'கண்ணா லட்டு திண்ண ஆசையா' என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு அதே கூட்டணி தற்போது மற்றொரு படத்தில் இணைந்துள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது, சந்தானம், விஷாகா, விடிவி கணேஷ் என இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் தான் 'வாலிப ராஜா'.
கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சாய்கோகுல் ராம்நாத் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராக நடிக்கிறார். விஷாக மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாக நடிக்கிறார். சேது டிசைனராக நடிக்கிறார். இவர்களுடன் மும்பை நடிகை நுஷ்ரத்தும் நடிக்கிறார்.
வாலிப ராஜா என்பது இப்படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரப் பெயர். மனநல துறையில் சென்னையில் பிரபலமான மருத்துவராக, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் இப்படத்தில் நடித்துள்ளதால், அவருடைய கதாபாத்திர பெயரையே படத்தின் டைடிலாகவும் இயக்குநர் தேர்வு செய்துவிட்டாராம்.
படம் பற்றி கூறிய இயக்குநர் சாய்கோகுல் ராம்நாத், "வாலிப ராஜா என்கிற பெயரை வைத்து இது வாலிபம், கிளுகிளுப்பு சார்ந்த கதை என்று யாரும் யூகம் செய்து விட வேண்டாம். இது ஒரு முழு நீளகுடும்பச் சித்திரம். அதாவது ஃபேமிலி எண்டெர்டய்னர்." என்றவர், இப்படம் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படியான கலகலப்பான படமாகவும் இருக்கும் என்று உத்தரவாதத்தையும் கொடுக்கிறார்.
தற்போது சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் பாதிப்படத்தை முடித்திருக்கும் இயக்குநர் மீதிப்படத்தை முடிப்பதற்காக, தனது வாலிப ராஜா குழுவினருடன் மதுரை மற்றும் குற்றாலத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
Theebam.com: ��→ இன்றைய செய்திகள்- ஞாயிறு -திரை/ / பாடல் திங்கள்-கவிதை / கதை செவ்வாய்- ஆன்மீகம் புதன் - மீள்பதிவு /தொழிநுட்பம் வியாழன்- உடல் நலம் / நடனம் வெள்ளி - சமூகம் சனி-நகைச்சுவை/கடிதம்/அறிவியல்
மேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.
0 comments:
Post a Comment