தங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.


நகை வாங்குபவர்கள்,எந்த நகை வாங்கினால் சேதாரம்செலுத்த‍வேண்டும்.எந்தநகை வாங்கினால் சேதாரம் செலுத்த‍வேண்டியதில்லை என்பதை அறிந்துகொண்டு வாங்க வேண் டும். 
KDM வகை நகைகள் உதாரண மாக 91.6 % நகைகள் நீங்கள் வாங் கினால் நீங்கள் அதை உருக்கினாலும் அந்த தங்கம் அதே மிச்சம் ,அதாவது 91.6 % ஆகவே இருக்கும் . ஆகவே அந் நகையை உருவாக்க
நீங்கள் சேதாரம் தனியாக தருகிறிர்கள் .ஏனென்றால் ஒரு நகையை உருவாக்க நகை செய்பவருக்கு நகை கடைகாரர் சேதாரம் தந்தாகவேண்டும் .
ஒரு நகை செய்யும்போது சேதாரம் (கழிவு) போகும் .அதா வது உ-தா பாலிஷ் செய்ய ,உரு க்கும்போது, நகை டிசைன்களு க்கு,இப்படி ஆச்சாரிக்கும் சேதாரம் செலவாகும் .
KDM அற்ற நகைகள் என்றால் நீங்கள் எந்த சேதாரமும் தர தேவை இல்லை .ஏனென்றால் நீங்கள் தங்கம் வாங்கும் பொழுது உதாரணமாக 91.6 % உள்ளது என்றால் அந்த தங்கம் உருக்கினால் சுமாராக 80%மே இருக்கும். இதுதான் KDM நகைக ளுக்கும் KDM அற்ற நகைகளுக்கும் உள்ள வித்தியாசம். எந்த ஒரு பொருளும் உருவாக்கும் பொழுது கழிவு சென்றே தீரும் .
ஆச்சாரிக்கு சேதாரம் கொடுத்தது போக நகை கடைகாரார்கள் தங்கள் லாபத்தை நிர்ணயிப்பார்கள் .அதில் ஏற்றம்,தாழ்வு வரலாம். அந்த லாபத் தில் நகை கடைகாரர் தனது வேலை ஆட்கள் சம்பளம், வரி, கடை நிர்வாகம் எல்லாம் எடுத்தாக வேண்டும் .
KDM நகைகள்
இந்த KDM நகைகள் தற்போது அதிகளவில் மார்கெட் செய்யப்படுவதில்லை பல நாடுகளில் தங்கத்தில் KDM பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு விட்டது.

KDM என்றால் என்ன? எதனால் இது தங்கத்தொழிலில் தடை செய்யப்பட்டது இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு இப்ப வந்திருக்கும் தானே? KDM (Cadmium) ஒரு கெமிக்கல் கலவை அதாவது சாதரணமாக தங்கத்தோடு வெள்ளி, மற்றும் செம்பு மட்டுமே கலந்து ஆபரணங்கள் செய்வார்கள், ஆனால் KDM நகையை பொருத்த வரை தங்கத்தோடு கலப்பதற்கு Cadmium எனும் ரசயானக்கலவையை பயனபடுத்துவார்கள், இதனால் தங்கத்தின் நிறம் பளிச்சென இருக்கும் ஆனால் இதை தொழில் முறையாக செய்பவருக்கு நிச்சியம் உடல் நிலை பாதிக்க படும் மற்றபடி இதை அணிபவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

பொதுவாக தங்கம் 8 Ct , 9 Ct, 10 Ct, 12 Ct, 14 Ct, 15 Ct, 16 Ct, 18 Ct, 19 Ct ,20 Ct, 21 Ct, 21.6 Ct, 22 Ct ,23 Ct, 24 Ct இந்த நிலைகளில் மட்டுமே காணப்படுகிறது 8 Ct க்கு கீழே இருப்பவற்றை தங்கம் என்பதாக கணக்கில் எடுப்பதை விட ஏதோ ஒரு உலோகம் என்று வேண்டுமானல் வைத்துக்கொள்ளலாம். நமது நாட்டை பொருத்தவரை 18 Ct முதல் 24 Ct Purity தங்கம் மட்டுமே பெரும்பாண்மையாக பயன்படுத்த படுகிறது அதே நேரத்த்தில் 8 Ct முதல் 16 Ct வரையிலான Purity தங்கம் மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பயன்படுத்த படுகிறது.

தங்கத்தை பொருத்தவரை 24 Ct என்பது சுத்த தங்கம் அதாவது இதன் Purity என்பது 999.99% என்பதாகும் அதாவது 24 Ct தங்கத்தில் 0.01% வெள்ளியும், செம்பும் கலக்கபட்டிருக்கும், ஆனால் உலக அளவில் 99.9% Purity என்பது 24 Ct சுத்த தங்கமாக ஏற்றுக்கொள்ளபட்டிருக்கிறது, ஆனால் மிகவும் மென்மையாக இருப்பதால், 24 Ct தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியாது இந்த 24 Ct தங்கத்தை தொழில்முறை ரீதியாக 24 பார்ட் என்கிறார்கள் அதாவது 24 பார்ட் என்பது 999.99% Purity தஙகமாகும் இதில் வெறும் 0.01% அளவு மட்டுமே வேறு உலோகம் சேர்க்கபட்டிருக்கிறது, 22 Ct என்பது 22 பார்ட் அதாவது 91.66 Purity தங்கமாகும். அதாவது சுருக்கமாக சொலவதானால் ஒரு பார்ட் என்பது 4.1666 % Purity ஆக கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் வெளி நாட்டு நகைகளில் உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகள் (வளைகுடா நாடுகள்) மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் 22 Ct தங்கம் 91.7 % Purity ஆக காணப்படும் சாத்தியக்கூறுகள் தெரிகிறது. ஆனால் நம் ஊரை பொருத்த வரை 91.66 % Purity என்பது அப்படியே இருந்தால் சந்தோஷம் தான்.

தங்கத்தின் Purity-யை எப்படி தெரிந்துகொள்வது? 

24 Ct X 4.1666 = 99.99 % Purity
23 Ct X 4.1666 = 95.83 % Purity
22 Ct X 4.1666 = 91.66 % Purity
20 Ct X 4.1666 = 83.33 % Purity 
18 Ct X 4.1666 = 74.99 % Purity

இதை முறையை வேறு விதமாகவும் கையளாலம்.

24 Ct / 24 Ct = 100 % Purity
23 Ct / 24 Ct = 95.83 % Purity
22 Ct / 24 Ct = 91.66 % Purity
20 Ct / 24 Ct = 83.33 % Purity
18 Ct / 24 Ct = 0.75 % Purity

மேலே சொன்னது உங்களுக்கு புரித்திருக்கும் தானே? இப்படியே 8 Ct முதல் 22 Ct வரையிலான தங்கத்தின் Purity-யை தெரிந்துகொள்ளலாம். வழக்கமான கணித முறைகள் போலவே புள்ளிகளுக்கு அடுத்த வரும் இலக்கங்களை முழுமையான எண்ணாக மாற்றிக்கொள்ளலாம், உதாரணத்திற்கு 18 X 4.1666 = 74.99 % Purity என்பதை 75 % Purity என்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

சரி நீங்கள் 22 Ct தங்கத்தில் 1 Gram அளவில் தங்க நகையை வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் இந்த 22 Ct தங்கம் முழுவதும் தங்கம் தானா? இந்த 1 Gram தங்கத்தில் உண்மையில் எத்தனை கிராம் சுத்தமான தங்கமும், எத்தனை மில்லி கிராம் செம்பும், வெள்ளியும் கலக்கபட்டிருக்கிறது என்பதை எந்த நகை கடையும் சொல்வதில்லை, ஆனால் அவர்கள் நேரடியாக சொல்லாவிட்டாலும் 916 KDM அல்லது 22 Ct என்று மட்டும் தான் சொல்வார்கள் எத்தனை பேருக்கு தெரியும் இது தான் தங்கத்தின் Purity என்பது, பெரும்பாலோனோர் இதை ஒரு தரப்படுத்தும் குறியீடாக தான் புரிந்து வைத்திருக்கிறார்கள் (ISO முத்திரை போல) என்பது நான் கண்ட உண்மை.

உங்க கிட்ட 1 Gram (22 Ct) இருந்தால், அதை 24 Ct Purity தங்கமா மாத்தும் போது எத்தனை கிராம் 24 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம். 

Formula 1: 1 Gram x 22 Ct / 24 Ct = 0.917 Milli Gram
Formula 2: 1 Gram / 1.09 = 0.917 Milli Gram

இதில் இரண்டாவது பார்முலா என்பதில் 1.09 என்பது எப்படி வந்தது என கேள்வி எழுமேயானால் அதற்கான பதில் இது தான் 24 Ct / 22 Ct = 1.09, இதில் சிறிய அளவிலான மைக்ரோ மில்லி கிராம் அளவில் சிறிய மாறுதல்கள் இருக்கும்.

இதே போல உங்க கிட்ட 1 Gram (24 Ct) இருந்தா அதை நீங்க 22 Ct நகையா மாத்தும் போது எத்தனை கிராம் 22 Ct தங்கம் கிடைக்கும்னு பார்க்கலாம்.

Formula 1: 1 Gram X 24 Ct / 22Ct = 1.09 Gram (22 Ct)
Formula 2: 1 Gram / 0.9166 = 1.09 Gram (22 Ct)

தங்கத்தில் உலோகம் கலக்கும் அளவு. 

• 24 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 0.01% அளவில் கலந்து இருக்கும்.
• 22 Ct தங்கத்தில், செம்பும், வெள்ளியும் 8.3 % அளவில் கலந்து இருக்கும்.
• 18 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல் சேர்ந்து 25% அளவில் கலந்து இருக்கும்.
• 14 Ct தங்கத்தில், செம்பு, வெள்ளி, நிக்கல், துத்தநாகம் மற்றும் பல்லேடியம் போன்றவை சேர்த்து 41.5 % அளவில் கலந்து இருக்கும்..

நம்மில் பலரும் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்க சென்றால் ஆயிரம் கேள்வி கேட்டு, கத்தரிக்காயை அமுக்கி பார்த்து, வெண்டைக்காயை உடைச்சு பார்த்து வாங்குற நாம நகைக்கடைக்கு போன அந்த தங்கம் சுத்தமானது தானா? அதன் Purity சரிதானா? என எதையும் யோசிக்க மாட்டோம், கடைக்காரன் கொடுக்கிற ஒரு கூல்ட்டிரிங்க்ஸோ அல்லது டீயையோ குடிச்சிட்டு அவன் சொல்ற விலைக்கு வாங்கிட்டு வந்துகிட்டே இருப்போம், இப்படி நாம நம்புற ஒரு நகை கடைக்காரன் நம்ம கிட்ட எப்படி கொள்ளையடிக்கிறான் தெரியுமா, நம்மள ஏமாத்துறதுக்காகவே செய்கூலி, சேதாரம் வச்சுருக்காங்க.

சேதாரம்னா என்ன ஒரு பொருளை இனி உபயோகிக்கவே முடியாத என்கிற அளவில் இருப்பதை தான் சேதாரமாகி விட்டது என்று எடுத்துக்கொள்லலாம். 1 கிராம் நகை எடுக்கிறதுக்கு 30 % செய்கூலி சேதாரம் கொடுக்க வேண்டியிருக்கு அதாவது பொருளோட மதிப்புக்கு 3/1 பாகத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்கு 1000 ரூபாய்க்கு நகை வாங்கின 300 ரூபாய் செய்கூலி சேதாரமா கொடுக்க வேண்டியிருக்கு.

ஒரு பொருளை செய்வதற்கு செய்கூலி என்பது நியாயமானது வெறும் தங்க துகள்களாக, தங்க கட்டிகளாக இருப்பதை நமக்கு பிடித்த விதத்தில் டிசைன்கள் செய்து தருவதற்கு நாம் நிச்சியம் செய்கூலி கொடுத்து தான் ஆகவேண்டும். ஆனால் இதில் சேதாரம் என்பது தான் பகல் கொள்ளையாக இருக்கிறது தங்கத்தை பொருத்தவரை கழிவு என்பதே இல்லை, அப்படியே பயன்படுத்த முடியாத தங்கமாக இருந்தால் அதை நம்மிடம் தந்துவிட்டு அதற்கான பணத்தை பெற்றுக்கொள்வது தானே முறை, ஆனால் பொருளை நமக்கு தராமலே அவர்களே வைத்துக்கொண்டு நம்மிடம் சேதாரம் என்பதாக பணம் பறிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

உங்களுக்கு தெரியுமா தங்க பட்டறைகளில் கூட்டி பெருக்கி குப்பயை கூட வெளியே அள்ளி போட்டு விடமாட்டார்கள் அத்தனையும் சேர்த்து வைத்து சலித்து விடுவார்கள், சலித்து முடித்தவுடன் குப்பையை வெளியே அள்ளி போட்டு விடுவார்கள் என நினைத்தால் அது தான் இல்லை அதையும் அவர்கள் இதற்கென்றே இருக்கும் சிறிய தொழிலாளிகளிடம் விற்று விடுவார்கள். இந்த குப்பை மண்ணை வாங்கியவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இதில் இருந்து ஏதாவது கிடைக்க கூடும், அப்படி கிடைக்குமென்று தான் நினைக்கிறேன் இல்லையென்றால் இந்த கழிவை வாங்க மாட்டார்கள் தானே? ஆக எப்படி பார்த்தாலும் நகை பட்டறைகளில் இருந்து சில பல மில்லி கிராம் தங்க துகள்கள் வெளியில் செல்லுமே தவிர கிராம் கணக்கில் போவதற்கான வாய்ப்பு மிக குறைவு, ஆனால் நாம் நகை வாங்கும் போது 30% செய்கூலி சேதாரம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் உண்மையில் நெடு நாட்களாக நகை கடைகளில் வாடிக்கையாளனை நூதனமாக ஏமாற்றி கொள்ளை அடிக்கபடுகிறது, எல்லாவற்றுக்கும் சட்டம் போடும் அரசு கூட இந்த பகல் கொள்ளை விஷயத்தில் அக்கரை எடுத்ததாய் தெரியவில்லை ஒருவேளை அரசு அதை மறைமுகமாக மனப்பூர்வமாக நகைக்கடை வியாபாரிகளை அனுமதிக்கிறது என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இந்தியாவில், தமிழகத்தில் பெரிய சில கடைகளில் மட்டுமே தங்கத்தின் Purity தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது மற்ற பெரும்பாலன கடைகளில் Purity பற்றி தெரிந்துகொள்ள வசதியில்லை, ஆனால் வெளி இடங்களில் Purity சோதனை செய்வதற்காகவே சில கடைகள் இயங்குகின்றன, ஆனால் நகை ஒரு இடத்தில் வாங்கி அதன் பின்னர் வேறொரு கடைக்கு சென்று சோதனை செய்வதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத காரியம்.. நம்பிக்கையோடு நகையை வாங்கும் நம்மை போன்ற மக்களை மறைமுகமாய் இப்படி பகல் கொள்ளை அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.

வெளி நாட்டில் இருப்பவர்கள் ஆபரண தங்கம் வாங்க நினைத்தால்

அங்கேயே 22Ct நகைகளாக வாங்குவது நல்லது, தங்கத்திற்கான Purity உத்ராவாதம் கிடைக்கும், செய்கூலியும் குறைவாய் இருக்குமென்று கேள்விபட்டிருக்கிறேன், அதே நேரத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாய் தங்க பிஸ்கட் வாங்கி வந்து ஊரில் செய்து கொள்ளலாம் என நினைத்தால் Purity-க்கு எந்த இந்தியாவில் எந்த உத்ரவாதமும் இல்லை வெளிநாட்டு நண்பர்கள் வாயிலாக அறிந்த வரை இந்தியாவில் தான் செய்கூலி சேதாரம் என்பது மிகவும் அதிகம். அதே நேரத்தில் வணிக நோக்கோடு தங்கம் வாங்க நினைத்தால் தங்க பிஸ்கெட்கள் வாங்கி வருதல் நலம், இந்தியாவில் நல்ல விலையும் கிடைக்கும். ஆனால் மத்திய அரசின் புதிய விதிப்படி ஆண் நபர் ஒருவர் இந்திய ரூபாய் 10,000 மதிப்பிலான தங்கம் மட்டுமே கொண்டு வரமுடியும், பெண் நபர் ஒருவர் 20,000 ரூபாய் மதிப்பிலான நகை மட்டுமே கொண்டு வரமுடியும் அதற்கு மேல் இருந்தால் கஸ்டம்ஸில் பணம் கட்ட வேண்டியதிருக்கும் ஒவ்வொரு பத்து கிராம் நகைக்கும் 450 ரூபாய் வீதம் + 3% வரி உட்பட கட்ட வேண்டியிருக்கும், பணம் கட்டி நகையை கொண்டு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் உங்கள் ஆபரணங்களை ஏர்போர்ட்டிலேயே வைத்து அதற்கான அடையாள சீட்டை பெற்றுக்கொள்வதன் மூலம் திரும்பி செல்லும் போது உங்கள் நகையை பெற்றுக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment