சிந்தனைஒளி


யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா?
 இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

1 comment:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Thursday, October 17, 2013

    [1]சந்தம் என்ற சொல் ஒலியின் வண்ணம்,இசை நயம், அழகு[the tune of a song] என்று பொருள்.ஆகவே சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்?

    புறநானுறு 4,"களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
    நுதி மழுங்கிய வெண் கோட்டான்" என்கிறது.

    அதாவது யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின என்கிறது.ஆகவே தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்?

    ஆனால்,சொந்தத்தை,பந்தத்தை நம்பி யாரும் இருக்கலாமா? வைரமுத்துவை கேட்டு பார்ப்போமா?

    "அண்ணன் என்ன தம்பி என்ன
    சொந்தம் என்ன பந்தம் என்ன
    சொல்லடி எனக்கு பதிலை
    நன்றி கொன்ற உள்ளங்களை
    கண்டு கண்டு வெந்த பின்பு
    என்னடி எனக்கு வேலை
    நம்பி நம்பி வெம்பி வெம்பி
    ஒன்றும் இல்லை என்ற பின்பு
    உறவு கிடக்கு போடி
    இந்த உண்மையை கண்டவன் ஞானி"
    [படம்:தர்மதுரை/வைரமுத்து ]

    [2]விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. விட்டுக் கொடுத்து போவதுதான் வாழ்க்கை.அதை நாம் என்றும் புரிய வேண்டும் குறிப்பாக கணவன் மனைவி.

    நல்ல மாற்று சிந்தனைக்கான தேடலை குழந்தை வெளிப்படுத் தினால் தாராளமாகத் தட்டிக் கொடுங்கள். இப்படி வளர்க்கப்படும் குழந்தை பள்ளிக் காலத்தில் மற்றவர்களில் இருந்து தன்னை தனித்து அடையாளப்படுத்திக் கொள்கிறது. உயர்கல்வியை தேர்வு செய்வதும் அதில் தனக்கான இடத்தை உருவாக்குவதும் அதற்கு எளிதாகிறது. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க அதன் தனித்திறன் உதவுகிறது. அதாவது எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் தட்டிக் கொடுங்கள். தைரியம் கொடுங்கள்.

    காத‌ல‌ர்க‌ள்,த‌ம்ப‌திக‌ள் த‌ங்களு‌க்கு‌ள் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசுவதுதா‌ன் ‌மிகவு‌ம் அவ‌சியமா‌கிறது. இ‌ல்லை எ‌ன்றா‌ல் ‌‌சி‌றிய ‌விஷய‌ங்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டு அது மோதலாக மாறு‌ம்.அதாவது புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ஆகவே மனம் விட்டு பேசுங்கள் .ஏன் என்றால், தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம் .

    ReplyDelete