சினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்

எய்ட்ஸ் விழிப்புணர்வு அனிமேஷன் படத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன்!

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சார அனிமேஷன் படத்தில் முன்னணி நடிகர்கள் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி மற்றும் சித்தார்த் நடித்துள்ளனர்.
 டீச் எயிட்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்ஐவி, எயிட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தடுப்பு முறைகள் குறித்தும் உலக மக்களிடையே பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
 இந்திய அளவில் எயிட்ஸ் பாதிப்பு அதிகம் ஏற்பட்டள்ள மாநிலம் தமிழகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் முதல் தேதியில் உலகம் முழுவதும் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
 இந்த அமைப்பு தமிழ் அனிமேஷன் என்ற பெயரில் உருவாக்கியுள்ள எயிட்ஸ் விழிப்புணர்வு தமிழ் அனிமேஷன் படத்தின் காட்சிகளில் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
முன்னணி கதாபாத்திரத்தில் மீண்டும் சரத்குமார்....................................................
முன்னணி கதாபாத்திரத்தில் மீண்டும் சரத்குமார்கடந்த மூன்று வருடங்களாக குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்த நடிகர் சரத்குமார் தற்போது மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் தோன்ற உள்ளார். அறிமுக இயக்குநர் வேந்தனின் 'வேளச்சேரி' திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக சரத்குமார் தோன்றுகின்றார். இவருக்கு ஜோடியாக நடிகை இனியா கதாநாயகி வேடத்தில் தோன்ற உள்ளார்.
இந்தப் படம் வேளச்சேரியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படம் பற்றி சரத்குமார் கூறும்போது சில துணை கதாபாத்திரங்களில் நடித்தபிறகு எனக்கு ஒரே மாதிரியான வேடங்களே கிடைத்தன. ஆயினும் நான் ஒரு நல்ல கதைக்காகக் காத்திருந்தேன். வேளச்சேரி ஒரு நல்ல திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் இதனை இழப்பதற்கு நான் விரும்பவில்லை என்றார்.
என்கவுண்டர் அதிகாரியாகத் தான் இந்தப்படத்தில் தோன்றுவதாகக் கூறிய சரத்குமார் அதுமட்டுமின்றி உணர்ச்சிமிக்க சம்பவங்களும் இந்தப் படத்தில் கலந்து வருவதாகத் தெரிவித்தார். காவல்துறையினரின் குடும்பத்தவர்கள் இத்தகைய என்கவுண்டர்களை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்பதை வேந்தன் மிக அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் சிலிர்ப்பைத் தருகின்றது. இதற்காக நான் எனது உடலை கட்டுக்கோப்பாகக் கொண்டுவருகின்றேன் என்றும் அவர் கூறினார்.
கோவா திரைப்பட விழாவில் 5 தமிழ்ப் படங்கள்
தற்போது நடந்து வரும் கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ஐந்து தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்திய பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்யப்படுவதை கௌரவமாக இயக்குனர்கள் கருதுகின்றனர். இந்த வருடம் தமிழ்ப் படம் எதுவும் முதலில் தேர்வாகவில்லை. தேர்வுக்குழு நடுவர் எடிட்டர் பி.லெனின் முயற்சியால் தங்க மீன்கள் மட்டும் கடைசி நேரத்தில் இந்திய பனோரமா பிரிவில் திரையிட தேர்வானது. தமிழில் இருந்து திருமதி தமிழ் போன்ற தேறாத படங்களே அனுப்பப்பட்டிருந்தன.
இது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா என்பதால் இசை பிரிவில் பல படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழில் பக்த மீரா, சிந்து பைரவி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்கள் தேர்வாகியுள்ளன. சிறந்த சுற்றுலா தலத்தை காட்சிப்படுத்திய பிரிவில் மணிரத்னத்தின் ராவணனை தேர்வு செய்துள்ளனர் (இப்படியொரு பிரிவில் தனது படம் தேர்வாகும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார்)
ஆக, ஐந்து படங்கள் கோவா திரைப்பட விழாவில் பங்கேற்கின்றன. 
 நவ‌ம்ப‌ரி‌ல் கம‌ல், டிச‌ம்ப‌ரி‌ல் ர‌ஜி‌னி  

 ரா‌ஜ் டி‌வி‌யி‌ல் வரு‌ம் நவ‌ம்ப‌ர் மாத‌ம் முழுவது‌ம் கம‌லஹாச‌ன் நடி‌த்த பட‌ங்களு‌ம், அதனை‌த் தொட‌ர்‌ந்து டிச‌ம்ப‌ரி‌ல் ர‌ஜி‌னிகா‌ந்‌த் நடி‌‌த்த பட‌ங்களு‌ம் ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளன. ரா‌ஜ் டி‌வி‌யி‌ல் ‌தி‌ங்க‌ள் முத‌ல் வெ‌ள்‌ளி வரை ‌தினமு‌ம் ‌பி‌ற்பக‌ல் 1.30 ம‌ணி‌க்கு ‌சி‌னிமா ‌திரை‌ப்பட‌ங்க‌ள் ஒ‌ளிபர‌ப்பா‌கி வரு‌கிறது. இ‌தி‌ல் ஒ‌வ்வொரு ‌சிற‌ப்பு ‌விழா‌க்க‌ள், ப‌ண்டிகைகளு‌க்கு ஏ‌ற்றபடி இ‌ந்த பட‌ங்க‌ள் ‌திரை‌யிட‌ப்படு‌கி‌ன்றன. அ‌ந்த வகை‌யி‌ல், நவ‌ம்ப‌ர் மாத‌ம் 7-ந் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள். இதையொட்டி நவ‌ம்ப‌ர் மாத‌ம் முழுவது‌ம் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு கமல்ஹாசனின் வெற்றித் திரைப்படங்கள் ராஜ் டிவியில்ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளது. அதுபோல, டிசம்பர் 12-ந் தேதி நடிக‌ர் ரஜினிகா‌ந்‌த் பிறந்தநாள் ஆகு‌ம்.இதையொட்டி டிசம்பர் மாத‌ம் முழுவ‌து‌ம் திங்கள் முதல் வெள்ளி வரை ரஜினிகா‌ந்‌த் நடி‌த்த ஹிட் படங்கள் ஒளிபரப்பாக உ‌ள்ளன.

டிசம்பர் 15ஆம் தேதி 'ஜில்லா' பட பாடல்கள் ரிலீஸ்



விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜில்லா நல்லா கல்லா கட்டும் என்பது கோடம்பாக்க வியாபாரிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. காரணம், இப்போதே கேரளா மற்றும் தமிழகத்தில் வியாபாரம் சுட சுட நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இரண்டு மாநிலங்களிலுமே தற்போது பாதி திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். பட்ஜெட் படங்களை தயாரிப்பதில் வல்லவரான சூப்பர் குட் மூவிஸ் ஆர்.பி.செளத்ரி, இப்படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். புதுமுக இயக்குநர் நேசன் இயக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் முதல் முறையாக விஜயுடன் இணைவதால், அங்கும் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜில்லா படத்தின் பாடல்கள் டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  (டி.என்.எஸ்)  
படம் பார்த்து படம் எடுக்காதீர்கள் ‘‘வாழ்க்கையை பார்த்து படம் எடுங்கள்’’ டைரக்டர்களுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
‘‘படம் பார்த்து படம் எடுக்காதீர்கள். வாழ்க்கையை பார்த்து படம் எடுங்கள்’’ என்று டைரக்டர்களுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார்.
வைரமுத்து பேச்சு
ஆர்யன் ராஜேஷ், சரண்யாநாக் நடித்து, .கே.மைக்கேல் என்ற புதுமுக டைரக்டர் இயக்கியுள்ளஈரவெயில்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். விழாவில் அவர் கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:–‘‘இங்கே பேசிய கேயார், வி.சி.குகநாதன், டி.சிவா, ஞானவேல்ராஜா ஆகியோர் என்னையும், என் எழுத்துக்களையும் புகழ்ந்து சொன்னார்கள். மகிழ்ச்சிதான். ஆனால், இதை எனக்கான பெருமையாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.
ராவணன்
இயக்குனர் மணிரத்னம், ‘ராவணன்படத்தை தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கினார். இந்தியில், குல்சார் பாட்டெழுதினார். தமிழில், நான் எழுதினேன். இந்தியும், தமிழும் அறிந்தவர்கள் இரண்டு பாடல்களையும் கேட்டார்கள். இந்தி பாடலை விட, தமிழ் பாடல் சிறப்பாக இருக்கிறதே என்று என்னிடம் சொன்னார்கள்.‘‘இருக்கலாம். குல்சார் என்னை விட சிறந்த கவிஞர். ஆனால் தமிழ், இந்தியை விட சிறந்த மொழி. அதனால் இருக்கலாம்’’ என்றேன். எனக்கு வரும் பெருமைகளை எல்லாம் தமிழுக்கே காணிக்கை ஆக்குகிறேன்.
கவிதை
உணர்ச்சியின் உச்சம்தான் கவிதை. நாற்பது காட்சிகளில் சொல்வதை நான்கு வரியில் சொல்வதுதான் பாட்டு. ஒருவன் கஞ்சன். அதை எப்படி சொல்வது? ‘எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன். நாய்த்தோலில் வடிகட்டிய கஞ்சன்என்று சொல்லலாம். ஆனால் என் நண்பன் ஒருவன் சொன்னான். ‘‘அவன் மகா கஞ்சன். தேனிலவுக்கு கூட தனியாகத்தான் போய் வந்தான்.’’ இப்படி ஒவ்வொரு உணர்ச்சிக்கும் வெளிப்பாட்டு உச்சம் ஒன்று உண்டு. அந்த உத்தியைத்தான் பல பாடல்களில் நான் கையாளுகிறேன்.‘ஈரவெயில்படத்துக்கு டைரக்டர் மைக்கேல் உருக்கமான காதல் கதை ஒன்றை சொன்னார். கும்பகோணம் திருவிழா கூட்டத்தில் ஒரே ஒருமுறை பார்த்த பெண்ணை சென்னையில் தேடி அலைகிறான், ஒரு இளைஞன். அந்த தேடலே இந்த படத்தில் ஒரு பாடல் ஆகிறது.
உழைப்பு
‘‘சென்னை என்பது கட்டடக் காடு...இதிலே என் மலர் எந்த மலர்’’ என்று அந்த பாடல் தொடங்குகிறது. அந்த பல்லவியின் இறுதியில் அழுத்தமான ஒரு வரியை எழுதியிருக்கிறேன். ‘‘உன்னைக் காணாவிட்டால்கடற்கரையோரக் காக்கைகள் சாப்பிடக் கண்களைப் பிய்த்து எறிவேன்’’ என்று காதலன் பாடுவதாக எழுதியிருக்கிறேன்.பெரிய இயக்குனர்களுக்கு வழங்கும் அதே உழைப்பைத்தான் புதிய இயக்குனர்களுக்கும் வழங்குகிறேன்.
வேண்டுகோள்
இன்று படத்தயாரிப்பு எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வருகிறது. ஆனால் வெற்றியின் விகிதாசாரம் குறைந்து கொண்டே வருகிறது. திரையரங்குகளில் பார்வையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிகிறது. இயக்குனர்கள் நல்ல கதைகளோடு களம் இறங்கினால்தான் வெற்றி காண முடியும்.படம் பார்த்து படம் எடுக்காதீர்கள். வாழ்க்கையை பார்த்து படம் எடுங்கள். உங்கள் ஊரில், உங்கள் தெருவில், அடுத்த வீட்டில் கற்பனைக்கு சிக்காத ஆயிரம் நிஜ கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. உண்மையுள்ள திரைப்படத்தில் உணர்ச்சி இருக்கும். உணர்ச்சி உள்ள திரைப்படம் வெற்றி பெறும்.’’இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
கேயார்
பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் வெளியிட, டைரக்டர்தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் பெற்றுக்கொண்டார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா, டைரக்டர் சரவணன், பட அதிபர் விஜயமுரளி ஆகியோரும் பேசினார்கள். படத்தின் டைரக்டர் மைக்கேல் வரவேற்று பேசினார். தயாரிப்பாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment