தொழிநுட்ப செய்திகள்

இறந்த நேரத்தை துல்லியமாக காட்டும் கடிகாரம்!!

விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஆனால் தற்போதுள்ள முறையில் இறந்த நேரம் உத்தேசமாகவே ‌கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட உதவும் வகையில் ஒரு கடிகாரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில் இறந்தவரின் உடலில் ஏற்படும் பக்டீரியாக்களின் மாற்றத்தை கொண்டு அவர் இறந்த நேரத்தை துல்லியமாக அறிய முடியும்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கடிகாரத்தில் அதி நவீன தொழில் நுட்பம் மூலம் ஜீன்களை பகுத்தாய்வு செய்ய முடியும் என்றும் அதன் மூலம் 48 மணி நேரத்தில் இருந்து நான்கு நாட்கள் வரையிலான கால கட்டத்திற்குள் இறந்த நேரத்தை கண்டறிய முடியும் எனவும் கூறினார்.

மனித ரோபோவை தயாரித்து அமெரிக்கவுக்கு சீனா சவால்!!


robotஅமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையமான நாசாவுக்கு போட்டியாக சீனா ஒரு மனித ரோபோவை தயாரித்துள்ளது.
ஹொங்ஹொங் பல்கலையில் கடந்த வாரம் ஹுயுமானாய்டு ரோபோஅட்லஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ரோபோ மனிதர்களைப் போன்று நடக்கவும் அனைத்து பணிகளையும் செய்யும் விதத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆறடி உயரமும் 150 கிலோ எடையும் உள்ள இந்த அட்லஸ் ரோபோ அலுமினியம் மற்றும் டைட்டானியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது

பதின்ம வயதினருக்கான கட்டுப்பாடுகளை பேஸ்புக் நீக்கியது!!

Facebook-Under-Age-13பதின்ம வயதினர் தங்கள் கருத்துகளை வெளியிட விதித்திருந்த கட்டுப்பாடுகளை பேஸ்புக் இணையதளம் நீக்கியுள்ளது. இதன் மூலம் அனைவரும் பார்க்கும் வகையில் பதின்ம வயதினர் கருத்துகளை வெளியிட முடியும்.
இதற்கு முன்னர் நண்பர்களுக்குள் மட்டுமே கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் 13 முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு பேஸ்புக் கட்டுப்பாடு விதித்திருந்தது.

இளைஞர்களிடம் பேஸ்புக் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் ஏற்கெனவே யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை அனைவரின் பார்வைக்கும் வெளியிடும் வகையிலான வசதி உள்ளது.

பேஸ்புக்கிலிருந்து காணாமற் போகும் தேடல் வசதி!!


உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வந்தது.
இருந்தும் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில அம்சங்களை நீக்கிவிடுவதுண்டு. இதன் ஒரு அங்கமாக கடந்த டிசம்பர் மாதம் நண்பர்களை தேடும்போது அவர்களின் புரபைல் பெயர்களை காட்டாதவாறு மாற்றம் செய்யும் வசதியை நிறுத்தியிருந்தது.

அதே போல தற்போது இந்த வசதியினை (Search Privacy Setting) முற்றிலுமாக நிறுத்தப்போவதாக கடந்த வியாழக்கிழமை பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் விளையாட்டு !!


game
பெரும்பாலான நபர்களுக்கு கணணி விளையாட்டு விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக Grand Theft Auto(GTA 5) என்ற விளையாட்டு என்றால் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லலாம்.
தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் இந்த விளையாட்டு பதிப்பின் சிறப்பம்சம் டிஜிட்டல் முறையில் வந்துள்ளது. மேலும் பின்னணி இசையுடன் கூடிய தொழில்நுட்படத்தில் வந்துள்ளதால் சந்தையை கலக்கி கொண்டுள்ளதாம்.

ரொக் ஸ்டார் வெளியிட்டுள்ள இந்த விளையாட்டை Xbox 360 மற்றும் PlayStation 3 ஆகியவற்றில் விளையாடலாம்.

No comments:

Post a Comment