும். அதன் பின், வெப்பம் மிகவும் கொடூரமாக இருக்கும்; மனிதர்கள் பொசுங்கி போவர்; ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் அதிர்ச்சி தரும் வகையில் கோடிக்கணக்கில் மடிந்தும் மறைந்தும் விடும். அதனால் மாற்று இடம் தேடி தான் மக்கள் போக வேண்டியிருக்கும். சூரிய மண்டலத்துக்கு வெளியே கிட்டத்தட்ட ஆயிரம் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மனிதர்கள் உட்பட உயிரினங்கள் உயிர் வாழ தகுதி இருக்கிறதா என்று ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. செவ்வாய் உட்பட எட்டு கிரகங்கள் தான் உயிரினங்கள் உயிர் வாழ, வானிலை உட்பட எல்லா வகையிலும் அருமையாக இருக்கும். அதில் மனிதர்கள் குடியேறலாம். மனிதர்களுக்கு ஏற்ற வகையில் செவ்வாய் உட்பட இந்த கிரகங்களில் இயற்கை வளங்கள், வசதிகள் இருக்கும். இவ்வாறு ஆன்ட்ரூ ரஷ்பி கூறினார். எந்த கிரகம் வசதியானது? * சூரியனின் காலம் இன்னும் 600 கோடி ஆண்டுகள். * சூரியனை வைத்து தான் மற்ற கிரகங்கள் உயிர் வாழுகின்றன. அதாவது, பல வகையிலும் உயிர் வாழும் தகுதிகளை படைத்துள்ளன. * அப்படி பார்த்தால் செவ்வாய் தான் இப்போதைக்கு மனிதர்கள், மற்ற உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதாம். * மேலும், பூமிக்கு வெகு அருகாமையில் உள்ளதும் செவ்வாய் தான். * பூமி போலவே, வானிலை அருமையாக இருக்கும்; தண்ணீர் போன்ற வசதிகள் இருக்குமாம்.
பெரும்பாலான கோள்கள், நட்சத்திரங்கள் போன்ற பெரிய விண்பொருள்கள் கோள வடிவிலேயே உள்ளன. கோள்களும் நட்சத்திரங்களும் இப்படி இருப்பதற்குக் காரணமாக இருப்பது இரண்டு விசைகள். இந்த இரண்டு விசைகளில் ஒன்றாக இருக்கும் ஈர்ப்புவிசை, மற்றொரு விசையை சமநிலைப்படுத்துகிறது.நட்சத்திரங்களில் அடங்கியுள்ள பருப்பொருளை வெளிப்புறமாக இழுக்கும் வெப்ப அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் வகையில் ஈர்ப்புவிசை செயல்படுகிறது. அதேநேரம் கோள்களில், ஈர்ப்பு விசைக்கு எதிராக சம்பந்தப்பட்ட பொருளில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்பு சக்தி, பருப்பொருள் ஒடுங்கிப் போகாமல் இருக்கும் வகையில் சமநிலையை உருவாக்குகிறது. கோள்கள், நட்சத்திரங்கள் ஆகிய இரண்டிலும் உள்ள இந்த சக்திகள்எப்போதும் சமநிலையில் இருக்க முயற்சிப்பதால், அந்த இரண்டு விசைகளின் செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வசதியான வடிவத்திலேயே சம்பந்தப்பட்ட பொருள் உருக்கொள்கிறது. வடிவியல் ரீதியில் கோளம் மிகவும் சமநிலையான, உறுதியான வடிவமைப்பு. எனவே, பெரும் கோள்களும் நட்சத்திரங்களும் கோள வடிவத்திலேயே உள்ளன.பூமியில் இருந்து வெறும் கண்களால் பார்க்கும்போது நட்சத்திரங்கள் ஐந்து வால்களுடன் தோற்றம் தந்தாலும், உண்மையில் கோள வடிவத்திலேயே உள்ளன. நமது பார்வைக்குத்தான், அவற்றின் வெளிச்சம் நட்சத்திர வடிவில் வால்களுடன் தோற்றம் தருகிறது.
No comments:
Post a Comment