உங்கள் ஊரை மிக தெளிவாக பார்க்க ?
GOOGLE EARTH மென்பொருள் மூலம் நமது கணணி முன் அமர்ந்தவாறே உலகின் எந்த ஒரு இடத்திற்கும் வினாடிகளில் பயணிக்கலாம். அதன் மூலம் ஒவ்வொரு நாடுகளின் அமைப்பை நாம் கணணியில் இருந்தவாறே பார்த்து ரசிக்கலாம்.இங்கிருந்தபடியே உங்கள் ஊர் வீதிகளையும், வீடுகளையும் ,கோவில்களையும் கண்டுகளிக்கலாம்.
முன் பின் தெரியாத ஊர்களுக்கு செல்லும் முன் இதன் மூலம் அங்கு பயணித்து விட்டு அதன் பின்னர் செல்வோமானால் பயணம் எளிதாக அமையும். இதற்கு முதலில் இங்கே கிளிக் செய்து GOOGLE EARTH மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இது இலவச மென்பொருள் தான். நிறுவியபின் மென்பொருளை திறக்கவும். அதன் பின் ஒரு window திறக்கும். பெரிதாக பார்க்க விரும்புபவர்கள் படத்தின் மீது click செய்யவும்.
1. நீங்கள் எந்த இடத்தை பார்க்க விரும்புகிறீர்களோ அதன் பெயரை தட்டச்சு செய்து ENTER அழுத்துங்கள். இப்போது அந்த இடத்திற்கு நீங்கள் அழைத்து செல்லப்படுவீர்கள். MOUSE ஐ முன்னும் பின்னும் SCROLL செய்து அருகிலோ அல்லது தூரத்திலோ இருந்து பார்க்கலாம்.
2. நீங்கள் எதாவது இடத்திற்கு பெயர் சூட்ட விரும்பினால் இதை தேர்வு செய்து நீங்கள் விரும்பும் இடத்தில் சுட்டி பெயர் சூட்டலாம்.
3. இதை தேர்வு செய்து சுட்டுவதன் மூலம் இரு ஊர்களுக்கு இடையேயான தூரத்தை அளக்கலாம்.
4. GOOGLE EARTH ன் சிறப்பம்சமே இதில் தான் அடங்கியிருக்கிறது. இதை DRAG செய்து ஒரு தெருவில் நிறுத்தினால் அந்த தெரு இயற்கையாக உள்ளபடியே தோற்றமளிக்கும். அனைத்து இடங்களையும் இது போல பார்வையிட தற்போது வசதி இல்லை என்றாலும் அனேக முக்கிய நகரங்களை பார்வையிட முடிகிறது.
உங்களது கணணியை வேகப்படுத்துவதற்கு
இன்றைய தொழில்நுட்ப உலகில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கணணியை பயன்படுத்துகின்றனர்.
நம்முடைய கணணிகள் வேகமாக இயங்கினால் மட்டுமே நாம் தேடும் தகவல்களை விரைவில் பெறலாம்.
சில கணணிகள் ON ஆவதற்கே பல மணி நேரம் எடுத்து கொள்ளும். அதனாலேயே கணணி வைத்திருக்கும் சிலர் அந்த கணணியை தொடுவதே இல்லை.
ஆனால் இனி அந்த கவலை இல்லை. இதையெல்லாம் போக்கிட ஒரு அழகிய மென்பொருள் ஒன்று உள்ளது. அந்த அழகிய மென்பொருளின் பெயர் SPEED UP MY PC.
இதை உங்கள் கணணியில் நிறுவினால் மெதுவான கணணியும் வேகம் பெறும்.
இதயத்துடிப்பின் அதிர்வால் கணணியை இயக்கும் கைப்பட்டி!
இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பின் அதிர்வால் கையடக்க தொலைபேசி மற்றும் கணணியை இயக்கும் கருவி கனடாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் கைவிரல் ரேகைகள் போன்று இதயத் துடிப்பின் வேகம் மற்றும் அதிர்வுகள் வேறுபட்டவை. மணிக்கட்டில் கட்டும் கைப்பட்டை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இக்கருவி “நைமி ரிஸ்ட் பேண்ட்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் இதயத் துடிப்பின் அதிர்வை அறிய வோல்ட் மீட்டர் மற்றும் ஹொட் ஐடி பொருத்தப்பட்டுள்ளது. கனடாவின் பயோனிம் நிறுவனம் இக்கருவியின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
இதைக் கொண்டு காரைத் திறப்பது ஒன்லைன் சொப்பிங்கில் பணம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்ய முடியும். இக்கருவியால், கையடக்க தொலைபேசி, கணணி மற்றும் பிற இலத்திரனியல் கருவிகளின் கடவுச் சொற்கள் ஆகவும் பயன்படுத்தலாம். இதை அணிந்திருப்பவர், கையடக்க தொலைபேசி, கணணி, மடிக் கணணி அருகில் சென்றால், அவை தானாக இயங்க ஆரம்பிக்கும். ஸ்மாட் டிவியை இயக்கவும், நிறுத்தவும் முடியும்.
No comments:
Post a Comment