செந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]



ஏரிக்கரை - ஏரிகரை

ஏரிகரை என்பது சரியாகும்ஏரிக்கரை என்று மிக வேண்டியதுஏரிகரை என்று இயல்பாகவருவது விதிவிலக்காகும்.. மடுக்கரைகுளக்கரைவழிக்கரை ஆகிய  சொற்களில்வல்லினம் மிகுத்தே எழுத வேண்தும்.

பெண்ணையார் - பெண்ணையாறு

பெண்ணையார்பாலார்அடையார் என்பன பிழைகளாம்பெண்ணையாறுபாலாறு,அடையாறு என்பனவே சரியாகும்.

முப்பத்தி மூன்று - முப்பத்து மூன்று

முப்பத்தி மூன்று என்பது பிழைமுப்பத்து மூன்று என்பதே சரிமுன்னூறு என்பது பிழை,முந்நூறு என்பதே சரிஐநூறு என்பது பிழைஐந்நூறு என்பதே சரிஎட்டு நூறு எனல்வேண்டாஎண்ணூறு என்கபன்னிரெண்டு என்பது பிழைபன்னிரண்டு.

பெரும் ஓசை - பேரோசை

பெரும் ஓசை என்பது பிழைபேரோசை என்பதே சரிமுப்பெரும் விழா என்பது பிழை,முப்பெருவிழா என்பதே சரி.

ம் நாள் - 5 ஆம் நாள்

ம் நாள் என்று எழுதுவது சரியில்லை. 5ஆம் நாள் என்பதே சரியாகும். 6வது ஆண்டுஎன்று எழுதுவது சரியில்லை, 6 ஆவது ஆண்டு என்பதே சரியாகும்.

சிலவு - செலவு

பலபேர் சிலவு என்று எழுதுகின்றனர்,(செல்லுதல் - செலவுஎனவே செலவு என்று எழுதுக.

சுதந்திரம் - சுதந்தரம்

சுதந்திரம் என்று எழுதாதீர்சுதந்தரம் என்றே எழுதுகசுந்திரமூர்த்திசுந்திரராமன் ஆகியசொற்களைச் சுந்தரமூர்த்திசுந்தரராமன் என்றே எழுதுக.

பட்டணம் - பட்டினம்

பட்டணம்,  பட்டினம் இவை இரண்டும் சரியான சொற்களேபட்டணம் நகரத்தைக்குறிக்கும்பட்டினம் கடற்கரை ஊரைக் குறிக்கும். (சென்னைப் பட்டணம்காவிரிப்பூம்பட்டினம்

கட்டிடம் - கட்டடம்


கட்டு 10 இடம் ஸ்ரீ கட்டிடம் (இடப்பெயர்); கட்டுகின்ற இடத்தையும் கட்டிய வீட்டையும்குறிக்கும்கட்டு 10 அடம் ஸ்ரீ கட்டடம் (தொழிற்பெயர் ஒற்றடம் என்பதில் வருவது போல் அடம் தொழிற்பெயர் ஈறுகட்டும் தொழிலைக் குறிக்கும்
              
நன்றி:கவிஞர் கி.பாரதிதாசன் 
            ( அடுத்தவாரம்  தொடரும்)

No comments:

Post a Comment